பத்திரிக்கை செய்தி !


அன்பார்ந்த தொழிலாளர்களே !

04.02.2022 தேதியன்று  கும்மிடிப்பூண்டி SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது.

கடந்த 2005 -ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொழிலாளர் ஒற்றுமையை கட்டிக்காத்தும், வர்க்க அரசியலை வளர்தெடுக்கும் பணியில் பு.ஜ.தொ.மு தலைமை அர்பணிப்புடன் தனது கடமையை செய்தது.

பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், உழைக்கும் மக்களுடைய பிரச்சினைகளுக்கும், சமூக விடுதலைக்கும் தொழிலாளி வர்க்கம் தன்னை அரசியல் ரீதியாக ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற  ஆசான்களின் வழிக்காட்டுதல்களை SRF தொழிலாளர்களிடம்  கொண்டுச் செல்வதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தது !

இச்சூழலில், சிலரின்  தவறான வழிகாட்டுதலின் பேரில் ஒற்றுமையாக இருந்த சங்கம் இரண்டாக பிளவுட்டு, அணிகள் என்கின்ற வகையில் தேர்தலை நடத்திட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

பொதுக்குழு முடிவு, தனிநபர் கருத்து, ரகசிய வாக்கெடுப்பு என தொழிற்சங்கத்தில் உள்ள எல்லா விதமான ஜனநாயகத்தையும் பயன்படுத்தி தொழிலாளர்களிடம் கருத்துக்களை கேட்டப்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தான் தொழிற்சங்க ரீதியாக எங்களுக்கு வழிகாட்டக்கூடிய தலைமைப் பண்பில் இருப்பவர்கள் என்பதை நிரூபித்தார்கள் !

ஆனாலும், தொழிலாளர் மத்தியில் மேலும் பிரிவினை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் சிறுபான்மையின் கோரிக்கையையும் நிறைவேற்றுவது என்கிற  வகையில் 2022 -ஆம் ஆண்டின் தொழிற்சங்க தேர்தலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி SRF கும்மிடிப்பூண்டி கிளை என்கிற வகையில் தோழர் ம.சி சுதேஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டோம்.

இத்தேர்தலில் மீண்டும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அணி சார்பாக‌ போட்டியிட்ட அனைத்து நிர்வாகிகளையும் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு எமது பு.ஜ.தொ.மு சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம் !

இத்தேர்தலில் வெற்றி பெற்ற சிறப்பு தலைவர் சுதேஷ் குமார் உள்ளிட்ட  நிர்வாகக் குழுவின் அறிமுக பொதுக்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் 09.02.2022 அன்று நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர்களின் கரவொலியில், தேர்தல் குழு அதிகாரி  வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார் !

இத்தேர்தலில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி SRF கும்மிடிப்பூண்டி கிளை சார்பாக புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் “தொழிலாளர்களுடைய உரிமைக்காக தொடர்ச்சியாக பாடுபடுவோம்” என ஏற்புரை அளித்தனர் !

பொதுக்குழுவில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் K.M விகந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
SRF கும்மிடிப்பூண்டி கிளை.

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here