சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் கூறுகின்ற நாத்திகர்களும்         தேசத்துரோகிகளும்;


ண்பர்களே!….

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலும் இந்தியாவின் அரசியல் வரலாற்றிலும் மதத்தின் அடிப்படையிலான அரசியல் நிர்வாகம் என்பது சுமார் 2000 ஆண்டுகளாக மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது..
இந்த வகையில் அரசியலானது மதத்தைப் பயன்படுத்தி செயல்படுத்திய நிர்வாக நடவடிக்கைகளை கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

1. பொதுமக்களை எப்பொழுதும் முட்டாள்களாக வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடியும். அதற்கு பல வழிகள் உள்ளன. மிகச் சிறந்த வழி என்பது பொதுமக்களை மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளில் மேலும் மேலும் ஈடுபடும்படி ஊக்குவிப்பதுதான். இதற்கு துணையாக மந்திர தந்திரங்கள் போன்ற விசயங்களையும் மதத்துடனும் கடவுளுடனும் இணைத்துப் பரப்ப வேண்டும். இதைச் செயல்படுத்தும் ஊழியர்களாக மந்திரவாதிகள், குடுகுடுப்பைகாரர்கள், சோதிடர்கள், மதத்துறவிகள் போன்றவர்களை அரசு ஊழியர்களாகவே சேர்த்து கொள்ள வேண்டும். ( இன்றைய காலத்தில் சினிமா நடிகர்கள், ஜாதித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், நவீன ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.)

2. ஆனால் அரசன் என்பவன் மதம் கடவுள் சார்ந்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கக் கூடாது. அதே சமயம் பொதுமக்களை இத்தகைய நம்பிக்கைகளில் மேலும் மேலும் மூழ்கும்படி அரசன் தூண்டிக் கொண்டு இருக்க வேண்டும். எந்த அரசன் இதனை செம்மையாகச் செயல்படுத்துகிறானோ அந்த நாட்டின் கஜானா நிரம்பி வழியும். அதே நேரத்தில் இந்த நடவடிக்கைகளின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் விமர்சிக்கும் அறிவாளிகளை ”நாத்திகர்கள்” என்றும் ”தேசத் துரோகிகள்” என்றும் குற்றம்சாட்டி பொதுமக்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அப்படியும் அடங்காதவர்களை தன்னுடைய ஒற்றர்களை வைத்து கொன்று விட வேண்டும். அத்தகையவர்கள் தெய்வக் குற்றம் செய்ததால் கடவுளால் தண்டிக்கப்பட்டார்கள் என்று ஒற்றர்கள் வைத்து வதந்திகளை பொதுமக்களிடம் பரப்ப வேண்டும்.

படிக்க:

 சூத்திரன் சுடுகாட்டிற்குச் சமமானவன்! – தினகரன் செல்லையா

பார்ப்பன மதவெறி தூண்டப்படும் கர்நாடகத்திலிருந்து எழுந்துள்ள  போர்க்குரல்!

இதுபோன்ற பல்வேறு செய்திகளை பேராசிரியர் R.S.சர்மா ”பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் – சில தோற்றங்கள்” (ASPECTS OF POLITICAL IDEAS AND INSTITUTIONS IN ANCIENT INDIA) என்ற புத்தகத்தில் 13 வது அத்தியாயத்தில் மிக அழகாகத் தொகுத்து தருகிறார். இன்னும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்ட நண்பர்கள் இந்நூலை முழுமையாகப் படிக்கலாம். இந்நூலை NCBH வெளியிட்டுள்ளது. ((சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.))

குறிப்பு:
நண்பர்களே…. இன்று பல தோழர்கள் இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்பொழுது (06.04.2018) தருவதற்கு வாய்ப்பில்லாத இந்த நூலின் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். தரவிறக்கம் செய்து படிக்கவும்.
( அர்த்தசாஸ்திரம் நூல் முழுவதும் ஒரே நூலாக வெளியிடப்பட்டுள்ளது.)

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0014683_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf

நன்றி:
ஆய்வாளர் பொ.வேல்சாமி.
முக நூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here