ஆய்வுப்படிப்புகள் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலங்களாக இருக்கின்றனவே ஏன்? பகுதி -3
ஸ்மிதா என்ற ஆய்வு மாணவர் கூறியது எல்லாமே எதார்த்த உண்மைகள். ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களின் ஆய்வுகள் தரம் தாழ்த்தி இழிவுபடுத்தப்படுவது அவர்களின் மனபாரத்தைக் கூட்டுகிறது; சிலர் தற்கொலை வரைகூட சென்றார்கள்.சாவர்ண அடிப்படையிலிருந்து பார்க்கின்ற பேராசிரியர்கள் மேற்கத்தியக் கோட்பாடுகளிலிருந்தே கருத்துகளை உருவாக்கி விளக்கினார்கள். சாதிகள்/பழங்குடிகள்/தலித் பற்றிய யதார்த்தங்களை விலக்கிவிட்டு பார்த்தார்கள்.இதுமட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதார பிரச்சினைகளாலும் வதைபட்டார்கள். ஆய்வு மாணவர்களுக்காகத் தரப்படும் உதவித்தொகையை ஒருபகுதியை தங்கள் குடும்பத்துக்கு கொடுத்து உதவிசெய்தார்கள். படிப்பில் ஏற்றத்தாழ்வாக நடத்தப்பட்டாலும் பொறுத்துக்கொள்ள முக்கிய காரணம் வீட்டுக்கு உதவி செய்வது தடைபட்டுப்போகக்கூடாது என்ற அச்சத்தால்தான்.
இதற்காக அவர்கள் NET என்ற தகுதித் தேர்வில் தீரவேண்டும். 2021-ல் சுமார் 12.67 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி 52000 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தார்கள். NET தேறாதவர்களுக்கு ரூ 8000/- மட்டுமே உதவித்தொகையாகத் தருவார்கள். ஓரளவு வசதி உள்ளவர்கள் சமாளித்து விடலாம். ரூ 8000/- வைத்துக்கொண்டு இங்கே செலவழிப்பதா, குடும்பத்துக்கு எவ்வளவு அனுப்பமுடியும் என்கிறார் ஆதித்யா.
சபரி என்ற கேரள தலித் மாணவி முனைவர் பட்ட ஆய்வுக்கு பதிவானார். மூன்று முறையும் தேர்வு எழுதியும் தேறவில்லை. அவருக்கு NET இல்லாத உதவித்தொகையே வழங்கப்பட்டது. இந்தப்பணம் வீட்டுக்கு அனுப்ப போதவில்லை. அம்மா 2 தங்கைகள் இந்த சொற்பப் பணத்தில் மாதச்செலவை ஈடுகட்ட முடியாது. எனவே கூடுதல் வீட்டுச் செலவுக்கான பணத்துக்காக சபரி வேறு பல வேலைகளும் செய்தார். ஒரு தனியார் பள்ளியில் வாரத்துக்கு நாள் பகுதிநேர ஆசிரியர் வேலை செய்தார். மற்ற நாட்களுக்கு tuition சொல்லிக்கொடுத்தார். மிச்ச நேரத்தில்தான் ஆய்வுக்கான படிப்பை, தயாரிப்பைச் செய்தார். இதுபோக ஆய்வுக்குத் தொடர்புள்ள கருத்தரங்குகளுக்கோ, விவாதங்களுக்கு, கூட்டங்களுக்கோ, நூலகங்களுக்கோ போகவும் முடியவில்லை.
“எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் ஒன்றும் super woman அல்ல. ஆனால் மரணம் என் அறைக்கதவைத் தட்டிக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன்” என்று வேதனைப்பட்டார் சபரி. முழு தொகை பெறாதவள், ஆய்வுப்படிப்புக்கே தகுதி இல்லாதவள் என்று பேராசிரியர்கள் கேவலமாகப் பேசினார்கள். கோட்டாவில்தான் இங்கு வந்திருக்கிறேன் என்றார்கள். தேர்வில் பாஸ் ஆகாதவள் என்பதே அதற்க்கு சாட்சி என்று பேசினார்கள் என்கிறார்.
பல நாட்கள் திடீர் திடீரென்று ஏக்கமும் கவலையும் சபரியைத் தாக்கும். ஒரு நாள் ஓ-வென்று கதறிக்கொண்டே படுக்கையில் கண்விழித்தார். விடுதி நண்பர்கள் ஓடிவந்து அறைவாசலில் தடதடவென்று தட்டினார்கள். சபரி கத்துவதை நிறுத்தவில்லை, படுக்கையிலிருந்து எழுந்து சென்று கதவைதிறக்கக்கூட அவரால் முடியவில்லை. உடல் செயலிழந்து போனதுபோல் சபரி படுக்கையிலேயே கிடந்தார். “வெளியே நண்பர்கள் பதறுவதும், பேசுவதும் கேட்டது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை” என்றார்.
