அன்பார்ந்த உழவர் பெருமக்களே! ஜனநாயக சக்திகளே!
திட்டமிட்டப்படி இன்று (ஆகஸ்ட் 13) தஞ்சையில் உழவர் உரிமை வென்றிடு! காவி பாசிசம் வீழ்த்திடு! என்ற தலைப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக பேரணி, மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அமைப்பு பிரச்சாரம் பேருந்து, பகுதி என தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மக்கள் தங்கள் மேலான ஆதரவை வழங்கியதோடு மட்டுமல்லாமல் நிதி கொடுத்தும் உதவியுள்ளார்கள். பிரச்சாரங்களில் தடையேற்படுத்த முயன்ற சங்கிகளுக்கு எதிராக மக்கள் நமக்கு ஆதரவாக நின்றுள்ளார்கள்.
இவையனைத்தும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவையே காட்டுகிறது. பாசிஸ்டுகள் விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் நாம் அனைவரையும் ஒன்றிணைத்து போராட வேண்டிய அவசியம் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக தான் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்தும் பேரணி, மாநாட்டில் கலந்துக்கொள்ள அறைகூவி அழைக்கிறோம்.
இதில் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்கு நேரலையில் ஒளிபரப்படும் பேரணி காணொளிகளை வெளியிடுகிறோம்.
பாருங்கள்…. பகிருங்கள்….