வேளாண் விளை பொருட்களுக்குகுறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்! 

தொடர்ச்சி…

கேள்வி 7: MSP கணக்கிடுவதிலும் பிரச்சனை இருக்கிறது என்பது சரிதானே?

பதில்:  M..S சுவாமிநாதன் அறிக்கை என்று அழைக்கப்படும் அறிக்கை மூலம் இது பத்திர வைக்கப்பட்டது. சுவாமிநாதன் விவசாயிகள் பிரச்சனை பற்றிய தேசிய குழுவுக்கு தலைமை தாங்கியவர் என்பதை நான் இங்கே கட்டாயம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது 2006 ஆவது வருடத்தில் கடைசி அறிக்கையைக் கொடுத்தது. அந்த அறிக்கையை எடுத்துக்காட்டும் பலர் அது தனிநபரின் அறிக்கை என்ற தோற்றத்தையே உருவாக்குகிறார்கள். அது தவறு. அது இந்திய அரசாங்கத்தின் சொந்த அறிக்கையும் சிபாரிசுகளுமே என்பதை நாம் மாறக்கக்கூடாது.

MSP ஐ கணக்கிடுவதற்கு ஆறு விதமான செலவின கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. A1, A2, B1, B2, C1, C2. இது கொஞ்சம் வேடிக்கையானது. A1 என்பது விவசாயி பணத்தைப் போட்டு செய்யும் உற்பத்தி செலவுகள்; A2 என்பது A1 மற்றும் குத்தகை நிலத்திற்காக செலுத்தும் வாடகை; B1 என்பது A1 மற்றும் மூலதன சொத்தின் மதிப்பு இதில் நிலம் சேராது; B2 என்பது B1 மற்றும் நில வாடகை மதிப்பு மற்றும் குத்தகை நில வாடகை; C1 என்பது B2 மற்றும் குடும்ப உழைப்பு சேர்ப்பதனால் ஏற்படும் மதிப்பு; C2  என்பது  ஒரு  பயிர் வைக்க ஆகும் மொத்த  உற்பத்திச் செலவு.

கேள்வி 8: இதை ஏன் வேடிக்கையானது என்று சொல்கிறீர்கள்?

பதில்: விவசாயத் துறையில் மட்டும்தான் உற்பத்திச் செலவை அளவிட இத்தனை வகைகள் உள்ளன. பொருளாதாரத் துறையில் வேறெங்கும் இப்படி இல்லை. ஒரே ஒரு செலவு அளவை C2. C2 – அதாவது மொத்த செலவினம் மட்டுமே உண்டு. சுவாமிநாதன் கமிட்டி MSP தீர்மானிக்க C2 அதாவது மொத்த உற்பத்தி செலவு கூட்டல் அதில் 50% என்று கூறியது. ஆனால் 2014-இல் ரமேஷ்சந்த் கமிட்டி அமைக்கப்பட்டது. MSP ஐ தீர்மானிக்கும்போது எடுத்துக் கொள்ளப்பட்ட சில உற்பத்தி காரணிகள் குறைத்து மதிப்பிடப்பட்டன என்று கூறியது.

மேலும் விவசாய குடியின் தலைவர் உடல் உழைப்பாளி என்று அல்லாமல் தேர்ச்சி பெற்ற தொழிலாளி என்று கொள்ள வேண்டும். செயல் மூலதனத்தின் மீதான வட்டியை கணக்கிடும் போது அரையாண்டு எடுத்துக்கொள்ளாமல் பயிரின் முழு பருவத்துக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். நில வாடகை, நடப்பு சந்தை விலையை வைத்து கணக்கிடப்படுகிறது இது அரசு நிர்ணயிக்கும் உச்சவரம்பை ஒட்டி இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது சுத்தப்படுத்தும் போது தரப்படும் தொகை, சிப்பம் கட்டுவது, போக்குவரத்து போன்ற செலவினங்களையும் சேர்க்க வேண்டும். ரமேஷ்சந்த் கமிட்டி இவற்றையெல்லாம் C2 கணக்கிடும் முறையாக கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. MSP என்பது C2 பிளஸ் பத்து சதவிகிதம் என்றது. இந்த 10% விவசாயிகள் எதிர்கொள்ளும் சில இடர்ப்பாடுகளுக்கும்  நிர்வாக ஆற்றல்களுக்கும் ஈடாக இருக்கும் என்றது.

