நரபலி கேட்கும் கெயில்நிறுவனம்!


ர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம் வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளிப்பட்டி ஊராட்சியை அடுத்துள்ள செக்காரப்பட்டி அருகில் உள்ளது கருப்பனம்பட்டி என்கிற சிற்றூர்.

இந்த கிராமத்தில் 30 சென்ட் நிலம் வைத்திருந்த சிறுவிவசாயி கணேசன் கெயில் நிறுவனத்தின் குழாய் பதிப்பு-நிலப்பறிப்பு மற்றும் அரசின் அடக்குமுறை, கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக ஏப்ரல்13 அன்று தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்

கேரள மாநிலம் திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூரு வரை தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய் அமைத்து எரிவாயு கொண்டு செல்லும் முயற்சியை இந்திய அரசு நிறுவனமான கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

விவசாயத்தை முற்றாக ஒழித்துக்கட்டிகார்ப்பரேட்டுகள் மற்றும் அதிகாரவர்க்க முதலாளித்துவமான பொதுத்துறை நிறுவனங்கள் இயற்கை கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு வசதியாக அவர்களின் நிலங்களை பிடுங்கி எறிவதற்கு தயாராக உள்ளது இந்திய ஆளும் வர்க்கம்.

கெயில் நிறுவனம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு சென்று தனது உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு தயாராகிக் கொண்டு வருகிறது.  விளைநிலங்களை பாதிக்காமல் சாலையோரங்களில் மட்டுமே குழாய் பதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், எச்.ராஜா பாணியில் ஹைகோர்ட் ஆவது, *** ஆவது என்று துச்சமாக  செயல்படுகிறது கெயில் நிறுவனம்.

இவர்களின் லாபவெறியாட்டத்திற்கு விவசாயி கணேசன் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக கெயில் நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்ற போதிலும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

கார்ப்பரேட் கட்சியான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதற்கு முன்னால் அமல்படுத்தி வரும்  கார்ப்பரேட் கொள்ளைக்கான எந்த ஒரு திட்டத்தையும் முற்றாக கைவிடவில்லை. இதன் விளைவு தூத்துக்குடி ஸ்டெர்லைட் துவங்கி தர்மபுரி கெயில் குழாய் பதிப்பு வரை போராட்டங்கள் மீண்டும் எழுச்சியுடன் நடந்து வருகிறது.

கார்ப்பரேட் கைக்கூலி மோடி ஆட்சியை எதிர்த்து மாற்று பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து முறிடிக்காமல் அரசியல் கட்சிகளை விமர்சிப்பதால் மட்டும் எந்த தீர்வும் கிடையாது.

புதிய தாராளவாத கொள்கையை அமல்படுத்துகின்றமறுகாலனியாக்கபொருளாதார திட்டங்களை தூக்கி எறிந்து சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கப் போராடுவது தான் தீர்வாகும்.

ஆனால் அதுவரை நமது கண்ணின் மணிகளான விவசாயிகளை, கணேசன்களை, ஜெயராமன்களை நாம் இழந்து நிற்க முடியாது.

உடனடி தீர்வு தரும் வகையில்“கெயில் குழாய் பதிப்பை விளைநிலத்தில் கொண்டு செல்லாதே! சாலையோரத்தில் கொண்டு செல்!” என்று போர்க் குரல் எழுப்புவோம்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here