மே நாளில் சூளுரைப்போம்!


ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள், இயக்கங்கள், ஆகியோர்களுடன் ஆளும்வர்க்கத்தின் பாசிசத்திற்கு எதிரான பிரிவையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை நிறுவுவதற்கும் அதன்மூலம் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்திவிட்டு ஜனநாயக கூட்டரசு ஒன்றை இடைக்காலமாக நிறுவுவதற்கும் வேலை செய்யும்போதே அதற்கு இணையாக பரந்துபட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு- குறு தொழில் முனைவோர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு போரில் அடித்தளமாக விளங்குகின்ற அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டுவதற்கும், அதன்மூலம் சாத்தியமான இடங்களில் பாசிச எதிர்ப்பு செயல் திட்டத்தை அமல்படுத்துவதும் பாட்டாளி வர்க்கத்தின் உடனடி கடமையாகிறது.

அத்தகைய தொலைநோக்கு கண்ணோட்டத்தில் இருந்து மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளையும், நட்பு சக்தியாக உள்ள தொழிற் சங்கங்களையும் ஒன்றிணைத்து மே தினத்தை தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்பினர் நடத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மதுரை (போடிநாயக்கனூர்), திருச்சி, கோவை, சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மையங்களில் திரளான உழைக்கும் மக்களை திரட்டி மே தின பேரணி- ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளது.

கோவை:

மக்களின் வாழ்வை சூறையாடும் பாசிச பா.ஜ.க-வின் கார்ப்பரேட் ‘காட்’டாட்சிக்கு முடிவு கட்டுவோம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து இன்று மே 1 கோவையில் பேரணி ஆர்ப்பாட்டம் மகஇக, விவிமு, பு.மா.இ.மு. புஜதொமு சார்பாக நடைப் பெற்றது.

புதுச்சேரி

மக்களின் வாழ்வை சூரையாடும் பாசிச பா.ஜ.க-வின் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து புதுச்சேரியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் விவிமு, புமாஇமு, புஜதொமு சார்பாக
நடைபெற்றது..

சென்னை, கும்மிடிபூண்டி

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து கும்மிடிப்பூண்டியில் பேரணி – பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் ராஜேஷ் தலைமையில் மாலை 4:30 மணி அளவில் பறை முழக்கத்துடன் பேரணி துவங்கியது. ரெட்டம்பேடு சாலை முதல் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை தொழிலாளர் நல சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும், மதவெறி இனவெறியை தூண்டும் காவி பாசிசத்திற்கு எதிராகவும் விண்ணதிர முழக்கங்களுடன், பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணி நடத்தப்பட்டது.

திருச்சி

மே நாளில் சூளுரைப்போம்!

மக்களின் வாழ்வை சூறையாடும் பாசிச பா.ஜ.க-வின் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து திருச்சியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் விவிமு, புமாஇமு, புஜதொமு மகஇக சார்பாக
நடைபெற்றது…

இதில் மாணவர் , மீனவர் , தொழிலாளி , விவசாயி என நான்கு துறை கழுத்தில் தூக்குகயிறு போட்டு கார்ப்பரேட் இழுப்பது போல் நூதன வடிவில் வேடங்கள் அணிந்தும் , பிரச்சாரம் செய்யப்பட்டது .

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் தேச மக்கள் முன்னணி, விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் பங்கெடுத்தனர்

மதுரை ( போடிநாயக்கனூர்)

விவசாயிகள் விடுதலை முன்னணி..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
ஆகிய அமைப்புகளின் சார்பாக மே1பேரணி ஆர்ப்பாட்டம் போடியில் சிறப்பாக நடந்து முடிந்தது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here