ஜஹாங்கீர்புரியும்..
பாரபாங்கி சிறையும்..


மலான் காலத்தில் ஜஹாங்கீர்புரியில் நடத்திய கலவரத்தோடு சங்பரிவார் கூட்டம் திருப்தியடையவில்லை.

அங்குள்ள ஏழை முஸ்லீம்களின் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளை,
கோர்ட் உத்தரவை மதிக்காமல், அதிகாரத்தின் துணையோடு, இடித்துத் தள்ளியிருக்கிறது.

அரசும், அதைப் பின்னாலிருந்து இயக்கும் சங்பரிவார் கூட்டமும் இப்படி மதவெறி பிடித்து அலைந்தாலும், விளிம்பு நிலை மனிதர்களிடம் மனித நேயம் வெளிப்படவே செய்கிறது.

லக்னோவில் (உ.பி) உள்ளது பாரபாங்கி சிறை. இங்கு முஸ்லீம் கைதிகளோடு, அறையை இந்துக் கைதிகளும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தங்களோடு இருக்கும் சக கைதி ரம்ஜான் நோன்பிருக்கும்போது,
தாம் மட்டும் சாப்பிட விரும்பாமல் இவர்களும் நோன்பிருக்கிறார்கள்.

திருடர் என சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர் ராகேஷ் குமார், இவர் ஜாவித்கானோடு
ஒரே அறையில் சிறையில் இருக்கிறார். ஜாவித்கானுக்கு வீட்டில் இருக்கும் உணர்வைத் தர எண்ணி அவரோடு சேர்ந்து ராகேஷ் குமாரும் நோன்பு கடைபிடிக்கிறார் .

இவரைப் போலவே மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ஹரிராம், வரதட்சணை கேசில் சிறைவாசமிருக்கும் தினேஷ்குமார் , உள்ளிட்ட 15 இந்து கைதிகள் ரமலான் நோன்பிருக்கிறார்கள். இந்தப் பழக்கம் கடந்த 50 ஆண்டுகளாக பாரபாங்கி சிறையில் கடைபிடிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் சிறப்பம்சம் .

ஜஹாங்கீர்புரியில் ஜாவேத் என்பவரின் சர்பத் கடையை இடித்திருக்கிறார்கள். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுஷீல் ஓர் இந்து. ‘நாங்கள் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம். அரசாங்கம் எங்களை பிரிக்க எண்ணுகிறது! ‘
இடிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக வருந்துகிறார் சுஷீல்.

மிக கடினமான தருணங்களை பாசிஸ அரசு உருவாக்குகிறது. போலீஸ், சட்டம் , கோர்ட் கைகாட்டும் திருடர்கள், மோசடி பேர்வழிகள் ஆபத்தானவர்களில்லை.
இவை பாதுகாக்கும் காவி ஃபாசிஸமே ஆபத்தானது!

கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here