மார்ச் 26 அன்று திருச்சியில் நடந்த மக்கள் அதிகாரத்தின் முதல் மாநில மாநாட்டை வாழ்த்தி CPI (ML) NEW DEMOCRACY குழுவினரின், விவசாய அமைப்பு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.
அன்புள்ள தோழர்களே,
எங்கள் அமைப்புகளின் சார்பாக, அகில இந்திய கிசான் மஸ்தூர் சபை (AIKMS) சார்பாக, நீங்கள் இன்று ஏற்பாடு செய்துள்ள மக்கள் அதிகாரம் முதல் மாநாட்டு செய்தியை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
தற்போது பாசிச தாக்குதல் படிப்படியாக வளர்ந்து வருகிறது. மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு மக்கள் மீது பாசிச அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது. காஷ்மீர் மக்கள் மீது பாசிச ஆளும் சக்திகள் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வரும் நெருக்கடியான, மிக முக்கியமான நேரம் இது. ஆளும் RSS-BJP ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு எதிரான உளவியல் போரை ‘தி காஷ்மீர் கோப்புகள்’ படத்தின் மூலம் நாடு முழுக்க தூண்டி வருகிறது.
வர்க்கப் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களைக் கட்டியெழுப்புவதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தோழமை அமைப்புகளாகிய நாம் இந்தப் பணிகளில் கைகோர்த்து நடக்க வேண்டியது காலத்தின் தேவை. வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் போன்ற மக்கள் இயக்கங்கள்தான் முக்கியமாக, பாசிச சக்திகளுக்கு சவாலாக உள்ளன என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறோம். இது நம் அனைவருக்கும் புரட்சிகர உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறோம்.
புரட்சிகர வாழ்த்துகளுடன்,
தோழர் இ.பிரபாகர்
மாநில, தலைவர்
தோழர் எம். துர்காபிரசாத்
AIKMS, மாநில செயற்குழு, ஆந்திர பிரதேசம்
26-3-2022,
விஜயவாடா.
PH. 9490700715, 9440545533.