கேள்வி 9: எம் எஸ் சுவாமிநாதன் மற்றும் ரமேஷ் சந்த் கமிட்டி இரண்டில் எது அதிக MSP ஐ கொடுக்கும்?

பதில்: எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரைத்ததே அதிக MSP-யை கொடுக்கும்.

கேள்வி 10: அரசாங்கம் எந்த முறையை பின்பற்றுகிறது ?

பதில்: இரண்டையுமே அல்ல. அரசாங்கம் A2 பிளஸ் குடும்ப உழைப்பு சேர்த்த செலவினத்தை மட்டுமே பின்பற்றுகிறது. இப்படி சொல்லலாமா பாருங்கள்!. அரசாங்கம் தானே அமைத்த கமிட்டியின் பரிந்துரைகளை எல்லாம் குப்பையில் வீசி விட்டது. அதாவது அரசாங்கம் விவசாயத்துறையை அவமதிக்கிறது.

கேள்வி 11: MSP என்பது பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரபிரதேசம் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக உள்ளது?

பதில்: MSP- இது குறைந்த பட்ச விலை வரையறுப்பு ஆகும். நாட்டின் பல பகுதிகளில் இது அறவே இல்லை. ஏன் இப்படி MSP பற்றி விவசாயிகள் பலருக்கு தெரியாது என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. சந்தைக்கு கொண்டு சென்று போடும் அளவு விவசாயிகளிடம் வழியும் இல்லை. இந்திய விவசாயிகளில் 86% பேர் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழே நிலம் உள்ளவர்களே. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை அதாவது MSP-. கொடுக்கும் நிச்சயமான பொது கொள்முதல் நடக்கிறது.

இதற்கு கூட அந்த மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்தி இருந்தால் சாவு மணி அடித்து இருப்பார்கள். அந்த மூன்று பிராந்தியங்களிலும் MSP- என்பது மிகப்பெரிய பிரச்சனை தான். அதற்கு ஒரு வரலாற்று காரணம் உண்டு பசுமை புரட்சி மாடல் படமாக்கப்பட்டபோது இந்த இடங்களிலும் தவிர பீகாரில் வேறு சில பகுதிகளிலும், மேற்கு வங்கத்திலும் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. காரணம் என்னவென்றால் பசுமைப் புரட்சியின் இலக்கே கோதுமை மற்றும் அரிசி தான்.

எனவே இந்த இடங்களில் தான் மூலதனத்தை குவித்து ஈடுசெய்ய முடியும் பசுமைப் புரட்சியின் தொழில்நுட்பம் என்பது கலப்பின விதைகள் சார்ந்தது உரங்கள் பூச்சி மருந்து தண்ணீர் ஏராளமாக தேவைப்படுவது. அப்போது அதற்கேற்ப MSP-யானது ஒருவித ஊக்க விலையாக இருக்கும் என்று கருதி அறிமுகம் செய்யப்பட்டது. உண்மையில் அரிசி பஞ்சாபியர்களின் மரபு பயிராக என்றுமே இருந்ததில்லை. MSP- காரணத்தினால்தான் பஞ்சாப் விவசாயிகள் நெல் பயிருக்கு மாறினார்கள்.

கேள்வி 12: MSP- பிரச்சினை எப்போது பெரிதாக வெடித்தது?

பதில்: 1991 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நவ தாராளவாத கொள்கை பின்தங்கிய நாடுகளுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்தது இந்தோனேசியாவில் அமைச்சரவை அளவில் நடத்தப்பட்ட உலக வர்த்தக கழக மாநாடு- 2013 பயிர்களுக்கு அரசு அளித்து வந்த ஆதரவுகள் பாதுகாப்புகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும் என்பதை முன் வைத்தது. 2017-க்குள் சிறிது சிறிதாக அந்த விலக்கம் நடைமுறைக்கு வந்து விட வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. அரசாங்கமோ ஒவ்வொரு ஆண்டும் MSPஐ பெயரளவுக்கு ஏற்றிக்கொண்டே சென்றது.

ஆனால் ஏற்றப்பட்ட விகித அளவு குறைந்துகொண்டே வந்தது. அதேநேரம் விவசாய உள்ளீடு பொருள்களின் செலவினம் தொடர்ந்து அதிகரித்தது. மேலும், மருத்துவம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி ஆற்றல் ஆகியவை வேகமாக தனியார்மயப்பட்டதால் விவசாயக் குடும்பங்களின் முதுகில் ஏறிய பொருளாதாரச் சுமை கூடியது.