படிக்க:
ஐந்தாண்டுகளுக்குப் பிறகே சபரி NET தேர்வில் தேறினார். முழு உதவித்தொகைக்கு மாணவர் தகுதியாகலாம், ஆனால் உதவித்தொகை கைக்குவந்து சேர்வதற்குள் பல மாதம் ஆகிவிடும். ஜனவரி 2022-ன் நிலவரத்தின்படி கடைசியாக நவம்பர் 2021-ல் வாங்கியதுதான் கடைசி என்றார். “இந்த தொகை வந்தபின்தான் காரியமாகவேண்டும் என்று இல்லாதவர்கள் தாமதம் பற்றியே கவலைப்படமாட்டார்கள். அதாவது வசதி படித்தவர்கள்தான் முனைவர் பட்டப்படிப்பை முடிக்க முடியும் என்பது தான் உண்மை.”
பல்கலைக்கழக நிர்வாகிகள் இதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படவில்லை என்று மனநல ஆய்வாளர் பத்தாரே விமர்சித்தார். “ஒரு மாதம் தொகை வரவில்லை என்பது அதிகாரிகளுக்குப் பெரிய விஷயமில்லை. சகமாணவர்களிடம் வாங்கி செலவை சரிக்கட்டிக் கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் எதிர்பார்க்கும் தொகை வீட்டுக்குப்போனால்தான் இவர்கள் மனம் நிம்மதியாகும் என்று அவர்கள் உணரவேயில்லை. அந்த அளவு சுரணை கெட்டுப்போயிருந்தார்கள்.எதனால் நிர்வாகமும் பேராசிரியர்களும் மாணவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்? உதவித்தொகையே காரணம் என்கிறார் விபின். அரசாங்கம் இந்த நிதியை நேரடியாக மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். பல்கலைக்கழங்களை இடையிலேயே மாற்றிக்கொள்வதற்கு வசதிவேண்டும். அப்படியிருந்தால் வழிகாட்டும் பேராசிரியர்கள் மாணவர்களை நன்றாக நடத்துவார்கள் என்கிறார் விபின்.
விபின் சென்னை IIT-யில் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தை சொன்னார். திடீரென்று ஜூலை 2021-ல் அவர் ஆய்வைவிட்டு விலகிக்கொண்டார். ஏன்? மானுடவியல் மற்றும் சமூகஅறிவியல் துறையில் அதிகாரமிக்க ஆட்கள் அவரை சாதிரீதியாகத் தாழ்வாக நடத்தி அவமானப்படுத்தினார்கள். விபின் மறுபடி படிப்பில் சேர்ந்தார். தனது தரப்பு நியாயத்துக்காக தலையே போனாலும் சரி வழக்கை சொல்லிப்போராட முடிவு செய்தார். ஆகஸ்ட் 2021-ல் ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு எழுதினார். ஜனவரி 2022-ல் மறுபடியும் படிப்பை நிறுத்தினார். படிப்பில் சேர்ந்ததிலிருந்து நிர்வாகம் தொடர்ந்து சித்திரவதை செய்தது என்பது விபினின் வாதம். பிப்ரவரியில் மீண்டும் அமைச்சகத்துக்கு புகார் அனுப்பினார். SC/ST, OBC மூன்று பிரிவினருக்குமாகச் சிறப்பு ஆள் எடுப்பு நடத்தப்பட்டாலும் அதை நிர்வாகம் சீர்குலைத்துவிட்டது என்பதே அவரது புகார். பார்ப்பனீயமும் அதற்கு விசுவாசமான ஆதிக்க சாதிகளின் அடக்குமுறை அட்டகாசமும் ஏராளம் என்கிறார்.
பிப்ரவரி 2022-ல் விபினிடம் ஆய்விலிருந்து விலகுவதற்குரிய நாள் வருவதற்கு முன்பே சென்னை IIT நிர்வாகம் காவலர்கள் மூலம் பலவந்தமாக விபினை வெளியேற்றியது. இதுபற்றி ஒருநாள் கழித்து விபின் நிர்வாகத்துக்கு எதிராக புகார் செய்தார். இது தொடர்பான விளக்கம் கேட்டு Scroll.in சென்னை IIT நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. விளக்கம் அளிக்கப்பட்டால் அதையும் சேர்த்து கட்டுரையாக எழுதப்போவதாகவும் தெரிவித்தது.
தன்னைவிட மிக மோசமாக பல பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் நடத்தப்படுவதாக விபின் கூறுகிறார். என் மனம் கடுமையாக பாதிப்படைந்துவிட்டது. நிலைமை இன்னும் கூடுதலாக மோசமானால் கொஞ்சநாள் விடுப்பு எடுத்துச் சரிசெய்து கொண்டுவருவேன். மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. அதுவும் அவர்கள் குடும்பத்தாருக்கு பணம் அனுப்பும் சூழலில் எதிர்த்து எதுவுமே செய்வதற்கில்லை.
