சென்னையில்அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இடத்தில் அங்கு இருந்த விசிக – வினரை பாஜகவினர் தாக்கியுள்ளனர்.
அம்பேத்கருக்கு மரியாதை செய்வதாக நாடகமாடும் இந்த பாஜக கயவர்கள் 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை அம்பேத்கர் தேசிய விருதை யாருக்கும் வழங்காமல் முடக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் “நிர்வாக காரணங்களுக்காக இந்த ஆண்டு அம்பேத்கர் விருது வழங்கப்படவில்லை ” என்று கூறிவருகிறார்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ‘நாங்கள் இந்த விருது வழங்கப் போகிறோம்; விருதுக்காக தங்களின் பெயரை விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்’ என்று விளம்பரம் செய்வதற்கு மட்டும் இவர்கள் மறந்துவிடவில்லை. 2011 மற்றும் 2022ஆம் ஆண்டு விருது குறித்து இவர்கள் செய்த விளம்பர செலவு தலா ரூ 50 லட்சம். விருது கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டு கொடுக்கப் போவது போல விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு லட்சத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்.
அம்பேத்கர் விருதை முடக்கி வைத்த கயவர்கள் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதன் நோக்கம் என்ன?
அம்பேத்கர் மீது மிகப்பெரும் மரியாதை வைத்துள்ளோம் என்பது போல வேடமிட்டு தலித் மக்களை ஏமாற்றி அவர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அதே சமயம் அம்பேத்கரின் பேச்சுக்கள் எழுத்துக்கள் மற்றும் அவரின் நடைமுறைகளை மக்களிடம் இருட்டடிப்பு செய்துவிட வேண்டும் என்பதும் பாஜகவினரின் நோக்கம்.
அதனால்தான் அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதியன்று மக்கள் அம்பேத்கரைப் பற்றி பேசுவது நினைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தேதியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்கள். டிசம்பர் 6ஐ வெற்றித் திருநாள் என்றும் மகிழ்ச்சிக்குரிய நாள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.
இப்படி இரட்டை வேடம் போடும் காவி பாசிஸ்ட்டுகளான பாஜக வினரை இந்திய மக்கள் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் உள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் காவி பாசிஸ்டுகளை வேரறுக்க வேண்டும்.
பாலன்