இந்திய விவசாயிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் போராட்டம் முன்னேறுகிறது!


இந்திய உழவர்களின் டெல்லி முற்றுகை போராட்டம் ஒராண்டு நிறைவை ஓட்டி அதனை நினைவுறுத்தும் விதமாக நாடு முழுவதும் சாலை மறியல்கள், பேரணிகள், கூட்டங்கள், போராட்டங்களை நடத்த விவசாயிகளை ஒன்றிணைத்து, போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்தது.
பாசிச-மோடி அமித்ஷா கும்பல் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தாலும் தங்களது 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்று முன்னனி அறிவித்ததை இந்திய மக்கள் ஆமோதிக்கும் விதமாக பல இலட்சம் மக்களின் பங்களிப்புடன் நேற்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது.

இந்த போராட்டங்களில் மாணவ, இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்பு, தொழிற்சங்கங்கள், மக்கள் சிவில் அமைப்புகள் அனைவரும் பங்கேற்று விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவையும் ஐக்கியத்தையும் உருவாக்கினர். நடைமுறையில் பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு நின்றனர். நாடு முழுவதும் போராட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து நடைபெற்றது.

அதில் டெல்லி முற்றுகையில் உள்ள எல்லை பகுதிகளான சிங்கு, டிக்ரி, காசிப்பூர்,சாஜகான்பூர் ஆகிய இடங்களில் இலட்சம் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற போராட்டம், போர் குணத்தை நிரூபிக்கும் வண்ணமிருந்தது.
கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி, இரயில் மறியல், சாலை மறியல், பொதுக் கூட்டங்கள் பெரும் திரளான அமைப்புகள், பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியுடன், மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகள் பங்கேற்ற போராட்டம் பல்வேறு இடங்களில் பிரச்சாரம், ஆர்ப்பாட்டங்கள் மூலம் பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரம் வீச்சாக கொண்டு செல்லப்பட்டது.

சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் அதானிக்கு எதிராக போராடி வரும் பழங்குடி மக்கள் விவசாயிகளுடன் நேற்றைய போராட்டத்துற்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தினர். குறிப்பாக கூட்டத்தில் மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் 4 பழங்குடி மக்களை போலீசு சுட்டுக்கொன்றதை நினைவேந்தலுடன் நடைப்பெற்றது.
ராய்பூரில் டிராக்டர் பேரணியும் நடைபெற்றது. கர்நாடகத்தில் விவசாயிகளின் 6 கோரிக்கைகளுடன் பசுவதை தடை சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கைகளுடன் மாபெரும் சாலை மறியல் போராட்டங்களால் முக்கிய நெடுஞ்சாலைகளை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

உள்நாட்டில் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரவு தெரிவித்து அமெரிக்க, இங்கிலாந்து வாழ் இந்தியர்களும் இந்திய தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்தி பாசிச மோடி அரசை அம்பலப்படுத்தினர்.

கடந்த 30 ஆண்டுகளாக நிதி மூலதனத்தின் தாக்குதலுக்கு உள்ளான இந்திய விவசாயிகளின் இந்த எழுச்சி உலகமயமாக்கலுக்கு, ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான முன்னுதாரணமிக்க போராட்டமாக அமைந்துள்ளதை ஆதரித்தும், வாழ்த்தியும் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த முற்போக்கு அமைப்புகள் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

பாசிச மோடி-அமித்ஷா கும்பல் உலக அரங்கில் அம்பலப்பட்டுள்ளனர். ஐக்கியம், போராட்டம் என்று வெற்று கூச்சலிடாமல் ஐக்கியத்தையும் வர்க்க, சாதிய சமூக முரண்பாடுகளையும் கடந்த நெடும் போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாதித்துள்ளதை முன்னுதாரணமாக கொள்வோம்.

கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை கட்டியமைத்து முன்னேறுவோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

பல பக்கங்களில் கட்டுரைகளை எழுதி தள்ளுவதை விட இந்த படங்கள், இந்தப் போராட்டத்தின் வரலாற்று பதிவை தங்களுக்கு புரிய வைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here