ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று நடந்தது. ஹவாமகால் சட்டமன்றத் தொகுதியில் இருந்து BJPன் சார்பாக MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பால்முகுந்த் ஆச்சாரியா டிசம்பர் 4ஆம் தேதி அன்றே, அதாவது, சட்டசபையில் எம்.எல்.ஏ. வாக பதவியை ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே தனது பார்ப்பன பாசிச நடவடிக்கையை தொடங்கி விட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மறுநாளே ஹவாமகால் தொகுதியில் உள்ள கறிக்கடைகள் உள்ள இடங்களுக்குச் சென்று கறிக்கடைகளை மூட வேண்டும் என்று பால்முகுந்த அராஜகம் செய்துள்ளார். (இங்கு கறிக்கடை வைத்துள்ளவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்) மேலும் அசைவம் ஹோட்டல்களுக்கும் சென்று அவற்றையும் மூட வேண்டும் என்று குதியாட்டம் போட்டுள்ளார்.

அரசு அதிகாரிகளையும் போலீசையும் கறிக்கடைகளை மூடச் சொல்லி விரட்டி உள்ளார். அரசு அதிகாரிகள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பாசிஸ்டின் அலப்பறைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரியிடமும் இதே பாணியில் அதிகாரத் திமிருடன் பேசியுள்ளார் ஆச்சார்யா. அதற்கு அந்த போலீஸ் அதிகாரி நீங்கள் எம்.எல்.ஏ தானே எழுத்துப்பூர்வமான உத்தரவை கொடுங்கள் கடைகளை மூடச் சொல்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு சங்கியால் எதுவும் பதில் பேச முடியவில்லை. அந்த அதிகாரி இடம் இருந்து நைசாக நழுவி விட்டார் பால்முகுந் ஆச்சார்யா.

இந்த பாசிஸ்டின் அலப்பறைகள் குறித்த வீடியோக்கள் வைரலான நிலையில் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் பிறகு “எனக்கு ரோட்டில் சென்ற வாகனங்களின் புகை , ரோட்டில் உள்ள தூசு காரணமாக தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. எனவேதான் நான் பேசும் பொழுது கத்திப் பேசுவது போல் ஆகிவிட்டது. நான் வேண்டுமென்று அப்படி பேசவில்லை என்று”

இந்த நிகழ்வுக்கு விளக்கெண்ணைத் தனமான விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார் திருவாளர் பாசிஸ்ட் பால்முகுந்த் ஆச்சார்யா.

இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் தான் சங்கிகள் அயோக்கியத்தனங்களை செய்வார்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது.

கறிக்கடைகளை மூடச் சொல்லி அலப்பறை செய்த அதே நாளில் சுராஜ்மல் என்ற தலித் ஒருவரின் நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கவும் சென்றுள்ளார் பால்முகுந்த் ஆச்சார்யா.

தனது நிலத்தை ஆக்கிரமிப்பதை தட்டிக்கேட்ட தலித் சுராஜ்மல் மீது காரித்துப்பி, மிரட்டி, தாக்கியுள்ளது குறித்து பால்முகுந்த் ஆச்சாரியா மீது வழக்கு கொடுத்ததற்கு வழக்கை பதிவு செய்ய முடியாது என்று காவல்துறை மறுத்துவிட்டது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு சென்றதனால் சங்கி எம்எல்ஏ மீது நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பார்ப்பன மத வெறியன் முகுந்த் ஆச்சார்யா ஒரு சாமியார் என்பது கூடுதல் தகவல்.

பாஜக– சங்கரிவார் கும்பல் என்பது தன் இயல்பிலேயே இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பில் ஊறித்திளைப்பது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடனேயே சட்டசபைக்கு கூட செல்லாமல் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட வெறி கொண்டவர்களாக இருக்க வேண்டும்?

பாஜக நல்ல கட்சி. அவர்கள் பாசிஸ்டுகள் அல்ல; இந்தியாவை முன்னேற்ற வந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் ஆர் எஸ் எஸ் — பாஜக ஆதரவாளர்களே,

பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் அரைகுறை ஜனநாயகமாவது இருக்குமா? மக்களின் வாழ்க்கை என்னவாகும்? சிந்தியுங்கள்.

பாலன்

செய்தி ஆதாரம்: the wire

https://m.thewire.in/article/law/rajasthan-fir-against-hawa-mahal-mla-balmukunt-acharya-for-alleged-assault-on-sc-community-member#:~:text=Law,SC%20Community%20Member

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here