ப்ரல் 3ஆம் தேதியன்று டெல்லியில் புராரி என்ற இடத்தில் கூட்டப்பட்ட மகா பஞ்சாயத்து என்ற நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற 5 பத்திரிக்கையாளர்கள் கொடூரமான முறையில் ( அதில் நான்கு பேர் இஸ்லாமிய பத்திரிக்கையாளர்கள்) தாக்கப்பட்டுள்ளனர்.

இந்து மத வெறியர்கள் தாக்கும்போது இவர்களை “ஜிகாதிகள்” என்று வசை பாடிக் கொண்டே தாக்கியுள்ளனர். அந்த பாசிச கொலை கும்பலின் தாக்குதலுக்குள்ளான போது நாங்கள் இந்த கும்பலால் கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சியதாக ஒரு பத்திரிக்கையாளர் பின்னர் தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்க காவல்நிலையத்தில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள்.

இதிலிருந்தே இந்த தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்து மதவெறியர்கள் பத்திரிகையாளர்களை தாக்கியது மட்டுமின்றி அவர்களின் போட்டோ- வீடியோ கேமராக்களையும் பறித்து அதில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் அழித்துள்ளனர்.

தாக்கியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள்பல மணி நேரம் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸாரிடம் போராடியும் எப்ஐஆர் போடப்படவில்லை.

தனது ஆபாச வக்கிர, பார்ப்பனத் திமிர், கொலைவெறி ஆகியவற்றை கவர்ச்சிகரமாக பேசியே சாமியாரான ஆதி நரசிங்கநாத் -ன் சீடரான பிரீத் சிங் என்பவர்தான் இந்தியாவை காப்போம் என்ற அமைப்பின் பெயரில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

  1. “இன்னும் 20 ஆண்டுகளில் 40 சதவீத இந்துக்கள் கொல்லப்படுவார்கள். இதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு இந்துவாக, ஆயுதமேந்திய மனிதராக நீங்கள் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் பார்ப்பன பயங்கரவாதியான ஆதிநரசிங்கநாத்.

இந்தியாவை காப்போம் என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பு கடந்த ஆண்டு ஜந்தர் மந்தரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் இந்த அமைப்பின் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

படிக்க:

♦ ஆர். எஸ்.எஸ் கும்பலின் இசுலாமிய வெறுப்பு! வன்முறைக்கு தயார்.

மத்தியில் பார்ப்பன பயங்கரவாதி மோடி தலைமையிலான அரசு பதவியில் இருப்பதால் இதைப்பற்றி எல்லாம் இவர்கள் சிறிதும் அலட்டிக்கொள்வதில்லை. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களை கொல்வதற்காக மக்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு இடையூறாகவரும் பத்திரிக்கையாளர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாடு சுடுகாடாக மாறுவதற்கு விடக்கூடாது. மக்கள் தங்கள் மௌனத்தை கலைக்க வேண்டும். பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.

பாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here