கோடிக்கணக்கான உழைக்கும் மக்களிடம் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கு யாரிடம் நிதி வசூலிக்கின்றன? ஊர் திருவிழாவுக்கு வசூலிப்பதுபோல வீடுவீடாக சென்றா நிதி திரட்டுகிறார்கள்? அப்படியே வந்தாலும் அள்ளித்தரும் நிலையிலா கோடிக்கணக்கான மக்களின் வாழ்நிலை உள்ளது? பின்னர் எப்படி ஓட்டுக்கட்சிகளுக்கு பணம் வருகிறது? இந்த கேள்விகளுக்கு விடை காண்போம்.

நம் நாட்டிலும், உலகெங்கும் கோடிகளில் பணத்தை குவிப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகள்தான். இந்த கொரோனோ காலத்திலும் கூட அவர்களின் சொத்து மதிப்புதான் பெருகியுள்ளது. தேர்தல் முடிந்து ஆட்சியை பிடித்தவுடன் அரசாங்கங்கள் அறிவிக்கும் பெரும்பான்மையான திட்டங்களும் உள்ளூர், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானதாகத்தான் இருக்கிறது. எனவேதான் இயல்பிலேயே கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளின் புரவலர்களாக இருக்கின்றனர்.

Electoral Bonds | BJP Got Rs 2,555 Crore From Electoral Bonds In 2019-20,  76% Of Total

அரசின் கொள்கை, திட்டங்களால் நேரடியாக பலனடையும் பில்கேட்ஸ், அம்பானி, அதானிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி செலவு செய்வது மக்களுக்கு தெரிந்தால் ஆபத்து என பாசிஸ்ட் மோடி வகையறாக்கள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்துள்ளனர். அதுதான் தேர்தல் பத்திரங்கள். எந்த ஒரு கார்ப்பரேட் முதலையும் அல்லது கிரிமினல் மாபியாவும் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு அனுப்பலாம். இதில் யார் பணம் தந்தது என்பது வெளியில் தெரியாது. அதே நேரம் கட்சிகளுக்கு வந்த நன்கொடை வரவை மட்டும் அரசுக்கு கணக்கு காட்ட முடியும். இப்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் கருப்பு வெள்ளையாகி, லஞ்ச ஊழல் என்பது சட்டபூர்வ பரிவர்த்தனையாகி விடுகிறது. இப்படி எந்த கட்சிகள் எவ்வளவு கோடிகளை கடந்த தேர்தலின்போது வசூலித்தன என்பதை கீழே தந்துள்ளோம்.

source: the quint

இப்படி யாரிடம் எவ்வளவு வாங்கினோம் என்பதையே வெளிப்படையாக சொல்ல முடியாமால் தேர்தல் பத்திரங்கள் மூலம் கொல்லைப்புற வழியில் கோடிகளை பெற்று ஆட்சியை பிடித்தவர்களின் ஆட்சி யாருக்கானதாக இருக்கும்? வாக்களித்தவர்களுக்கா விசுவாசத்தை காட்டுவார்கள்? நீங்களே தீர்மானியுங்கள்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2019-20 நிதியாண்டில் 2,555 கோடிகளை பா... பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 76 சதவீதமாகும்.

2019-20 நிதியாண்டில் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பான ₹3,355 கோடிகளில் பா.ஜ.க.-வுக்கு மட்டும் ₹2,555 கோடிகள் கார்போரேட்டுகளால் அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளன.

2019-20 நிதியாண்டில் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பில் பா.ஜ.க. 76 சதவீதத்தை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்திலிருந்து NDTV-க்கு கிடைத்த ஆவணங்களின் படி தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பான ₹3,355 கோடிகளில் பா.ஜ.க. மட்டும் ₹2,555 கோடிகளைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சதவீதம் 75 அதிகம் ஆகும். அதேகாலகட்டத்தில் பா.ஜ.க. -வின் அரசியல் எதிரியான காங்கிரஸ் கட்சியின் பங்கு 17 சதவீதம் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ₹383 கோடிகளை தேர்தல் பத்திரங்களின் மூலமாக பெற்றது. ஆனால் 2019-20 நிதியாண்டில் அது ₹318 கோடிகளையே பெற்றுள்ளது. இது மொத்த மதிப்பில் 9 சதவீதம் ஆகும்.

பிற எதிர்கட்சிகளான மம்தா பானர்ஜீயின் திரிணமூல் காங்கிரஸ் ₹100.46 கோடிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ₹29.25 கோடிகளும், சிவசேனா ₹41 கோடிகளும், தி.மு.க. ₹45 கோடிகளும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் ₹2.5 கோடிகளும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ₹18 கோடிகளும் திரட்டியுள்ளன.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019 நிதியாண்டில் பா.ஜ.க.-வின் வருமானம் அதன் எதிரிகளான ஐந்து பிரதான எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானத்தைவிட இருமடங்காக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பா.ஜ.க. மட்டுமே 68 சதவீத தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வருவதற்கு முன்பிருந்தே பா.ஜ.க.-வின் வருமானம் மற்ற கட்சிகளை விட அதிகமாகவே இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017-18 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தனிநபர்களும், கார்போரேட்டுகளும், அந்நிய முதலாளிகளும் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக அதேசமயம் அனாமதேயமாக நிதி வழங்க வழிவகை செய்கிறது.

ஒட்டுமொத்தமாக, தேர்தல் பத்திரங்களுக்குப் பிறகு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இம்முறை அறிமுகப்படுத்துவதற்கு முன் காங்கிரஸ் கட்சி, “இது ஊழலை சட்டபூர்வமாக்குகிறது” என்று சொன்னது. ஆனால் அரசோ இது கட்சிகளின் வரவு செலவுகளை தாக்கல் செய்யக்கோருவதன்மூலம் வெளிப்படைத்தன்மையை கொண்டுள்ளது என்று சொன்னது.

2 COMMENTS

  1. கார்ப்பரேட்டிடம் நிதி வாங்கி கட்சியை வளர்க்கும் கட்சிகள் யாருக்கு வேலை செய்யும் கார்ப்பரேட்டுக்கு தான் வேலை செய்யும்.
    ஏழை மக்களுக்கு எதிரான இந்த கட்சிகளை தோல் உரித்து காட்டும் மக்கள் அதிகாரம் இணையதள சேவைக்கு என் வாழ்த்துகளும். நன்றிகளும்……. தொடரட்டும் இப்பணி

  2. பட்டியலில் அதிமுக இல்லையே என்னாயிற்று?…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here