மக்கள் அதிகாரம் இணைய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அன்பார்ந்த வாசக தோழர்களே!
உண்மையின் கழுத்தை நெறிக்கும் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகள் ஒரு வர்க்க சார்பாக அல்லது ஒரு கட்சியின் குரலாக செய்திகளை வெளியிடுகிறது.

இத்தகைய செய்தி ஊடகங்கள் பண மூட்டைகளின் பிடியில் இருப்பதால் விளம்பரத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதிக்கின்றனர்.
ஊடகத்தை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர்.

விளம்பரம், கவர்ச்சி, சினிமா கிசுகிசு செய்திகள், ஒன்றுக்கும் உதவாத அரசியல் ஆருடங்கள், ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்கி வெளியிடும் வசவுகள், அரசியல் கட்சி தலைவர்களின் ஆபாச வக்கிர பேச்சுகள் இவைதான் உண்மை செய்தி என மேற்கண்ட ஊடகங்களில் தான் பரப்பப்படுகின்றன.

சமீபகாலமாக பிரபல ஊடகங்களில் பணியாற்றி விலகிய அல்லது விலக்கி வைக்கப்பட்ட தனிநபர்கள் சிலர் சமூக ஊடகங்களை நடத்துகிறார்கள்.

பொதுவாக சமூக பிரச்சினைகளில் நடுநிலையில் இருப்பதாக இவர்கள் காட்டிக்கொண்டாலும் தமிழ் இனம், காந்தியம், முதலாளித்துவ ஜனநாயகம் போன்ற புளித்துப்போன கண்ணோட்டத்தில் இருந்து செய்திகளை வெளியிடுகிறார்கள்.

ஆனால் எந்த பொருளாதார பின்னணியும் இல்லாமல் உழைக்கும் மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் முகநூல் பக்கம் இயங்குகிறது.

மக்கள் அதிகாரம் என்ற பெயரில் சில போலி குழுக்களும் முகநூல் பக்கங்களில் இறங்கி தனக்கு தெரிந்த அகநிலை பார்வையுடன், செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் மக்கள் அதிகாரம் அன்றாடம் நாடு மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் செய்திகளை பெரும்பான்மை மக்கள் நலனில் இருந்து சிந்தித்து செய்திகளாக தொகுத்து வெளியிடுகிறது.

எமது ஊடக செய்திகள் அனைத்தும் சமுதாயத்தில் நிகழும் உண்மை சம்பவங்களை என்பதை மறைக்காமல் வெளியிடுகிறோம்.

உழைக்கும் மக்களாகிய நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் எமது அடித்தளம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மக்கள் அதிகாரம் செய்திகளை பாருங்கள் நண்பர்களுக்கு பரப்புங்கள்.
உண்மை செய்திகளை உலகறியச் செய்வோம்.
மாற்று ஊடகத்தை உருவாக்குவோம்.
தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
ஊடகம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here