விவசாயத்துறையை கார்ப்பரேட்டுகள் விழுங்குவது பற்றி பஞ்சாப் தேர்தல்கள் அடக்கி வாசித்ததேன்?

வேலையில்லா திண்டாட்டம் - மிகப்பெரிய பிரச்சனை. விவசாயத் துறையிலும் தொழில் - சேவைத் துறைகளிலும் வேலைகள் கொடுக்கப்படவில்லை.

0
26

விவசாயத்துறையை கார்ப்பரேட்டுகள்
விழுங்குவது பற்றி
பஞ்சாப் தேர்தல்கள் அடக்கி வாசித்ததேன்?


பகுதி 2

ஞ்சாப் விவசாய மாநிலம். ஆனால், இன்னமும் விவசாயத் திட்டம் இல்லை. பஞ்சாப் மாநில விவசாயிகள் – விவசாய உழைப்பாளிகளுக்கான கமிஷன் இரு விவசாயக் கொள்கை – திட்டங்களை வகுக்க முயன்றது. இன்னமும் அவை நகல் வடிவிலேயே உள்ளன. இயற்கை மூலாதாரங்களை எப்படி பயன்படுத்துவது, நமது இளைஞர்களுக்கு எப்படி வேலை கொடுப்பது என்று கொள்கை இல்லை. இந்த அவசர பிரச்சனைகள் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுமே மௌனம் சாதிக்கின்றன.

வேலையில்லா திண்டாட்டம் – மிகப்பெரிய பிரச்சனை. விவசாயத் துறையிலும் தொழில் – சேவைத் துறைகளிலும் வேலைகள் கொடுக்கப்படவில்லை. கோதுமை – நெல் பயிர் மாறிமாறி நடப்பட்டு வளர்ந்து அறுவடை செய்யும் ஒற்றைப் பயிர் முறை சுழற்சியும் அதில் எந்திர பயன்பாடும் வேலை வாய்ப்பை குறைத்து விட்டன. பஞ்சாபில் ஒரு விவசாய கூலிக்கு ஆயுள் முழுவதுமாக இரண்டரை மாதங்களே வேலை; அடுத்த இரு துறைகளிலும் கூட போதிய வேலை இல்லை. அரசுத்துறை சிதறடிக்கப்பட்டு தனியார்மயம் வந்துவிட்டது அரசுத்துறை காலி இடங்கள் நிரப்பப்படவேயில்லை.

அதிசயம், ஆனால் உண்மை. ஒவ்வொரு நாளும் 6  தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. தற்போது உள்ள அரசாங்கம் 2017-இல்  50 லட்சம் குடும்பங்களுக்கு தலைக்கு ஒரு நபருக்கு வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது. அதற்கு முன் 2012-இல் சிரோன்மணி அகாலிதளம்(SAD), பாஜக(BJP) கூட்டணி அரசாங்கம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக வாக்குறுதி கொடுத்தது. இப்போது நியமிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் சன்னி இதோ உடனடியாக 33 லட்சம் வேலை என்று மந்திரக்கோலை சுழற்றுகிறார். SAD கட்சி தனியார் துறையில் பஞ்சாபிகளுக்கு முன்னுரிமை கொடுத்து 75 சதவீத இட ஒதுக்கீட்டில் செய்வோம் என்று இப்போதே வாக்குறுதி கொடுத்துவிட்டனர்.

படிக்க:

♦  செங்கொடி எழுகின்றது… உழவனின் செங்கொடி எழுகின்றது… || விவிமு பாடல்
♦  வேளாண்சட்டம் ரத்து: விவசாயிகளிடம் வீழ்ந்த வீரசங்கிகள்!

எல்லா வாக்குறுதிகளையும் சமன்பாட்டில் கொண்டு வந்தாலும் தேசிய வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 என்ற அளவை விட அதிகமாக 7.8 என்ற விகிதத்திலேயே பஞ்சாப் மேலே உள்ளது. உண்மையில் நாட்டின் பொருளாதாரம் நெகிழ்வான பூஜ்ஜியத்தில் நிலையைத் தொட்டு ‘வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சி’ என்ற பாடலை பின்பற்றித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் பஞ்சாப் இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை தேடி ஓடுகிறார்கள். அது இல்லாவிட்டால் போதை பொருட்களுக்கு இரையாகி அழிந்துகொண்டு இருக்கிறார்கள். அதைவிட சரியாக சொன்னால் அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

Punjab Health Minister says,"Only 2% drug addicts in 10 districts of state" | Punjab News | Zee News

கார்ப்பரேட்டுகளின் கொடூர நகங்களில் இருந்து விடுபட்டு பொது துறையும் காப்பாற்றி வளர்க்கப்படும் போது தான் நாட்டின்/ பஞ்சாபின் மக்களுக்கே வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு நடக்காத வரை தேர்தல் வாக்குறுதிகள் ஒரு பயனும் இல்லை மாபெரும் முதலீடு பொதுத்துறையில் போடப்படவேண்டும்.

விவசாய சீர்திருத்தம் என்ற பெயரில் விவசாயத்துறை அம்பானிக்கும் அதானிக்கும் தாரைவார்ப்பதாக – இறைத்து விடுவதற்காக சட்டங்கள் புதிதாக திணிக்கப்படுகின்றன. உலகெங்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய, சீன கம்பெனிகள் வளமான விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் வாங்கிக் குவிக்கின்றன. அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி நாடு முழுவதிலும் சேமிப்பு (சைலோ-SILO) கிடங்கு உள்கட்டுமானங்களை மிகப்பெரிய அளவில் கட்டுவதற்காக மாபெரும் முதலீடுகளை ஏற்கனவே செய்துவிட்டனர். இப்படிப்பட்ட நபர்களின் கம்பெனிகளில் பாதுகாப்புக்காக திரும்பப் பெறப்பட்ட சட்டங்களை வேறு ஏதோ வடிவங்களில் அரசாங்கம் நிச்சயமாக கொண்டு வரும்; பாஜக தலைவர்கள் இப்படிப்பட்ட அறிக்கைகளை கொடுத்துவிட்டார்கள்.

