தடைகளை தகர்த்தெறிந்து
மீண்டும் வெளிவருகிறது புதிய ஜனநாயகம்!
ஆதரவு தாரீர்!


அன்பார்ந்த வாசகத் தோழர்களே!

2020 டிசம்பர் மாதம் வரை, சர்வதேச விடயங்கள் துவங்கி உள்நாட்டு விடயங்கள் வரை மார்க்சிய – லெனினிய வர்க்கப் பார்வையில் அவதானித்து அதன் ஒளியில் தமிழகத்திலும் தமிழ் பேசும் உலகத் தமிழர்கள் மத்தியிலும் புரட்சிகர அரசியலைப் பரப்பி வந்த புதிய ஜனநாயகம் இதழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நின்று போனது.

புரட்சிகர அமைப்பின் அரசியல் முகமாக அறியப்பட்ட புதிய ஜனநாயகம் இதழ் அதன் அரசியல் தலைமையில் இருந்த சிலரின் அதிகாரத்துவ போக்கினால் நின்று போனது. சமூகத்திற்கு “புதிய ஜனநாயகத்தை” முன்வைக்கின்ற அவர்களே ஜனநாயக மறுப்பு – அதிகாரத்துவம் போன்ற மார்க்சிய விரோத போக்கிற்கு ஆளாகி சீரழிந்து போயினர். மார்க்சிய – லெனினிய அரசியலுக்கு விரோதமான வலது திசைவிலகல் மற்றும் அதன் எதிர் நிலையான இடது தீவிர போக்குகளைக் கொண்ட சிறு குழுவாக மாறினர்.

இதனை ஏற்காத ஆசிரியர் குழுவில் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த சிலர் 2019 அக்டோபர் மாதத்திலேயே அதன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டனர். அதன் பிறகு மேலும் சில தோழர்களும் ஆசிரியர் குழுவில் இருந்து விலகினர்.

இந்தச் சூழலை ‘நல்வாய்ப்பாக’ பயன்படுத்திய முன்னாள் ஆசிரியர் சண்முகராசு உள்ளிட்ட சிலர் எமது அரசியல் வெகுஜன பத்திரிக்கை, தனது பெயரில் இருந்ததால் அதைக் கைப்பற்றிக்கொண்டனர். மேலே கூறிய சித்தாந்த கண்ணோட்டத்தில் எதிரிகள் யார், நண்பர்கள் யார், நட்பு மற்றும் பகை முரண்பாடு குறித்த வறட்டுப் பார்வையுடன் பல கட்டுரைகளை எழுதி, புதிய ஜனநாயகம் இதழுக்கு இழிவைத் தேடித் தந்து வருகின்றனர்.

தோழர் லெனின், என்ன செய்ய வேண்டும் நூலில் ஒரு பத்திரிக்கைக்கு உரிய கடமைகளாக முன்வைத்த பிரச்சாரகன், அமைப்பாளன், கிளர்ச்சியாளன் மற்றும் சித்தாந்த வழிகாட்டி என்ற கடமையை 1985 முதல் தொடர்ந்து செய்து கொண்டு, தமிழகத்தில் மார்க்சிய-லெனினிய அமைப்பின் தனி அடையாளமாக வெளி வந்து கொண்டிருந்த எமது அரசியல் வெகுஜன பத்திரிக்கையானது தொடர்ந்து தனது கடமையை ஆற்றும் என உறுதியளிக்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழை சிலர் கைப்பற்றுவதற்கு துணை நின்ற புதிய ஜனநாயகத்தின் ஆசிரியராக செயலாற்றிய சண்முகராசுவை எமது இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்குகிறோம். மேலும் புதிய ஜனநாயகம் இதழ் இனி புதிய ஆசிரியர் பொறுப்பு மற்றும் முகவரியிலிருந்து வெளிவரும் என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசம் நாடு முழுவதும் பயங்கரவாத அடக்குமுறைகளை வெளிப்படுத்திக் கொண்டு ஏறித்தாகி வரும் இந்த சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் ஆயுதமாக மீண்டும் புதிய ஜனநாயகம் வெளி வருகிறது.

