லக அதியங்களில் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவின் அடையாளமாகவும் விளங்குகிறது. இது பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் தலமாகவும் உள்ளது. மொகலாய மன்னர் ஷாஜகான் தன் காதல் மனைவி ஷாஜகான் தன் மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மகாலை கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. காதலின் சின்னமாகவும் தாஜ்மகாலை இளைய தலைமுறை பார்க்கிறது.

அப்படிப்பட்ட தாஜ்மகாலுக்கு இன்று பிரச்சினை வந்துள்ளது. தாஜ்மகால் இருந்த இடத்தில்சிவன் கோவில் இருந்த்தாகவும், இதனை இடித்து தான் தாஜ்மகால் கட்டப்பட்ட்தாகவும் இந்துத்துவா அமைப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் தாஜ்மகாலின் பூட்டப்பட்ட 20அறைகளையும் திறக்க வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

சங்பரிவாரம் சொல்லும் தாஜ்மகால் கதை
1212 ஆம் ஆண்டில் ராஜா பரமர்தி தேவ் என்ற மன்னர், தேஜோமகாலயா சிவன் கோவிலை கட்டினார். அவரது மறைவுக்கு பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமன்சிங் கோவிலை பராமரித்து வந்தார். அவருக்கு பின்னர் ராஜா ஜெய் சிங் கோவிலை நிர்வகித்து வந்தார்.

கடந்த 1632 ஆம் ஆண்டில் ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து தேஜோ மகாலயா கோவிலை மொகாலய மன்னர் ஷாஜகான் அபகரித்ததாகவும், அந்த இடத்தில் தான் மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டியதாகவும் கதையளக்கிறது சங்க்பரிவார் கும்பல்.
இதே கதையை தான் பாபர் மசூதிக்கும் வேறு விதமாக சொன்னார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களை பொறுத்தமட்டில் பாபர் மசூதி இடிப்பையொட்டி கலவரங்களை தூண்டி ஆட்சியை பிடித்தார்கள். ஒரு வழியாக உச்சநீதி மன்ற துணையுடன் கோவிலையும் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

பாபர் மசூதியின் மீது காவி வானர கூட்டம்

பாபர் மசூதியை வைத்து இனி அரசியல் செய்ய முடியாது. இனி எதை கையில் எடுக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு ஏற்கனவே மொகலாய மன்னர்களின் சின்னமாக உலக அளவில் பிரபலமான தாஜ்மகால் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. இப்போது தாஜ்மகாலை கையில் எடுக்க தொடங்கிவிட்டார்கள்.

படிக்க:

♦  பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?

பள்ளி சிறுவர்களுக்கு மதவெறியூட்டும் கர்நாடக பாஜக || பாபர் மசூதியை இடிப்பது போன்று ஒத்திகை

மக்களை பிரித்தாளும் கொள்கையின் மூலம், அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இஸ்லாமியர்களை தாக்குதல் இலக்காக வைத்து செயல்படுகிறது. இஸ்லாமியர்களை இந்திய மண்ணில் இருந்து அகற்றுவதும், அகண்டபாரதத்தை நிறுவுவதற்கும் மத கலவரத்தை உருவாக்குகிறார்கள். அதற்கு இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் மோதவிட்டு மத கலவரத்தை உருவாக்கி இந்து ராஷ்டிர கனவை சாதிக்க நினைக்கிறது.
அதற்காக அவர்கள் எடுத்திருக்கும் அடுத்த ஆயுதம் தான் தாஜ்மகால்.

பாபர் மசூதி போல் தாஜ்மகாலையும் வைத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் காவி பாசிஸ்டுகளை மக்கள் மத்தியில் அம்பலபடுத்துவோம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here