பஞ்சாப் அரசாங்கத்தின் தயவில் மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது பஞ்சாப் மக்கள் தலை மீது தலா ஒரு லட்சம் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விவசாய குடும்பத்தின் தலைமீதும் 10 லட்சம் கடன் சுமை, ஒவ்வொரு கூலி குடும்பத்தின் தலை மீதும் 80 ஆயிரம் கடன் சுமை பஞ்சாபின் எல்லா வருமானம் எங்கே போகிறது? நாம் சிந்திக்க வேண்டும். பஞ்சாபில் மொத்த நாட்டில் வருமான இடைவெளி பள்ளத்தாக்காக பெருகிவிட்டது. வருவாய் செல்வம் உற்பத்தியானது எல்லாமே சில பணக்கார குடும்பங்களில் சேர்ந்துவிட்டது. சமமற்ற தன்மை பெருகப்பெருக அந்த பணக்கார சீமான் குடும்பங்கள் தேர்தல்களின் போதும் அரசியல் கட்சிகளை ஊட்டி வளர்ப்பதும் அவை அரசாங்கங்களின் மீது அழுத்தம் கொடுப்பதும் அதிகரிக்கத் தொடங்குவதும் நடக்கிறது.

இந்திய விவசாயம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றின் கொள்கைகளால் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இது உங்களுக்கு நன்றாக தெரியும் உலக வர்த்தக கழக ஒப்பந்தம் காரணமாக விவசாயத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த மானியங்களை அரசாங்கம் நிர்ப்பந்தமாக குறைக்கிறது; 3 விவசாய சட்டங்களை வாபஸ் வாங்கு விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டப்பூர்வ உறுதி கொடு என்பவை விவசாய போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் ஒன்றிய அரசு 3 சட்டங்களை வாபஸ் வாங்கியது. ஆனால், குறைந்த பட்ச ஆதார விலை பற்றி மௌனம் காக்கிறது. உலக வர்த்தக கழக கொள்கைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தான் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்தை தடுக்கின்றன. அதனால்தான் தேர்தல் அரசியல் கட்சிகள் அதைக்குறித்து பிரச்சினை ஆகாமல் நழுவிக் கொண்டன.

படிக்க:

♦ வேளாண்சட்டங்கள் – விவிமு வெளியீடு!
வேளாண் சட்டம் விவசாயத்தை நவீனப்படுத்தவா?

சமீபத்திய ஒன்றிய வரவு – செலவு திட்டத்தில் விவசாயத்திற்கு மூலதனம் ஓடுவது இணைக்கப்பட்டுள்ளது.  மொத்த செலவினத் தொகை குறைக்கப்பட்டுள்ளது. தானிய கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அளவீடும் குறைக்கப்பட்டு விட்டது. அதேபோல் நாட்டுப்புற ஏழைகளுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்ற திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. * அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் இவை பற்றி ஒரு பிரச்சனையும் எழுப்பவில்லை.

தேசிய சராசரி முதலீட்டு அளவில் பாதி அளவு பஞ்சாப் அரசாங்கம் முதலீடு செய்கிறது. அதனால் தான் தொழில் துறையில் வளர்ச்சி, போதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. உண்மையில் கூட்டுறவுத்துறை மூலமாக மட்டுமே – விவசாய, தொழில் துறை இணைப்புகளை உருவாக்க முடியும். இதன் மூலமாக மட்டுமே நமது சொந்த ஆதாரங்களை, நமது சொந்த நுட்ப திறன்களை சொந்த தேவைகளை ஒட்டியே வளர்க்கமுடியும் இவற்றின் மூலமாக மட்டுமே உற்பத்தியில் பின்இணைப்புகளையும்(விவசாயத்திலிருந்து அது அல்லாத உள்ளீடு பொருட்களை இணைப்பது அது தேவையான அளவு விவசாய ரசாயனங்களை உற்பத்தி செய்து இணைப்பது) முன்இணைப்புகளையும் (விவசாய உற்பத்தி அல்லாத துறைக்கு விவசாய பொருட்களை உற்பத்தி செய்து அனுப்பி இணைப்பது) வளர்க்கின்ற மாதிரியை நாம் வளர்க்க முடியும் இதற்கு அடிப்படைத் தேவை மக்களின், விவசாயிகளின் நலன் பற்றி அக்கறைப்படும் அரசாங்கம்; கார்ப்பரேட்டுகளின் பணம் கொடுத்து ஊட்டி வளர்க்கும் ஊழல்படுத்தும் கட்சிகளின் அரசாங்கம் அல்ல; மக்கள் அரசாங்கமே உடனடித் தேவை.

* கடந்த ஜூலை 2010 முதலாகவே இந்த திட்டத்தின் கீழ் ஊரக வேலைகளுக்கான கூலி கொடுக்கப்படவில்லை.

பேராசிரியர் சுக்பால் சிங் பஞ்சாப் பல்கலைக் கழகம் லூதியானாவில் பணி புரியும் தலைமை பொருளாதார நிபுணர்

ஆக்கம்,

இராசவேல்

பகுதி 1

விவசாயத்துறையை காா்ப்பரேட்டுகள் விழுங்குவது பற்றி பஞ்சாப் தேர்தல் கட்சிகள் அடக்கி வாசித்து ஏன்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here