அம்பேத்கரின் போஸ்டரை கிழித்து அதன் மீது சிறுநீர் கழித்த பஜ்ரங்தள் காலிகள்!!


பீம்  ஆர்மி என்ற அமைப்பால் கடந்த ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்கார் பகுதியில் நடத்தப்பட்ட பைக் பேரணியில் கலந்துகொண்ட அம்பேத்கரிஸ்டுகள் மீது பஜ்ரங் தள் காலிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அம்பேத்கரின் சுவரொட்டியை கிழித்தெறிந்ததுடன் அதன்மீது சிறுநீரும் கழித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர் 25 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கையில் தடி, வாழ், கத்தியுடன் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும் இதுவரை யாரையும்  கைது செய்யவில்லை என்பது மட்டுமல்ல  தாக்குதல் நடத்திய அந்த காவி கும்பல் கொடுக்கும் காசை பெற்றுக்கொண்டு சமாதானமாக சென்றுவிடுமாறு அம்பேத்கரிஸ்டுகளிடம்  கூறிக் கொண்டிருக்கிறது காவல்துறை. தங்களுக்கு நீதிதான் வேண்டும்; அவர்களின் பணம் தேவையில்லை என்று கூறி அம்பேத்கரிஸ்டுகள்  உறுதியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த தலித்துகள் அடிமைத் தளைகளை உடைத்து உரிமை பெற்ற மனிதர்களாக மேலெழுந்து வந்து விடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு வகைகளில் வழிகளில் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும்  இந்த ஆர் எஸ் எஸ்  காவி கும்பலை முறியடித்தே ஆக வேண்டும்.

இல்லாவிடில், அவர்கள் அமைக்கப் போகும் ராம ராஜ்ஜியத்தில் தலித்துகள் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களும், சிறுபான்மை இன மக்களும் உரிமைகள் ஏதுமற்ற, அடிமைகளாக மாற்றப்படுவதை தவிர்க்கவே முடியாது.

பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இந்திய சமூக அமைப்பில் ஒன்று இரண்டு தலைமுறைகளாகத்தான் சிறிய மாற்றத்தை பெற்றிருக்கிறோம்.

அதை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு கிளம்பியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலை அனுமதிக்கப் போகிறோமா அல்லது போராடி வீழ்த்த போகிறோமா என்பதே நம் முன்னே உள்ள கேள்வி?

வாருங்கள் விழித்தெழுவோம் , ஒன்றிணைந்து வரும்முன் காப்போம் .

பாலன்

செய்தி ஆதாரம்: The wire

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here