ங்களின் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் கோவில் பூசாரிகளுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்!? ஆம். இந்தியாவை ஆளும் பாசிச பாஜக சிஏஏ சட்டத்தின் மூலம் குடியுரிமையை தீர்மானிக்கும் மதச் சான்றிதழை பார்ப்பனர்கள் வழங்கலாம் என்று கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி விளக்கம் அளித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பு என் ஜி ஓ சான்றிதழை விநியோகித்துள்ளது. ராஜஸ்தானில் சங் பரிவார அமைப்பின் துணை அமைப்பான சீமாஜன் கல்யாண் சமிதி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது.

இதில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வேண்டுமானால், தான் இந்து மதத்தை சார்ந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கான சான்றிதழை கோவில் பார்ப்பனர்கள் அளிக்கலாம் என்கிறது பாசிச பாஜக அரசு.

இது குறித்து தேசிய ஊடகமான ‘தி ஹிந்து’ செய்தியை வெளியிட்டுள்ளது ராஜஸ்தானின் பாகிஸ்தான் எல்லையான ஜெய்  சால்மர், பார்மர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் இந்த ‘உதவி மையம்’ நடத்தப்படுகிறது. இதுகுறித்து பேசிய சீமாஜன் கல்யாண் சமிதி தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ள போர்ட்டல் மூலம் சுமார் 330 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

போர்ட்டல் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது உள்ளூரில் அங்கீகரிக்கப்பட்ட சமூக அமைப்பினால் சான்று அளிக்கப்பட்ட சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பிரமாண பத்திரம் மற்றும் பிற ஆவணங்களுடன், தான் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவன் என்ற சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் இந்த சான்றிதழை தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீமாஜன் கல்யாண் சமிதி  ராஜஸ்தான் கிளை வழங்கி உள்ளது.

சீமாஜன் கல்யாண் சமிதி  உறுப்பினரும் வழக்கறிஞருமான விக்ரம் சிங் ராஜ்புரோஹித் இது பதிவு செய்யப்பட்ட அமைப்பு, எனவே சான்றிதழை வழங்க அதிகாரம் உள்ளது என்று கூறுகிறார்.

சீமாஜன் கல்யாண் சமிதி பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்பதினால் அதிகாரம் வழங்கப்படவில்லை. இது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பதினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் எவ்வளவோ பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இதனை செய்ய வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது.

சீமாஜன் கல்யாண சமிதி என்பது 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸின் NGO அமைப்பாகும். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களின் (இந்துக்களின்) பிரச்சினைகளை தீர்ப்பது இந்த அமைப்பு நிறுவப்பட்ட நோக்கமாகும்.

யார் இந்து, யார் இந்தியாவின் குடிமகன் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஒரு ஆர்எஸ்எஸ் அமைப்பின் கையில் உள்ளது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் இந்திய குடியுரிமையை தீர்மானிப்பது ஆர்எஸ்எஸ் தான் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை ஒப்படைத்ததற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகாய் இப்போது ஆர்எஸ்எஸ் – பாஜக யார் இந்து, யார் இந்திய குடிமகன் ஆவதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. சிஏஏ அறிவிப்பு வெளிவந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் மர்மமான வெளிப்பாடுகள் வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள்: 

ஆர்எஸ்எஸ் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சுருக்கி விட முடியாது. அது இந்துத்துவ பயங்கரவாதிகளை கொண்ட அமைப்பு. இந்த அமைப்புதான் யார் இந்திய குடிமகனாக இருக்க முடியும் என்பதை தீர்மானிக்கும் என்றால் இதுதான் பேராபத்து. இந்துராஷ்டத்தின் தொடக்கம் என்றே கூறலாம்.

சிஏஏ தனது உண்மையான முகத்தை காட்ட துவங்கியுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. உழைக்கின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும் எதிரான சட்டமே.

நாளை நம்மை இந்துவா இல்லையா என்று தீர்மானிக்கும் உரிமையும் ஆர்எஸ்எஸ் பார்ப்பன கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டு. இந்து என்ற சான்றிதழை வழங்கப் போவது கோவில் பூசாரி தான். ஆனால், அவர் அய்யனார் கோவில் பூசாரி அல்ல பார்ப்பன பூசாரி என்று கூறப்படலாம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்தால் நாம் இந்து என்பது நிரூபிக்க ஆர்.எஸ்.எஸ் தான் ஒரே அத்தாரிட்டி என்று மோடி கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால் தான் பாஜக மீண்டும் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here