இதழை முறையாகவும், போராட்ட முன்னணியாளனாகவும் கொண்டு வர மே 5, 2022, பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தில் சூளுரைக்கிறோம். மே மாதம் முதல் மாத இதழாக வெளிவர உள்ளது புதிய ஜனநாயகம். தற்காலிகமாக எமது இதழ் நின்று போனதற்கு அரசியல் முன் முயற்சியில் பின்தங்கியுள்ளதையும், அதனால் வாசகர்களுக்கு ஏற்பட்ட இழப்பையும்  நாங்கள் சுய விமர்சனமாக உணர்கிறோம்.

அமெரிக்க வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழ் உலகம் புதியதொரு பரிமாணத்தை அடைந்துள்ளது. 2008 பொருளாதார நெருக்கடிக்கு பின் மீண்டும் எழவே முடியாத ஏகாதிபத்திய முதலாளித்துவம் சொல்லிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தையே, அரசியலாக உலகம் முழுவதும் மக்களின் முன் தள்ளுகிறது.

அதன் வெளிப்பாடாக இந்தியா மறுகாலனியாக்கத்தின் தீவிரத்தன்மையை அடைந்துள்ளது. அந்த வகையில் மறுகாலனியாக்கத்தை இந்தியாவில் திணிக்கின்ற கார்ப்பரேட்-காவிப் பாசிசம் நாட்டின் பொது எதிரியாக மாறியுள்ளது.

கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் இந்த சூழலில் பரந்துபட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் முனைவர்கள், அறிவுஜீவிகள், தேசிய முதலாளிகள் மற்றும் பாசிசத்தை எதிர்க்கும் தரகு முதலாளிகளின் ஒரு பிரிவையும் உள்ளடக்கிய ஜனநாயக கூட்டரசை நிறுவுவதை நோக்கி முன்னேறுவோம். புதிய ஜனநாயகப் புரட்சிக்கு இடைக்கட்டமாக முன் வைக்கப்படும் ஜனநாயக கூட்டரசை நிறுவுவதுடன் நில்லாமல் புதிய ஜனநாயகப் புரட்சிக்கும், சோசலிச லட்சியத்திற்கும் புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளிக்கிறோம்.

வழக்கம் போலவே வாசகர்கள், விற்பனை முகவர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் தமது ஆதரவை தொடர்ந்து அளிக்கும்படி வேண்டுகிறோம்.

05-05-2022.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

 

15 COMMENTS

  1. வாழ்த்துக்கள்….
    மிக்க மகிழ்ச்சி….
    மார்க்ஸின் பிறந்த நாளில் நல்லதோர் செய்தி…

  2. வாழ்த்துகள் ! புரட்சிகர அரசியலை வீச்சாக எடுத்து செல்ல எமக்கு ஒர் ஆயுதத்தை தரும் எமது தலைமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  3. மருதையன் கோமாவில் இருந்து திரும்பிவிட்டார்…. ,

    இதுக்கு பருத்திமூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்

    • தாங்கள் எல்லாம் தெரிந்த ஞானி போலிருக்கு. மருதையனை தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது. இப்படி தான் இவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்கள்.

      எது நடந்தாலும் மருதையன் தான் காரணமா? மருதையன் மட்டுமல்ல வேறு யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமைப்பு செயல்படும். அதற்கு கொள்கை என்ற தலைவன் இருந்தால் போதும்.

      மருதையன் எல்லாம் தெரிந்தவர் என தாங்கள் நினைத்திருக்கலாம். ஒரு நபரை நம்பி அமைப்பை நடத்துவது சீரழிவுக்கே வழிவகுக்கும் என்பது எங்களது கடந்த கால அனுபவம்.

