மண்டியிடுவது அறிவீனம்!


அன்பான “நாம் நரிகள்” கட்சி உறுப்பினர்களுக்கு,

இதுவரையில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த 400 நாம் தமிழர் கட்சி செயற்பாட்டாளர்களை, அந்நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. அங்கு அந்த கட்சி கூட்டம் நடத்தவும் தடைவிதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவர் படம் வைத்திருந்தமை காரணமாக சொல்லப் படுகிறது. அதை விட நாம் தமிழர் கட்சியினரின் வழமையான இனவாதப் பிரச்சாரங்கள், “வந்தேறி” கதையாடல்களும் காரணமாக இருக்கலாம்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று என்றால், அதன் அர்த்தம் தமிழ் மொழியில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும் புலனாய்வுத்துறை கண்காணித்த படி இருக்கும். இது தெரியாமல் சிங்கப்பூரில் “தமிழன்டா!” “சீனன் வந்தேறிடா!!” என்றெல்லாம் மடத்தனமான கெத்து காட்டினால் மூக்குடை பட வேண்டி இருக்கும். அது தான் அங்கே நடந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாட்டிலிலுள்ள நாம் தமிழர் கட்சி சார்பாக எந்தவொரு கண்டன அறிக்கையும் வரவில்லை. ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய் மூடி மௌனியாகி விட்டார். அந்தளவு பயம்! ஏற்கனவே கனடாவில், சிங்களவர்களுக்கு எதிராக இனவாதம் பேசி நாடுகடத்தப் பட்ட கசப்பான அனுபவம் அவரது வாயை மூட வைத்திருக்கும்.

இவ்வளவு நடந்தும், இதுவரையில் நாம் தமிழர் கட்சியினர் யாரும், சிங்கப்பூர் அரசுக்கு எதிராக சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆக மொத்தம் இப்படி நடந்து விட்டதே என்று சொல்லி ஒரு நாயும் குலைக்கவில்லை.

இந்தளவு தான் இவர்களது வீரம். இவர்கள் தமது வீரத்தை பலவீனமான அப்பாவி மக்களிடம் தான் காட்டுவார்கள். அந்தளவு கோழைகள். ஒரு தடவை சிங்கள பிக்குகளை அடித்து விரட்டிய மாதிரி, சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளிடம் உங்கள் கைவரிசையை காட்டுங்கள் பார்ப்போம்?

இந்த இலட்சணத்தில் இலங்கை மீது படையெடுத்து ஈழம் வாங்கித் தந்து விடுவார்களாம்.
இதற்குப் பிறகும் “மானத் தமிழர்… வீரத் தமிழர்…” என்று வெட்டிப் பெருமை பேச உங்களுக்கு வெட்கமாகவில்லை?

இனிமேல் உங்கள் கட்சியின் பெயரை “நாம் நரிகள்” என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! அது தான் பொருத்தமான பெயராக இருக்கும்.

மண்டியிட்ட மானம்!
நன்றி!
கலை மார்க்ஸ்.
முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here