பார்ப்பன மதவெறி தூண்டப்படும் கர்நாடகத்திலிருந்து எழுந்துள்ள                        போர்க்குரல்!


“நான் இந்து அல்ல, நான் ஒரு லிங்காயத்து”கும்வீ என்று அழைக்கப்படும் வீரபத்ரப்பா அறிவிப்பு!

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் சிந்தனையாளர் மேடை, காந்தி பவன், பெங்களூரில் வீரபத்ரப்பா பேசியது.

“நான் ஏற்கனவே ஓர் இந்து அல்ல என்று அறிவித்து விட்டேன். நான் ஒரு லிங்காயத்து” – மூத்த எழுத்தாளர் வீரபத்ரப்பா மேடையில் அறிவித்துள்ளார்.

வீரபத்ரப்பா

“மதங்களுக்கு இடையிலான ஒத்திசைவு” என்ற கருத்தரங்கில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.“இந்தியாவில் 12,000 சாதிகள் உள்ளன; இதேபோலவே பல பண்பாட்டு பிரிவுகள் உள்ளன. வேறு எங்கும் இவ்வாறு இல்லை எனவே எங்களை எல்லாம் சேர்த்து ‘இந்துக்கள்’ என்று அழைக்காதீர்கள்” என்றார் அவர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மத இணக்கம் என்பதற்கு ஒரு சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்,  வருடாந்திர விழா ஒன்றில் ஒரு முறை இரண்டு வயது நிரம்பிய நிஜலிங்கசாமி என்ற சிறுவன் காணாமல் போய் 22 ஆண்டுகள் கழித்து உஸ்மான் என்ற இஸ்லாமியர் வீட்டில் திரும்ப கண்டுபிடிக்கப்பட்டான் இந்த பையன் இந்து பழக்கவழக்கங்களில் வளர்க்கப்பட்டவன் என்று அறிந்து பெயரைக் கூட மாற்றாமல் அந்த முஸ்லீம் பெரியவர் வளர்த்து ஆளாக்கி இருந்தார் “இதுதான் உண்மை  இந்தியா” என்றார் வீரபத்ரப்பா.

‘இந்துப்புனித உருக்களை’ (Hindu Icon)  கோல்வாக்கர், நாதுராம் கோட்சே, ஹெட்கேவார் போன்றோரின் ஆவிகளை எழுப்பி பரப்பி மக்களில் பலரை வேட்டையாடி வரும் பித்தலாட்ட வெறியை அவர் சரமாரியாக விமர்சித்தார், அந்த வெறியர்கள் மீது புனித உருக்களின் ஆவேசம் ஏறிவிட்டால் முஸ்லிம்களுக்கு எதிராக விழும் அறிக்கைகள் சரமாரியாக பறக்கும். தேஜஸ்விசூர்யா என்ற பாஜக எம்பி நல்லவர், மெத்தப் படித்தவர் மேற்படி ஆவிகள் அவருக்குள் புகுந்து விட்டால் வேறு மாதிரி பேச ஆரம்பித்து விடுவார். அதேபோல பசனகவுடா பட்டீல் யத்னஸ்  விஜயபுராணபைச் சேர்ந்த பாஜக தலைவர். இதுபோல முஸ்லீமை விமர்சித்து சாமியாடி விடுவார்.

ஆனால் கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் வேறு விளக்கம் கொடுத்தார். “மக்களின் துயரங்களை கேட்கவே மதம் பிறந்தது, ஒடுக்கப்பட்டவரின் குரல்களே மதம்” என்று அவர் சமீபத்தில் பேசினார். அவர் மேலும் பேசியதாவது, “காஷ்மீரில் 92 சதவீத முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் முஸ்லிம் பெண்கள் பர்தா போடுவதில்லை குங்கும பொட்டு வைப்பது, தாடி வளர்ப்பது எல்லாமே மத அடிப்படைவாதம்தான். அவற்றை நாம் எதிர்க்க வேண்டும் அதற்காக மதங்களை எதிராக சொல்லவில்லை மதங்களில் உள்ள ஜனநாயக அம்சங்களை அப்புறப்படுத்துவது நீக்கி வருவதையே நாம் எதிர்க்க வேண்டும்” என்றார் நாக மோகன்தாஸ், வெறியர்களின் நடுவே இப்படி ஜனநாயக குரல்களும் உள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் பி.என்.ஹனீப் ஊடகங்கள் எல்லாம் டெலிவிஷன் ரேட்டிங் (TRP) மதிப்பின் பின்னால் ஓடுகின்றன என்று வேதனைப்பட்டார். தனக்கென இஸ்லாமிய சிறுமிகள் ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கூடம் போகிறார்களே அதை ஏன் ஊடகம் எடுத்து சொல்லவில்லை என்று கேட்டார் அவர். “மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு போனால் படிப்பின் தரம் குறைந்து விடாது, அதேபோல, மாணவிகள் ஹிஜாப் அணியாமல் வகுப்புக்கு சென்றால் இஸ்லாத்தின் புனிதம் தாழ்ந்து போவாது” என்றார் ஹனீப். இந்து மத வெறியன் கட்டாயப்படுத்தி சட்டமாக்கியதே பிரச்சனைக்கு காரணம் என்பதே ஹனீபின் வாதம்.

படிக்க:

 ஹிஜாப் தடை: முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பறிப்பு!

 காஷ்மீர் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் kashmir Files!

வீரபத்ரப்பா நாட்டின் நிலைமையை சற்று பார்க்க சொல்கிறார், “லட்சக்கணக்கான  இளைஞர்களுக்கு,  மக்களுக்கு வேலை இல்லை. ஆலைகளுக்கு மூடு விழா நடைபெறுகிறது, ஊடகங்கள் இதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அரசு பல லட்சம் கோடிகள் கடனுக்கு மேல் கடன் வாங்கி விட்டார்கள். (என்ன நடக்கிறது இங்கே?) “

“ஆஸ்பத்திரி போறிங்க எனக்கு இந்து ரத்தம் கொடு என்றால் இரத்த வங்கியில் அப்படி கொடுப்பார்களா!” என்று பளிச்சென்று கேட்கிறார் வீரபத்ரப்பா.(மேலே சொன்ன கருத்தரங்கில் சௌமியானந்தா சாமி, மப்டி மொஹம்மது அலி, அருட்தந்தை செராள் விக்டர் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் H.D. குமாரசாமி ஆகியோரும் பங்கெடுத்தார்கள்.)

(வீரபத்ரப்ப, ‘கும்வீ’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், விமர்சகர், ‘அரமணே’ என்ற படைப்பிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்).

செய்தி ஆதாரம்:

gaurilankeshnews.com/i-am-no-hindu-i-am-a-lingayat-declares-veteran-writer-kum-veerabhadrappa/

தமிழில்: இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here