ருவர் என்னதான் மிகச்சிறந்த புளுகராக இருந்தாலும், 24 மணிநேரமும் புளுகித் திரிந்தாலும் சில நேரங்களில் அவர்களே அறியாமல் உண்மையை உளறிவிடுவர். அந்த வகையில் தான் நமது அண்டப்புளுகு ஆகாசப்புளுகு மோடியும் சமீபத்தில் “இதுவரையில் நடந்தது எல்லாம் ட்ரெய்லர் தான் இனிமேல்தான் முழுப்படமும் இருக்கு” என்று உண்மையை உளறியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.-சின் நிகழ்ச்சிநிரலான பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநிலங்களின் உரிமைகளை, வருவாய் ஆதாரங்களை பறித்து மையப்படுத்தப்பட்ட ஒரு அரசின் கீழ் அதிகாரமில்லாத நகராட்சிகளாக மாற்றுவது, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற இந்துராஷ்டிரத்துக்கான அடித்தளத்தை இம்மிபிசகாமல் கட்டியுள்ளது பாஜக.

இந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாள் முன்னதாக மார்ச் 11-ஆம் தேதியில் CAA சட்டம் நாடு முழுமைக்கும் அமலுக்கு வருகிறது என்று அமித்ஷாவின் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசர அவசரமாக அரசாணை மூலம் அறிவித்துள்ளது.

CAA சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 2019 ஆண்டு முதல் அதை எதிர்த்து நாடு முழுவதும் பற்றியெரிந்த போராட்டத்தாலும், கொரோனா தொற்றாலும் நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த CAA சட்டம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுப்பொறுக்க ஒரு துருப்புச் சீட்டாக பாஜக  பயன்படுத்தப் பார்க்கிறது.

இம்முறையும் இச்சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களும் அவர்களுடன் இணைந்து போராடும் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரிகளையும், பொதுமக்களையும் இந்துக்களுக்கு எதிரிகளாகக் காட்டி மீண்டும் ஆட்சிக்கு வருவது, சமீபத்தில் அம்பலமான பாஜாக-வின் தேர்தல்பத்திர மெகா ஊழலையும் திசைதிருப்புவது என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறது பாசிச பாஜக.

CAA சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களை பிரித்து மோதவிடும் மணிப்பூர் மாடலை நாடுமுழுமைக்கும் நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது இந்த கொலைகார கும்பல்.

பாசிச மோடி சொன்னதைப்போலவே பாபர் மசூதி இடிப்பு ஒரு ட்ரெய்லர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, கூறுபோட்டது ஒரு ட்ரெய்லர், CAA சட்டம் நிறைவேற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு, கலவரங்களின் மூலம் 19 பேர் படுகொலை செய்யப்பட்டது ஒரு ட்ரெய்லர், மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலால் நடத்தப்பட்ட கலவரம் ஒரு ட்ரெய்லர், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் பற்றிய விவாதங்கள், அவைகளுக்கு எழுகின்ற எதிர்ப்புகள், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம், மின்சார சட்ட திருத்தம், தண்டனை சட்டங்களில் திருத்தம் என்று பல்வேறு ட்ரெய்லர்களை கடந்த பத்தாண்டுகளில் காட்டியுள்ளது மோடி ஆட்சி.

அப்போ மெய்ன் பிக்ச்சர் என்னவாக இருக்கும்?, அதொன்றும் தங்கமலை ரகசியமில்லை. எப்படி முழுநேர புளுகர் மோடி முதல்முறையாக ஒரு உண்மையை சொல்லியுள்ளாரோ அதேபோல மோடியின் அடிபொடிகளும் உண்மைகளை உளறியுள்ளனர். கர்நாடக எம்.பி. ஆனந்த் குமார் ஹெக்டே “இந்தியாவின் அரசியல் சாசனத்தை இந்துத்துவ அடிப்படையிலானதாக மாற்றுவோம்” என்றும், உத்திரபிரதேச எம்.பி. பிராக்யா சிங் “பார்ப்பனர்களுக்கு மட்டுமே பிரதமரைத் தேர்தெடுக்கும் உரிமை வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400-க்கும் அதிகமாக  சீட்டுகளை வென்று அசுரபலத்துடன் ஆட்சியமைப்பதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி, இந்திய அரசியல்சாசனத்தின் அடிப்படைகளான சோசியலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்பவைகளை கிழித்தெறிந்து, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டும் மனுதர்ம அடிப்படையிலான இந்துராஷ்டிராவை நிர்மாணிப்பதுதான் பாசிஸ்டுகளின் மெய்ன் பிக்ச்சர்.

இதை நடைமுறைப்படுத்தத்தான் உழைக்கும் மக்களிடம் ஒட்டுப்பிச்சை கேட்டு வரவிருக்கிறார்கள் உழைக்கும் மக்களை தீண்டத்தகாதவர்களாக மதிக்கும் பாசிஸ்டுகள். இந்துமதப் போர்வைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் இந்த மனிதகுல விரோதிகளை I.N.D.I.A. கூட்டணி கட்சிகளும், மக்கள்சார் அமைப்புகளும், இயக்கங்களும் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை உதைக்கும் மக்களாக மாற்றும்போதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக சங்பரிவார் கும்பலை அரசியல் அரங்கிலிருந்து மட்டுமல்ல நாட்டைவிட்டே விரட்டியடிக்க முடியும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here