பல மேல்நாட்டு மேற்கத்திய பல்கலைக்கழங்களில் மாணவர்கள் விருப்பம்போல ஓர் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. சிகாகோ பல்கலைக்கழத்தில் மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வார்கள். PHD ஆய்வு என்றால் என்ன அது எவ்வாறு உழைப்பைக் கோரும் என்று அறிந்துகொண்ட ஓராண்டுக்குப் பிறகே அவர்களுக்கு வழிகாட்டும், நெறிப்படுத்தும் பேராசிரியரை அறிவிப்பார்கள். அதில் தாக்குப் பிடிக்கமுடியவில்லையென்றால் ஓராண்டு இறுதியில் விளங்கிக்கொள்ளலாம். அப்படிப்பட்டவர்களுக்கு முதுகளைப் பட்டம் கொடுத்துவிடுவார்கள் என்கிறார் விபின். இந்தியாவில் இதே முறை பின்பற்றப்பட்டால் சமூகத்தால் ஒடுக்கப்படும் மாணவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப்பிறகு தாக்கு பிடிக்கமுடியவில்லை என்று கூறி பின்வாங்க வாய்ப்பு ஏற்படலாம்; ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்கிறார் விபின்.
ஒடுக்கப்பட்ட பிரிவினர் பாடத்திட்டங்களில் அழுத்தப்படுவதோடு பலரகமான திட்டமிட்ட தொல்லைகளையும் சந்திக்க நேருகிறது. “இதெல்லாம் கூடுதல் பிரச்சினை. இதனால் மனஅழுத்தம் வருகிறது. தற்கொலைக்கும் கூட இவர்கள் தள்ளப்படுகிறார்கள்” என்கிறார் விபின்.
டிசம்பர் 2021-ல் ஒன்றிய மந்திரி தர்மேந்திரா பிரதான் மக்களவையில் ஓர் அறிவிப்பு செய்தார். 2014-க்கும் 2021-க்கும் இடையில் 8 ஆண்டு இடைவெளியில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை, பி.ஹெச்.டி மூன்றிலும் தற்கொலை செய்துகொண்டவர்கள் 122 பேர். இவை எல்லாமே ஒன்றிய அரசு உதவி செய்துவரும் நிறுவனங்களில் நடந்தவை. இவர்களில் 50 சதவீததுக்கும் மேல் ஒடுக்கப்பட்ட மாணவர்கள்.தற்கொலைகள் பாரதூரமானது என்று நிர்வாகம் எப்போதோ ஒருமுறைமுறை மட்டுமே சொற்ப அளவு மட்டுமே அங்கீகரித்துப் பேசியது. இப்படிப்பட்ட தற்கொலைகளை பற்றி என்னசொல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது மாணவர்கள் தகுதிவாய்ந்தவர்கள் அல்ல. அதனால்தான் தேர்வில் தேறுவதற்கு படாதபாடு பட்டார்கள் என்கிறார் விபின். மேலும்

சில மாணவர்களிடம் ஏராளமான ஆற்றல் இருக்கலாம், ஆனால் பயன்பாடுத்தும் திறமை ரொம்பக் குறைவு. கேடு விளைவிக்ககூடிய இப்படிப்பட்ட சூழ்நிலை மட்டும் இல்லை என்றால், அவர்களுக்கு முழு ஆற்றலையும் நிச்சையம் வெளிபடுத்துவார்கள்.
முதலாவதாக, ஒடுக்கப்பட்டவர்கள் மனநோய்க்குத் தள்ளப்படும் பிரச்சனை உள்ளது என்றும், இதை எடுத்துப் போராட வேண்டியுள்ளது என்றும் அங்க்கீகரிக்க வேண்டும்; பிறகு அதை பற்றி ஆழமாக ஆய்வு செய்யவேண்டும். “தீர்ப்புகள் இதற்க்கு நிச்சயம் உண்டு, சூழ்நிலை பற்றிய விழிப்போடிருப்பது, படிப்புக்கான ஆதாரங்க்களை அதிகம் படிக்கும் வாய்ப்பு ஏற்படுதுவது, சாதியம் பாராட்டும் வெறிகொண்ட பேராசிரியர்கள் தண்டிக்கப்படுவது இவை எல்லாம் தீர்வுகள் தானே? இவை பற்றி எல்லாம் ஆழமாக ஆராயப்படவேண்டும்.”
