நாஜி மாடல் காக்கி-காவி கும்பல்!

கடைந்தெடுத்ததெருப்பொறுக்கிகளையும், சமூக விரோதிகளையும் வளர்த்து விடுவதில் போலீசின் பங்குதான் அதிகம்.

0

த்திய பிரதேசத்தில் இரண்டு பழங்குடியின இளைஞர்கள் பசுவைக் கொன்றதாகக் கூறி கடந்த மாதம் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். RSS- -ன் கீழ் இயங்கும் பஜ்ரங் தளம் மற்றும் பல்வேறு இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் அடங்கிய வெறியர்கள் இப்படுபாதகச் செயலை செய்து முடித்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு அம்மாநில போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் போலீஸும் காவி குண்டர்களும் பசு பாதுகாப்பு தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

அதே போல், எழுத படிக்கத் தெரியாத ஒரு முஸ்லிம் இளைஞரை இக்கும்பல் கைகாட்டி விட்டது என்பதற்காக வாட்ஸப்பில் செய்தியை பகிர்ந்ததாகக் கூறி, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து உள்ளது. அதைப்போலவே டெல்லியில் இரண்டு கைகளும் இல்லாத ஒரு முஸ்லீம் இளைஞரை கல்லெறிந்ததாகக் கூறி வழக்கு பதிந்ததும் நினைவிருக்கலாம்.

Bengaluru: Rowdy-sheeter held for threatening senior citizen over property  dispute | Bengaluru News - Times of India

இது மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் மட்டுமல்ல, பாஜக ஆளும்/ஆளாத மாநிலங்களில் கூட போலீசும் காவிக்கும்பலும் ஒருவித ஒத்துழைப்புடன்தான் செயல்பட்டு வருகின்றனர்.

இத்தகைய ஒத்துழைப்பு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டிய காவல்துறை காவிகளின் பாசிச சித்தாந்தத்துக்கு அடியாட்படையாக வேலைசெய்வது சமூகத்துக்கு மாபெரும்‌ அச்சுறுத்தல்.

ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சியின் குண்டர் படையுடன் ஜெர்மனி போலீசும் இதைபோலதான் செயல்பட்டு இலட்சக்கணக்கான மக்களை கொத்துக் கொத்தாக கொன்று போட்டனர். அங்கு போலீஸ் துறை முற்றிலும் முடக்கப்பட்டடு ஹிட்லரின் குண்டர் படை சுட்டிக்காட்டும் வேலைகளை மட்டும் செய்யும் ஒரு எடுபிடி துறையாக மாற்றப்பட்டது. அதைத்தான் தற்போது இந்தியாவிலும் பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதற்கு உதாரணமாக பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அல்லாமல் பெரியாரின் மண் என்று நாம் கூறும் தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் நடந்த சம்பவங்களைக் கூறமுடியும்.

கோவை தர்மசாஸ்தா என்ற தனியார் பள்ளியில் நடைபெற்ற RSS அமைப்பின் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்தக் கோரி த.பெ.தி.க. உள்ளிட்ட தோழமை அமைப்புகளுடன் மக்கள் அதிகாரம் தோழர்களும்  முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது அப்பகுதி காவி குண்டர்களுடன் போலீஸ் ஒன்றாக உட்கார்ந்து இருந்ததும், தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு முன்னேறும் போது காவி குண்டர்கள் போலீசின் எதிரிலேயே தொடர்களை அடித்ததும், அடிதடியில் ஈடுபடும் காவி குண்டர்களின் மீது வழக்கு பதியாமல் போராடிய தோழர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிந்தது.

காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் “காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே” என்று சொல்லக்கூடாது என்று CPM-ன் ராமகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த காவி குண்டர்கள் வேண்டுமென்று பிரச்சினையை உண்டாக்கியதால் கோவையில் மூடப்பட்டிருக்கும் 4-5 மசூதிகள்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற CPM-ன் பேரணியில் கையில் உருட்டுக்கட்டையுடன் பேரணியில் சென்றவர்களைத் தாக்கிய போலீஸ் SI என இப்பட்டியல் நீளும்.

தமிழகத்தில் பசு கடத்தல்/படுகொலை என்ற சிறுபான்மையினரை/ ஒடுக்கப்பட்டவர்களை அடித்துக் கொள்ளும் அளவுக்கு காவி குண்டர்கள் வடமாநிலங்களைப் போல மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறவில்லை என்றாலும், போலீஸ் துறையில் இவர்களின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

கோவையில் எந்த ஒரு பகுதியில் பிரச்சாரம் செய்யப் போனாலும் இக்காவிகுண்டர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நமது பிரச்சாரத்தை கருத்துரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்ற இக்கும்பல் பிரச்சனை செய்து நமக்கு முன்னாக போலீசை போன்போட்டு வரவைப்பார்கள். நமது பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் இவர்களின் வேலையையே அங்கு வருகிற போலீசும் செய்யும், நமது பிரசுரங்களை பிடுங்கி விட்டு, அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று வழக்கும் பதியும்.

சில இடங்களில் “அந்தப் பகுதிக்கு ஏன் தோழர் போறீங்க? அங்க போனா பிரச்சனைன்னு தெரியுமில்ல.” “அவனுங்க பொறுக்கிக தோழர். உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா எங்களுக்குத்தான் சிக்கல்.” “உங்க பாதுகாப்பு முக்கியம் தோழர் அதனால அந்தப் பகுதிக்கு போகாதீங்க” என்று நைச்சியமாக பேசி, இறுதியாக காவி கும்பலின் நோக்கமான குறிப்பிட்ட பகுதியில் நாம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை போலீஸ் நிறைவேற்றும்.

இவ்வாறு கடைந்தெடுத்ததெருப்பொறுக்கிகளையும், சமூக விரோதிகளையும் வளர்த்து விடுவதில் போலீசின் பங்குதான் அதிகம். இந்நிலை தொடர்ந்து வளரும் போது வடமாநிலங்களைப்போல போலீசுக்கு மேலே இக்காவி கும்பல் அமர்ந்து கொண்டு தான் பணித்த வேலையை மட்டும் செய்யுமாறு போலீஸ் துறையை ஆட்டுவிக்கும்.

ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான போலீசுக்கு இது ஒன்றும் புதிது இல்லை என்பதால் அதற்குப் பணிந்து செல்லும். ஆனால் போலீசுக்கு சோறு போடும் மக்கள் அத்தகைய ஒரு நிலையை சகித்துக் கொண்டு சும்மாயிருக்க முடியுமா?

ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொண்டு மக்களை வதைக்கும் காக்கி-காவி கும்பல்களை எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய, மக்களின் கண்காணிப்பின் கீழ் இருக்கும்படியான காவல்துறையாக, முற்றிலும் ஜனநாயகபூர்வமான அமைப்பாக மாற்றுவதே இதற்கு தீர்வு.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here