கருத்தரங்கம்:
பிப் 5 ம் தேதி
ஞாயிறு
காலை 10.00 மணி
ரிப்போர்ட்டர் கில்டு
சேப்பாக்கம்
சென்னை
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
S. ஜிம்ராஜ் மில்ட்டன், வழக்கறிஞர்
ம. உ.பா.மையம்
கருத்துரை:
நீதிபதி. D. அரி பரந்தாமன் (ஓய்வு)
சென்னை உயர்நீதிமன்றம்
நீதிபதி. G. M. அக்பர் அலி (ஓய்வு)
சென்னை உயர்நீதிமன்றம்
இரா. வைகை, மூத்த வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
S. வாஞ்சிநாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ம. உ. பா. மையம்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.(PRPC)
ஒன்றிய மோடி அரசு நாட்டின் அனைத்து அரசு கட்டுமானங்களையும் கார்ப்பரேட்-காவி பாசிசமயமாக்கும் முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக நீதித்துறையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் செல்லாது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் நீதிபதிகள் நியமனத்தை தொடர்ந்து கிடப்பில் போடுவதை செய்து வருகிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை சிதைக்கிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, காஷ்மீர் 370 சட்டம் ரத்து, குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலை எனப் பல வழக்குகளில் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு ஆதரவாகவே நீதித்துறை செயல்படுவதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், தங்கள் பாசிச நடவடிக்கைகளுக்கு இடையூறாக, விருப்பத்துக்கு எதிராக சின்ன முணுமுணுப்பும் இன்றி நீதித்துறை கட்டுப்பட வேண்டும் எனக் கருதுகிறது ஒன்றிய மோடி அரசு. அதனை ஏற்க மறுக்கும் நீதிபதிகளும் இருப்பதால் நீதித்துறையின் மீது மோடி அரசு நேரடியாக தாக்குதல் தொடுத்து வருகிறது. இது குறித்து விவாதம் நடத்துவது அவசியமானது.
இந்த பிரச்சினை குறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு நடத்தும் கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேச உள்ளனர்.