“இந்தியா நிர்வாக வணிக இயலுக்கான ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த (IIMB) தீபக் மாலகான், மெல்ல மெல்ல சில நிறுவனங்களில் இதைச் சிந்திதார்கள், கவனித்தார்கள். “இந்தியா நிர்வாக இயல் நிறுவனம் (IIM) முனைவர் பட்ட மாணவர்கள் ஆலோசிப்பதற்க்காகவும், தொடர்பு கொள்ளஆன்லைன் வசதியும் ஏற்படுத்த பட்டுள்ளது. தாங்க்கல் படும் பாட்டையெல்லாம் எதிர்த்து உறுதியான மாணவர்கள் முன்வந்து பேச உதவியாக ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இது இரண்டாவது நடைமுறைக்கு போக வேண்டியதாகும்.” என்றார் தீபக்.
“மன நல மருத்துவர்களை சந்திப்பதற்க்கு ஒடுக்கப்பட்ட மாணவர் பலர் தயாங்க்க்கினார்கள், ஆதித்யா பயிலும் பல்கலைக்கழகத்தில் தனி மருத்துவமனை உண்டு; அங்கு சென்று உதவிகள் பெறமுடியும். ஆனால் அவர் அங்கே சேவதில்லை. மேலும், அங்கே ஆலோசனை மற்றும் பணி செய்பவர் ஆதிக்கச் சாதி மருத்துவர் என்றால் நான் அனுபவிக்கும் மன வேதனைய் அவர் புரிந்துகொள்ள போவதில்லை.” என்றார் தீபக். ஒரு சில மாணவர்கள் மட்டும் தாங்களாகவே தீர்வுக்கான வழிமுறைகளை உருவாக்கி ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டார்கள்.
“எனக்கொரு நண்பர் உண்டு. அவரும் குற்றப்பரம்பரை என்று முத்திரை இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்தான். அவரிடம் எல்லாவற்றையும் மனம் திறந்து நான் பேசுவேன். அதுவே எனக்கு நோய்தீர்க்கும் முறையாக மாறியது.”
மருத்துவர் பத்தாரே இப்படி தயக்கப்படும் மாணவர்களை சந்தித்திருக்கிறார். தங்களைப் பற்றிய ரகசியம் எல்லாம் வெளியே தெரிந்துவிடும். நிர்வாகத்தின் காதுகளை எட்டிவிடும் என்று அவர்கள் பீதியடைந்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறார் பத்தாரே. வளாகத்துக்கு வெளியே தனிப்பட்ட ஆலோசகரைச் சந்திப்பதற்கு ஏகப்பட்ட செலவாகும். அது பிரச்சினைதான் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.ஜனவரி 2022-ல் களரிக்கல் அவரது சாதிவெறி செயலுக்காக பதவிநீக்கம் செய்யப்பட்டபிறகு தீபா வளாகத்துக்கு திரும்ப வந்தார். “ஒரு வழியாக நான் முறையாக ஆய்வுப் படிப்பைத் தொடர்ந்தேன்” என்றார் தீபா.
அவர் பட்ட வேதனைகளுக்காகவே ஒரு மனநல மருத்துவரை அவசியம் பார்க்கவேண்டும் என்று நண்பர்கள் மற்றும் வீட்டார் வலியுறுத்தினார்கள். ” இது மட்டுமில்லை எனக்கு இதயநோயும் உண்டு. சில ஆண்டுகளாகவே கவலையும் ஏக்கமும் தொடர்ந்து தாக்கியதால் இதயநோய் அதிகமாகிவிட்டது” என்கிறார் தீபா.”என் நண்பர் ஒரு மனநல மருத்துவர். அவருடன் அவ்வப்போது பேசுவேன். ஆனால் நேரமில்லை, ஆலோசனை வழங்கும் மருத்துவருக்கு கொடுக்க பணமும் இல்லை” என்று அவரே தொடர்ந்து விளக்கினார். கடந்த சில மாதங்களாக பல்வேறு பல்கலைக்கழக வளாக மாணவர்கள் இவரைத் தொடர்பு கொண்டார்கள். “மனதை எழுதிக்கொண்டிருக்கும் வேதனையை வெளியே சொல்வதே சரியானதென்று அவர்களுக்கு நான் சொன்னேன். மெளனமாக இருப்பது ஒரு பிரச்சினையையும் தீர்க்காது.”
குறிப்பு 1:
இப்படிப்பட்ட அறிக்கைகள் அடித்தள செயல்முறை திட்டத்தின்கீழ் (The Ground Truth Project) வெளி உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே வெளியிடப்படுகின்றன.
குறிப்பு 2:
SCROOL.IN செய்தி நிறுவனத்தின் டிஜிட்டல் வளகச் செய்திக் கருவூலத்திலிருந்து இந்த ஆய்வு வெளியிடப்படுகிறது.
நன்றி:
SCROOL.IN./09.03.2022
மொழியாக்கம்: இராசவேல்.