வளர்ச்சியின் திசையில் வாசகர் வட்டப் பயணம்.
கரூரில் 25/2/24 அன்று புதிய ஜனநாயகம் பத்திரிக்கை வாசகர் வட்டக் கூட்டம் சிறந்த முறையில் நடந்தது. கூட்டத்தை தோழர் ஜெகதீசன் வழக்கறிஞர் தலைமை தாங்கி வழிநடத்தினார். நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
பு.ஜ இதழின் பின்பக்க அட்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ள ‘இதுதான் இன்றைய இந்தியா’ என்ற கட்டுரையை பு.ஜ வாசகரும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கைப் பரப்பு இணைச்செயலாளருமான தோழர் MTC சுப்பிரமணி விளக்கிப் பேசினார்.
நீதித்துறையின் அன்னா ஹசாரே! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! என்ற கட்டுரையை தோழர் ஜெகதீசன் வழக்கறிஞரும், இந்தியாவை ஆதரிப்பது ஏன்? என்ற முகப்புக் கட்டுரையை தோழர் பழனிச்சாமியும் விளக்கினர்.
கூட்டத்தில் புதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை அமைப்பாக்க வேண்டும் என்ற வாசகர் வட்டத்தின் நோக்கம் நல்ல பலனைக் கொடுக்கிறது என்பதை பார்க்க முடிந்தது. ஜெயக்குமார் என்ற சாயப்பட்டறை தொழிலாளி பாஜக மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத திட்டங்களை மக்கள் மொழியில் வாழ்க்கை முறையோடு இணைத்துப் பேசியது கலந்து கொண்ட மற்ற தோழர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.
பு.ஜ வை அறிமுகப்படுத்தி மக்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்து அவர்களின் பக்கம் நின்று பேசியதை, பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் தனது கருத்தாக பதிவு செய்யும் போது, நான் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்ப்ட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், என் பக்கம் நின்று எனக்காக பு.ஜ பத்திரிக்கைத் தோழர்கள் நிற்பது ஆறுதலாக உள்ளது என்று பதிவு செய்தார். இதன் மூலம் பு.ஜ இதழ் ஒரு அமைப்பாளன் மட்டுமல்ல சிறந்த போராளியும் கூட என்பதை மெய்ப்பிப்பது போல் இருந்தது.
படியுங்கள்: புதிய ஜனநாயகம்: பிப்ரவரி 2024 இதழின் உள்ளே
இந்த வாசகர் வட்டக் கூட்டம் புதிய உற்சாகத்தை கொடுத்ததோடு, இனி தொடர்ந்து புதுப்புது வடிவங்களில் வாசகர் வட்டக் கூட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வகையில் இருந்தது எனலாம்.
தகவல்: புதிய ஜனநாயகம் பத்திரிக்கை வாசகர் வட்டம், கரூர்.