மாநிலங்களின் கடன் வாங்கும் சுதந்திரத்தை பறிக்கும் மத்திய அரசு:
தற்போது மாநில அரசுகள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியின் பின்னணியில் தனது மாநிலத்தின் நிகரகடன் வரவு 4,000 கோடி குறைந்துள்ளது என்று கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவிக்கிறார்.
பாலகோபால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இது பற்றி விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மாநிலங்கள் சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடி சவால்களை குறிப்பிட்டுள்ளார். அவர் மத்திய நிதி அமைச்சகம் தன்னிச்சையாக நிதிநிலை அறிக்கைக்கு வெளியில் வாங்கும் கடன்களில் கடன்வாங்கும் வரம்பை 4000 கோடி அளவுக்கு குறைத்துள்ளது.
பால கோபாலின் கூற்றுப்படி கேரள அரசின் நடப்பு நிதியாண்டின், ஏழைகளுக்கு என செயல்படுத்தப்படும் திட்டங்கள்; கல்வி, மருத்துவம் மற்றும் வீடமைப்புகளுக்கான மாநில அரசின் நலத்திட்டநிதி ஒதுக்கீட்டில் 23,000 கோடி அளவுக்கு திரட்டப்படும் நிதிக்காக சவால்களை சந்தித்து வருகிறது. அவர் எழுதியுள்ள கடிதமானது அரசியலமைப்பு சட்டப்படி பிரிவு 283-ன்படி துணை தேசிய கடன்களை நிர்வகிப்பது தொடர்பான தீவிரமான சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பு சட்டவிதி 293 (3) மாநிலங்கள் கடன்கள் மூலமாக நிதி ஆதாரத்தை பெறுவதை உறுதி செய்கிறது. இதன்படி மாநிலங்கள் பெற்றுள்ள கடன்களில் இன்றும் நிலுவை இருப்பின், (அல்லது) மத்திய அரசு அத்தகைய கடன்களுக்கு உத்தரவாதம் அளித்து இருப்பின், மாநிலங்கள் தன்னிச்சையாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சரத்தில் உள்ள ‘எந்த கடனும்’ என்ற வார்த்தையினை ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின் படி ‘எனப்பொருள் கொள்ள வேண்டும்,
இதுபற்றி உச்சநீதிமன்றம் தனது 1987ல் வழங்கிய சந்திரமோகன் எதிர் உ.பி அரசுக்கெதிரான வழக்கில் ‘எந்தகடனும்” எனும் வார்த்தைக்கான பொருள் என்பது “தேசத்தின் கூட்டாட்சி தத்துவத்தின் வேரினை வெட்டுவதாக இருக்கக்கூடாது “என்று குறிப்பிடுகிறது.
மிக முக்கியமாக மாநில அரசின் கடன் பெறும் அளவினை குறித்து உணர்த்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும். அதேவேளை மாநில அரசை கட்டுப்படுத்தவோ அரசுபெறும் நிதிகளை குறைக்கவோ இதனை பயன்படுத்தக்கூடாது என்று அரசியலமைப்பின்படி இவ்விதி தெளிவாக கூறுகிறது. விஷயங்கள் யாவும் மாநில அரசின் தனிப்பட்ட வடிவங்களாகும்.
மத்திய அரசு பாஜக, ஆட்சி அல்லாத மாநில விஷயத்தில் நடந்து கொள்ளும் முறையானது ஒரே மாதிரியாகவுள்ளது. அண்மையில் தெலுங்கானா மற்றும் தமிழக அரசுகள் இதே போன்ற கருத்துகளை தெரிவித்து அரசியலமைப்பு சட்டப்படியான பாதுகாப்பை, ‘சுயாட்சியுடன் ‘ கூடிய நிதி செயல்பாடுகளை மாநிலங்களுக்கு உறுதிசெய்ய வேண்டும் என்று முழங்கின!
உறுப்பு 283(2)ன் படி ஒரு மாநிலம் தனது ஒழுங்குபடுத்தும் சட்டமன்றத்தால், பொது கணக்குகளை வழங்குகிறது. உருவாக்கப்பட்ட சட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு மாநிலங்களின் பொது கணக்கு அதன் உள்நாட்டு நிதி பரிவர்த்தனைகளை பிரதிபலிக்கிறது. இதன்மூலம் அரசியலமைப்பு ரீதியாக வங்கியாளரின் பாத்திரத்தை அரசு வகிக்கிறது என்பதே பாலகோபாலின் மிகச்சரியான வாதம் ஆகும்.
சரியான சட்ட அல்லது, நிதி ரீதியான அடிப்படை ஏதும் இல்லாமல் நிகர கடன்வரம்பினை பொது கணக்கில் உள்ள தொகைகளை கொண்டு விளக்க முடிவுசெய்வதன் மூலம் மைய அரசு, மாநில அரசுகளின் அரசியலமைப்பு அளித்திருக்கும் நிதி சம்பந்தமான அதிகாரங்களில், அப்பட்டமான ஊடுருவலை செய்கிறது. இதன் மூலம் பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் மாநிலத்தின் திறன் பாதிக்கப்படுகிறது.
