பேராசிரியர் சாய்பாபாவை
நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!


ஆர் எஸ் எஸ் காவி பாசிச பயங்கரவாதிகள் பல்வேறு படுகொலைகளை நடத்தினாலும், இனப் படுகொலை செய்வதற்கு ஹரித்துவார் மாநாட்டில் நேரடியாக அறைகூவல் விட்டாலும் ஆர்எஸ்எஸ் பிடியில் சிக்கியுள்ள அரசு கட்டமைப்பு அவர்களை முழுமையாக பாதுகாக்கிறது.

ஆனால் நாட்டின் மீது உண்மையிலேயே பற்று கொண்ட கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள், ஊடகவியலாளர்களை கொடும் கரத்தை நீட்டி அடக்கி ஒடுக்குகிறது பாசிச பாஜக அரசு.

பேராசிரியர் சாய்பாபா 90 சதவீதத்திற்கு மேல் உடல் நிலை பாதிப்பு கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி. இவரை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக புனையப்பட்ட வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது பாசிச பாஜக அரசு.

கடந்த ஆண்டு கொரானா நோயினால் தாக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா மீண்டும் இரண்டாவது முறை கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே அவருக்கு இருதய நோய் உள்ளதால் இரண்டாவது முறை கொரானா தொற்று அவரது உயிரைக் குடித்து விடும் அபாயம் உள்ளது என்று அவரது துணைவியார் வசந்தா முன்வைத்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை மட்டுமே அவர்களின் உயிரை குடிப்பதற்கு போதுமானதாக இருக்கிறது.

பாதிரியார் ஸ்டேன் சாமி சிறைக் கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்தார்.
தோழர் வரவர ராவ் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நிலை பலவீனமாகி போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் பேராசிரியர்.சாய்பாபாவை இணைக்கப் பார்க்கிறது பாசிச பாஜக அரசு. உயிர் விலை மதிப்பற்றது என்று பொதுவாக பேசுவதால் எந்த பயனும் இல்லை.

இதுபோன்று சமூக விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளின் பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் உயிர் வாழும் உரிமை அனைத்தையும் பறிக்கின்ற கார்ப்பரேட் கைக்கூலிகளான காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு கிளர்ந்தெழுந்து போராடுவோம்!

♦♦♦

Prof Saibaba contracted Covid again: Health Update

Got information that Dr. Saibaba has tested positive for covid again. The jail authorities have not contacted us yet. He previously wrote to us saying that he was feeling extremely weak and was suffering from sleepless nights because of constant back and hip pain. I’m very worried how he will endure this covid attack, as he did not recover properly after the last time he got covid. His immunity has become much worse and his body’s ability to survive is slowly dwindling. I urge the nagpur jail authorities and the court to please urgently admit him to an hospital where he can be monitored as his heart issue coupled with covid can cause serious complications.

Vasantha
10.01.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here