வரலாறு என்பது கடந்த காலத்தின் தேங்கிப் போன குட்டை அல்ல. அது வற்றாத ஜீவ நதி. கற்கள் சிதைந்து துகள்களாகவும், துகள்கள் சேர்ந்து கற்களாகவும் உருமாற்றம் பெற்ற வண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் வரலாற்றில் தியாகிகள் உருவாகிறார்கள். தியாகிகளுகம் துரோகிகளும் கடந்த காலத்துக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர். அவர்கள் நம் கண் முன்னே நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள். தியாகத்தையும், துரோகத்தையும் பகுத்துப் பார்க்க முடியாத அவலமும், பார்க்க விரும்பாத அலட்சியமும் கூட கடந்த காலத்துக்கு மட்டுமே உரியது அல்ல.
ஆனால் வரலாறு இவ்வாறு பார்க்கப்படுவதில்லை. நமது விடுதலை போராட்ட மரபின் வீரமிக்க நாயகர்கள் சிலைகளாக சமைந்திருக்கிறார்கள். இந்த நாயகர்களை பற்றிய நமது பழைய கதைப் பாடல்களின் உணர்ச்சி, நாட்டுப்பற்றுக்கு மட்டுமின்றி, மக்களுடைய கையறு நிலைக்கும் சான்றுக் கூறுகிறது. ஆம், அது அன்றைய சமூகத்தின் அவலம். அந்த மாவீர்ர்களுடைய போராட்டத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்துக் கொள்ள இயலாத இந்திய சமூகத்தின் அவலம்.
– விடுதலை போரின் வீர மரபு நூலில் இருந்து…
இந்தியாவின் மறுகாலனியாக்கத்தை முழுமை பெற தீவிரமாக செயல்படும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்த தியாகம், அர்ப்பணிப்பு கோருகிறது நிகழ்காலம். அன்று பிரிட்டன் காலனியாதிக்கத்தை எதிர்த்த
விடுதலை போரில் இருந்து போர்குணத்தை பெறுவோம்.
பாசிசத்தை வீழ்த்தும் போரில் முன்னேறிச் செல்வோம்.