வரலாறு திரும்புகிறது! கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக கட்டபொம்மனின் வாரிசுகள் போராடிக் கொண்டிருக்கும் போது எட்டப்பனின் வாரிசுகள் காட்டிக் கொடுக்கிறார்கள்!

தமிழக முதல்வரின் கவனத்திற்கு!
தூத்துகுடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களே…
தூத்துக்குடியின் பொது அமைதியை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் ஆதரவு கைக்கூலிகள் மீது வழக்குபதிவு செய்து ரிமாண்ட் செய்யுங்கள்!

இதற்கு முன்பு கூட விட்டுத்தள்ளுங்கள். இப்போது கூட ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி வழங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவைக் கண்டித்து (27-04-21) அன்று பண்டாரம்பட்டி மற்றும் புதுத்தெருவில் அமைதியான முறையில் கூடி உட்கார்ந்து எதிர்ப்பு தெரிவித்ததற்கு வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இதற்கு முன்பு சத்தம் போட்டு தும்மினால் கூட உளவுத்துறை துப்பறிந்து பல ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னனியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது அற்ப FIR பதிவு செய்தும், கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். எந்நேரமும் CID போலீஸார் கண்காணிப்பு உண்டு.

நன்றி: இந்து தமிழ் திசை

இதற்கிடையில் இன்று காலை (28-07-21) ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள அய்யனடைப்பு, புதூர்பாண்டியாபுரம், சாமிநத்தம், மீளவிட்டான் உட்பட பல கிராமங்களில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் கூலிக்கு ஆட்களை பிடித்து வந்து கூட்டம் போட்டு, பேட்டி கொடுத்து அத்தகைய கிராமங்களில் ஊர்வலமே நடத்தியுள்ளனர். (புகைப்படம், வீடியோ இணைக்கப்பட்டுள்ளது).

அதே போல இன்று (27-07-2021) தெற்கு வீரபாண்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் பணம் கொடுத்து சிலரை ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக கூட்டம் போட்டு பேட்டி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். காவல் துறைக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதால் DSP பொன்னரசு அவர்களின் தலைமையில் வந்த காவல்துறையினர் கைது செய்து சிலரை மீளவிட்டான் பள்ளிக்கூடத்திலும், கோபி, அசோக், முருகன் ஆகியோர்களை சிப்காட் காவல் நிலையத்திலும் வைத்துள்ளார்கள்.
கொரோனா கால கட்டுப்பாடு – விதிமுறைகளையும் மீறி காவல் துறையில் முன் அனுமதியின்றி, மூடப்பட்ட ஆலைக்கு ஆதரவாக கூட்டம் நடத்தி பேட்டி கொடுக்க மக்களை தூண்டி விட்ட கோபி (அதிமுக- ஓட்டப்பிடாரம் ஒன்றிய 18வது வார்டு உறுப்பினர், அசோக் (திமுக- ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய பொருளாளர்) முருகன், ஸ்டெர்லைட்டில் பணிபுரியும் ராஜாராம் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் அனைவரிமும் கலந்து பேசி இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மற்ற ஏனைய ஊர்களிலும் இதேப் போல அசம்பாவிதங்கள் நடைபெற காரணமாக இருந்த ஸ்டெர்லைட் கைக்கூலிகள் மீது பாரபட்சமில்லாமல் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இவ்வளவு நடந்திருக்கிறது. உளவுப்பிரிவு காவல்துறை இந்த கைக்கூலிகளை கண்காணிக்கவில்லை. தடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஊழியர்களாக வேலைக்கு செல்லலாம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நேரத்தில் கண்காணித்து, தகவல் தராமல் இருந்த CID க்கள் அத்தனை பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

1 COMMENT

  1. இரண்டாவது பத்தியில் தேதி அதாவது 27-04-2021 என்பதற்கு மாறாக 27-04-22 என்று உள்ளது.சரி செய்யவும்.
    நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here