கேள்வி 13: எல்லாம் சேர்ந்து விவசாயிகளின் வருவாயை அதலபாதாளத்தில் தள்ளி விட்டன என்று சொல்லலாமா?

பதில்: அதுமட்டுமல்ல, மேலும் மேலும் அவர்கள் கடன் சுமைக்கு ஆளானார்கள். 2000-தில் இருந்து பஞ்சாபில் ஒவ்வொரு நாளும் நிலம் கொண்ட இரண்டு விவசாயிகளும், ஒரு விவசாயக் கூலியும் தற்கொலை செய்து கொண்டனர். இது என் கணக்கெடுப்பு ஆகும். அரசாங்க அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இருபத்தி எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அனேகமாக விவசாயிகள் விவசாயத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததை கைவிட்டார்கள். இதற்கும் மேலாக சாந்தகுமார் கமிட்டி உணவுத் தானியங்களைக் கொள்முதல் செய்வதை அரசாங்கம் நிறுத்திவிட வேண்டும் என்றும், இந்திய உணவு கழகம் இனி தேவையில்லை என்றும் பரிந்துரை செய்தார்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகளிடம் அச்சத்தை பெருக்கின அதாவது விவசாயம் இனி தனியார்மயமாகும். விவசாய உற்பத்தி பொருள் சந்தைக்கான கமிட்டி. APMC மண்டிகள் கலைக்கப்படும். (இந்த இடத்தில்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் வேலை செயல்பட்டு வந்தது என்பதை கவனம் கொள்ளுங்கள். மொழிபெயர்ப்பாளர்) எல்லாம் சேர்ந்து இறுதி விளைவாக குறைந்தபட்ச ஆதரவு விலை MSP என்ற முறை மெல்ல மெல்ல முடிவுக்கு வந்துவிடும் என்று விவசாயிகள் சரியாகவே கணித்தார்கள்.

குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகபட்ச பலன் பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு சென்றதால் அந்த விவசாயிகள் கொந்தளித்தார்கள், போராடினார்கள். நாட்டையே குலுக்கி எடுத்து விட்டார்கள் என்பது மிக இயல்பானது. மொத்தமாக நாட்டின் பாசனச் சாகுபடி நிலங்கள் மூன்றில் ஒரு பாகம் கொண்ட இந்தப் பிராந்தியங்களை வெறியோடு எடுத்து விழுங்கிவிட கார்ப்பரேட்டுகள் துடித்தார்கள். 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான இயக்கம் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையின் MSP யின் முக்கியத்துவம் பற்றி நாடு முழுவதும்  விழிப்புணர்வை பரப்பி விட்டது

கேள்வி 14: தற்போது விவசாயிகள் எல்லா பயிர்களுக்குமே MSP ஐ உத்தரவாதம் செய்ய அரசாங்கம் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று  கோருகிறார்கள். இது எதைச் சுட்டிக் காட்டுகிறது?

பதில்: ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் இருபத்திமூன்று பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கும். இதில் பயிர் வகை 7. அதாவது நெல், கோதுமை, தினை, வஜ்ரா, ஜோவர், கேழ்வரகு, பார்லி போன்றவை, பருப்பு வகை 5 அதாவது கடலை பருப்பு, துவரை, பச்சைப்பயிறு, உளுந்து, மசூர் துவரை போன்றவை. எண்ணெய் வித்துக்கள் 7, அதாவது மணிலா, சோயா. கடுகு, எள், சூரியகாந்தி, நைஜர் விதை,குங்குமப்பூ, மற்றும் நான்கு வகை பணப்பயிர்கள் அதாவது கரும்பு, பருத்தி, கொப்பரை தேங்காய், கச்சா சணல் ஆகியவை. அரசாங்கம் மேற்கண்ட இருபத்திமூன்று பயிர்களுக்கு MSP-அறிவித்து வருகிறது.

ஆனால் விளைகின்ற எல்லா பயிர்களையுமே அரசாங்கம் வாங்கிக் கொள்ளும் என்பது இல்லை. சில பகுதிகளில் அரசாங்கம் சில விளைச்சல்களை வாங்குகிறது. அரசாங்க நிறுவனங்கள் மூலமாக இதை அரசாங்க அதிகாரிகள் இலக்கு உள்ள கொள்முதல் என்று சொல்கிறார்கள்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here