  4. அடிமையாய் வாழ்ந்து பழகியவர்களுக்கு ,பார்ப்பவர்களை யெல்லாம் நம்மை போன்றவர்கள் என்று தோன்றுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

  5. போங்கடா டேய், கடுப்புகள ஏத்திகிட்டு இருக்கிங்க. கிரிமினல் கும்பலாக சீரழிந்து நூற்றுக்கணக்கான தோழர்களின் தியாகத்தில் மலத்தை வாரி அடித்து விட்டு, கட்சியை பிளந்து நாசம் செய்து விட்டு இப்போது இரண்டு குரூப்பும் பத்தினி வேசம் போட்டு போட்டியில் அமைப்பு – பத்திரிக்கை அனைத்தையும் இரண்டு இரண்டா நடத்திகிட்டு இருக்கீங்க இது கேவலமா தெரியல உங்களுக்கு ? தயவு செய்து ஆசான்கள் பெயரை பயண்படுத்த வேண்டாம்.. மார்க்சிய-லெனினியம் சொற் சொடரை பயன்படுத்த வேண்டாம். அந்த யோக்கியதை உங்களுக்கு இல்லை.

  6. இங்கே பின்னூட்டம் போட்ட சிலர் அவர்களின் அறிவு மட்டத்தையும் சமூகத்தின் மீது அவர்களுக்கு உள்ள ‘அக்கறையையும்’ காட்டியுள்ளனர்.
    காத்திருந்து பாருங்கள் இவ்வாறு பின்னூட்டம் போட்ட சிலர் விரைவில் ஆர் எஸ் எஸ் குண்டர் படையில் இணைந்து கொள்ள வாய்ப்புள்ளது.

  7. ஓட்டு பொறுக்கிகள் பின் வாலான பின்பு இது தேவையா.?

    முரசொலி பத்திரிக்கையில போட மாட்டேனுட்டானுகளோ….

  8. இப்படியே குழப்பத்தில் அடிச்சுக்கிட்டு செத்துடாதிங்க…….

    அதுக்கு தான்

    காவிப்படை உள்ளதே…..

  9. புரியலை சாமியோய் யார் அசல் யார் நகல்?
    முதலில் உங்கள் ஏஜெண்டா என்னே?
    மார்க்சிய லெனினியம் எங்கின்றீர் அவை உங்களிடம் உள்ளதா?
    அப்படியே மா-லெ தூக்கி பிடிப்பவர்கள் தங்களின் தவறுகளை ஒழிவு மறைவு இன்றி பேச துணிவில்லாமை ஏன்?
    உங்களால் பாதிக்கப் பட்டு சிவப்பை கண்டே கோவம் கொண்டுள்ள உங்கள் அணியினரை பற்றி உங்கள் மதிப்பீடு என்னே? ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்துக் கொண்டு அல்லாடும் அமைப்பு தோழர்களுக்கு உங்கள் அமைப்பு என்ன செய்துக் கொண்டுள்ளது?

  10. ஆசிரியர் குழுவில் இருந்து வெளியேறிய பிறகு சில ஆண்டுகள் கழித்து அந்த பத்திரிக்கையை சொந்தம் கொண்டாட எங்கிருந்து வந்தது உணர்வு சில பேர்வழிகள் தாங்கள் இல்லாமல் பத்திரிகையோ அமைப்போ நடைபெறாது என்ற ஆணவத்தை உடைத்தெறிந்துதோழர்களின் அர்ப்பணிப்போடு புதிய ஜனநாயகம் மாத இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது “கேட்கிறவன் கேனயனா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்” காலம் முடிவு செய்யட்டும் எது நக்சல்பாரி பாரம்பரிய அமைப்பு என்பதை

  11. வாக்களி ! வாக்களி! னு பாடுன, கூவுன பயகதான் புரட்சி பன்ன போகிறார்கள்… நம்புங்கள்….

    கேலிக்கூத்து….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here