த்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில், ஆகஸ்ட் 2013 ல் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மற்றும் 93 பேர் காயமடைந்தனர். 43,000 பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

இக்கலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஏழு நிருபர்களும் கூட கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சைனி உள்ளிட்ட 11 பேருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து முசாபர்நகர் உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கலவரத்திற்கான காரணம் என்ன?

இந்த மாவட்டத்தில் உள்ள கவால் என்ற கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை கேலி , கிண்டல் செய்ததாக கூறி ஷாநாவாஸ் என்ற முஸ்லிமை இரண்டு இந்து இளைஞர்கள் அடித்துக் கொன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாநாவாஸ்-ன் உறவினர்கள் அந்த இரண்டு இந்து இளைஞர்களை சுட்டுக் கொன்றனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் கலவரம் பற்றி கொண்டது. அதாவது மதக் கலவரங்கள் மூலம் மதரீதியாக மக்களை பிளவு படுத்தி இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக – தக்க வைத்துக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாதிகள் கலவரம் நெருப்பை பற்றி படர வைத்தனர்.

கலவரத்திற்குப் பரிசு:  எம்எல்ஏ பதவி!

இந்தக் கலவரத்தின் போது ஊக்கமுடன் களத்தில் செயல்பட்டதால் (அதாவது 60 பேர் உயிரிழக்கவும் 40,000 பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழக்கவும் வெறித்தனமாக செயல்பட்டதால்) 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவில் இவருக்கு சீட்டு வழங்கப்பட்டது. கலவரத்தால் மத வெறியூட்டப்பட்ட மக்களின் வாக்குகளில் சைனி வெற்றி பெற்று எம். எல். ஏ. ஆகிவிட்டார்.

மீண்டும் எம்எல்ஏ:
சைனியின் வாய்க்கொழுப்பிற்கு கிடைத்த அடுத்த பரிசு!

பாஜகவின் எம்எல்ஏ வாக இருந்த விக்ரம் சைனி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபோது “காஷ்மீரின் அழகிய பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதால் இப்பொழுது பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளதாக” கூறினார்.

“இந்தியாவில் பாதுகாப்பின்றி இருப்பதாக யாராவது கருதினால், அவர்களை வெடிவைத்துக் கொல்ல வேண்டும்” என்றார்.

“இந்திய நாடு இந்துஸ்தான் என்று அழைக்கப்படுவதால் அது இந்துக்களுக்கு தான் சொந்தமானது” என்றார்.

“பசுக்களை கொல்பவர்களின் கை கால்களை உடைப்போம்” என்று விசம் கக்கினார்.

இதையும் படியுங்கள்: பாஜகவினரின் கலவர முயற்சியை முறியடித்த மக்கள்!

இப்படிப்பட்ட தனது கொழுப்பெடுத்த பேச்சின் மூலம் இந்து மத வெறியர்களின் கவனத்தை கவர்ந்த வண்ணம் இருந்தார். எனவே பாஜக சார்பாக இவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. ஆக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சைனியும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.

சங்கிகளின் கலவரப் பாதை!

ஒற்றுமையுடன் இணக்கமாக வாழும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதற்கு விசக்கருத்துக்களை தொடர்ச்சியாக பேசுவது மூலம் மக்களை கலவரத்திற்கு தயார் செய்கிறார்கள். பிறகு கலவரத்தை தூண்ட பொருத்தமான சம்பவத்திற்காக காத்திருக்கிறார்கள். அல்லது அந்த சம்பவத்தை இவர்களே உருவாக்குகிறார்கள்.

இதன் மூலம் மக்களை மதரீதியாக மோத விடுவது என்ற வழிமுறை மூலம் இந்துக்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வது என்பதை பிஜேபி கும்பல் தங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்று வருகின்றனர்.

மதவெறி மயக்கத்தில் இருந்து மக்கள் விடுபடுவார்களா? 

இந்த விக்ரம் சைனி இரண்டாவது முறையாக எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டு பிரச்சாரத்திற்கு சென்றிருந்த பொழுது(2022-ல்), தனது சொந்தத் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். இந்த வீடியோ மக்கள் மத்தியில் அப்பொழுது “வைரலாக ” பரவி வந்தது.

எம்.எல்.ஏ விக்ரம் சைனியை ஓடவிட்ட மக்கள்

பார்ப்பன பயங்கரவாதிகளின் பிடியில் தான் உத்திரப் பிரதேசம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் பிஜேபி அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளது. அவ்வளவு ஏன் இந்த விக்ரம் சைனி கூட இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருக்கிறார்.

இவ்வளவு செல்வாக்குள்ள மாநிலத்தில், தனது சொந்த தொகுதியில், பார்ப்பன பயங்கரவாதி விக்ரம் சைனி விரட்டியடிக்கப்பட்டுள்ளது என்பது எதைக் காட்டுகிறது? எல்லா மக்களையும் எல்லா காலத்திலும் பார்ப்பன பயங்கரவாதிகளால் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், வரும் காலத்தில், அந்த மாநிலம் முழுவதும் பரவும்; இந்தியா முழுவதும் பரவும். அப்பொழுது, இந்த பார்ப்பன பயங்கரவாதத்திற்கு கல்லறை கட்டப்படும்.

அந்த நாளை விரைவில் கொண்டு வருவதற்காக நாம் வீரியத்துடன் வேலை செய்வோம்.

  • பாலன்

செய்தி ஆதாரம்: thewire.in & ndtv.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here