இதன்படி நிதி பங்கீடு மோசமானது மட்டுமல்லாமல் பாஜக மற்றும் பாஜக இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இடையிலான கூட்டாட்சி உறவுகளில் நீண்ட கால மோதல்களுக்கு வழிவகுக்கிறது.
மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில் மைய அரசின் நிதிஅமைச்சகம், ஒரு மாநில அரசின் பொது கணக்கில் பராமரிக்கப்படும் குறைந்த பட்ச தொகையினை எவ்வாறு முடிவுசெய்கிறது என்பதாகும். அவ்வாறு முடிவு செய்யும் போது மாநில அரசின் பட்ஜெட்டின் மூலம் நிதி பெறும் அனைத்து நிறுவனங்களையும் அதன் பணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அந்த குறைந்த பட்ச தொகையினை முடிவு செய்ய வேண்டும்.
மைய அரசு தொடர்ந்து தனது நிதி இழப்பீட்டினை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள தவறிவிட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களின் மூலம் மாநிலங்களின் தேவைக்கான கடன்களை வாங்கும் திறனை குறைக்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதே சமயம் தன்னால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இதே போன்ற காரணங்களுக்காக வரம்புகள் எதையும் விதிக்கவில்லை.
மேலும் இந்திய அரசியலமைப்பு விதி 293(3) மற்றும்(4)ன்படி வரையறுக்கப்படுவது மாநில அரசை மட்டுமே! அதுவல்லாமலல் அரசு நிறுவனங்களுக்கோ அல்லது சட்டபூர்வ நிறுவனங்களின் கடன்களுக்கு அதனை நீட்டிக்க முடியாது. இதன்படி அத்தகைய மாநில-மைய அரசுகளின் நிதி கட்டமைப்புகள் குறித்து நிதிக்குழுவே பரிந்துரைகளை வழங்கமுடியும், நிதியமைச்சகம் அல்ல.!
முந்தைய பதினான்கு நிதிக்குழுக்கள் எதுவும் செலவினத் துறையால் எடுக்கப்பட்ட முடிவிற்கு அடிப்படையாக செயல்படக் கூடிய பரிந்துரை எதையும் வழங்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் 293(3) பயன்படுத்துவது தவறான ஒன்றாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு தொற்றுநோய் பேரழிவை ஏற்படுத்திய சூழலில் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசின் பொதுக்கடன் அளவை அதிகப்படுத்தியுள்ளன. எனினும் மோடி அரசோ நேரடியான தேவைகளை பூர்த்திசெய்ய நிதி உதவிகளை வழங்கவில்லை.
தேவை ஏற்படின் ரிசர்வ் வங்கி அல்லது மைய அரசுமூலம் கடன்பெறுவது என்பது பாலகோபால் அவர்கள் குறிப்பிடுவது போல மாநில அரசுகள் சுயமாக நிதிகளை தேடிக்கொள்வது என்பது இனிமேலும் மைய அரசின் தயவின்றி நடக்காது என்பதையே சுட்டுகிறது. மேலும் பினாகி சக்ரவர்த்தியின் வாதத்தின்படி தொற்று நோயின் முதல் ஆண்டு (2020-21) மற்றும் 2022-23க்கு இடைப்பட்ட காலத்தில் நிதி சவால்கள் மலிந்துவிட்டன. ஆனால் ‘பொருளதாரமீட்சி’ என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.
முதலில் 2022-23 நிதியாண்டுக்கு செல்லும் போது ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்ற யுத்தத்தின் தாக்கத்தினை கணிப்பது கடினமான ஒன்றாக இருந்தது. இரண்டாவதாக 2020-21 மற்றும் 2022-23க்கு இடையே வருவாய் பற்றாக்குறை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 7.3%ல்இருந்து 3.8.% ஆக உள்ளது. மூன்றாவதாக நிதிபற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து 55% என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இது போன்ற பற்றாக்குறைகளை நிர்வகிப்பது என்பது வருவாய் செலவினங்களுக்கு முக்கியமானதாகும். அவை வட்டி மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் ஆகும்.
Dr. சக்கரவர்த்தியின் அடிப்படை கூற்று என்னவெனில் “நிதிவளங்கள் மைய அரசுக்கு நிதியளிக்கும் திட்டங்கள் மூலமாக கணிசமாக இருக்கின்றது. 2022-23 ல் இதன் மதிப்பு 3.83 லட்சம் கோடியாகும். எனினும் இத்திட்டங்களின்மூலம் மாநில அரசுகள் தமது பங்களிப்பை செலுத்துவதென்பது மேலும் அவற்றின் நிதிவளத்தினை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்பதும் உண்மையாகும்.”