ஸ்டெர்லைட் போராட்டம் தமிழகமே துணை நிற்கும்!


மீண்டும் எழுச்சி :

இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக 10.00 மணியிலிருந்து மக்கள் வரத் தொடங்கினர்.மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆட்களை இன்று வரை அனுமதிக்கும் சட்டவிரோத செயலை கண்டித்தும், Cr.PC பிரிவு 133 ன் கீழ் சிப்காட்டிலிருந்து அப்புறப்படுத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். குடி தூத்துக்குடி திருநெல்வேலி பிரதான சாலையிலிருந்து முழக்க மிட்டவாரே ஆட்சியர் அலுவலகம் வந்த மக்களை SP தலைமையிலான போலீஸார் தடுத்தனர். 10 பேர் மட்டும் கலெக்டரை பார்க்க வாங்க என்றனர். ஆனால் மக்கள் நாங்கள் இவ்வளவு பேர் வந்துள்ளோம். எங்கள் குறைகளை சொல்ல வேண்டும் ஆதனால் ஆட்சியரை இங்கே வரச் சொல்லுங்கள், இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை சொல்கிறோம். என்று ஒரே குரலாக கூறி அந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டனர். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் உள்ளே அழைத்துச்சென்றனர்.

கோரிக்கைகளை கேட்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக உள்ளூர் கண்காணிப்பு கமிட்டியை கூட்டி நடவடிக்கை எடுப்பதாகவும், Cr.PC-பிரிவு133 ன் கீழ் சிப்காட்டிலிருந்து ஸ்டெர்லைட்டை அகற்றுவது குறித்து அரசின் பரிசீலனைக்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளித்தார். இது குறித்த முடிவை பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்தால் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற கோரிக்கை வைத்தோம்.

மாவட்ட ஆட்சியர் கூறிய உறுதிமொழி குறித்து மக்களை கூட்டி விளக்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலையினுள் ஆட்கள் செல்வதை தடை செய்யாவிட்டால் நாமே ஆலைக்கு சென்று தடுத்து நிறுத்துவோம் என்று மக்களுக்குள்ளே பேசியவாறு கலைந்து சென்றனர்.உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டிற்கு தமிழக அரசுடன் இணைந்து சட்டம் போராட்டமும் நடத்தும் நமது கூட்டமைப்பிற்கு போராட்டகளத்திலும், சமூக வலைதளத்திலும் மிகுந்த ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை & ஊடக நண்பர்களுக்கு மிகுந்த நன்றி!

மாவட்டாட்சியரிடம் மக்கள் அனைவரையும் அழைத்துச் சென்று குறைகளை தெரிவிப்பதற்கு உதவிய புதிய SP தலைமையிலான காவல்துறைக்கும், எமது கூட்டமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறோம்!கூடுதலாக இன்று நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் மக்களிடம் காணப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு உணர்வை சில – பல வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அத்தனை உணர்வுப்பூர்வமானது. போராட்ட வீடியோக்கள், போட்டோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுகிறோம். அனைவரும் தமிழகம் முழுவதும் பகிரவும்.

படிக்க:

மூடி சீல் வைத்த ஆலைக்குள் ஸ்டெர்லைட் பணியாளர்களுக்கு என்ன வேலை?

ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்றப்படும் இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் வெல்வார்கள்!

தமிழகம் துணை நிற்கிறது!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here