மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தி – குக்கி ஆகிய இரு பிரிவு மக்கள் இடையே கலவரம் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
மணிப்பூரில் இந்த கொடூரமான கலவரங்கள் நடந்த போதிலும் அந்த மாநிலத்திற்கு இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என்பது புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
ஆனால் பாசிச கும்பலின் தடித்த தோலில் இதெல்லாம் உரைக்கவில்லை. எந்த நேரமும் அதானி மற்றும் அம்பானிக்கு சேவை செய்வதை பற்றிய சிந்தித்துக் கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான ஆர்எஸ்எஸ் – பாஜக மணிப்பூரில் நடந்த வன்முறை வெறியாட்டம் பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் அடையவில்லை.
மணிப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலேயே தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினர் இதில் கட்சி வேறுபாடு இன்றி தேர்வு செய்த மக்களுக்கு நேர்மையாக வேலை செய்தனர். ஆனாலும் நாடாளுமன்றத்தில் மழுப்பலான பதிலை வெளியிட்டு பிரதமர் மோடி தனது அயோக்கியத்தனத்தை மறைத்துக் கொண்டார்.
மணிப்பூர் இவ்வாறு திட்டமிட்டு கலவரத்திற்கு உள்ளாக்கப்பட்டதற்கான அடிப்படையை பற்றி ஏற்கனவே புதிய ஜனநாயகம் இதழில் எழுதியுள்ளோம்.
தொடர்ச்சியான ஊடகங்களின் விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள், நாடு முழுவதும் பாசிச பாஜகவிற்கு எதிராக எழுந்த பொதுக்கருத்து ஆகியவற்றின் காரணமாக இனிமேலும் நீடிக்க முடியாது என்ற அடிப்படையில் மணிப்பூரின் முதல்வரான பிரேன் சிங் பதவி விலகியுள்ளார்.
படிக்க:
🔰 மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!
🔰 மணிப்பூர்: கலவரங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் குண்டர் படை! எப்படி தடுப்பது?
இது பற்றி இன்றைய ஊடகங்களில் கீழ்கண்டவாறு செய்தி வெளியாகியுள்ளது “மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார். இம்பாலில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் பிரேன் சிங்”என்று செய்தியை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் மட்டும் இல்லை. வேறு எந்தவிதமான சட்டபூர்வமான அதிகார அமைப்புகளுக்கும் பாசிஸ்டுகள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என்பது தான் உண்மை. தற்காலிகமாக ஒரு சில வழக்குகளில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அதனை ‘நல்ல விலை போகின்ற வழக்கறிஞர்களை’ வைத்து முறியடித்து வருகிறார்கள். அதற்கும் மேலே சிக்கலானால் நீதிபதிகளை விலைபேசி அடிபணிய வைக்கிறார்கள். மறுப்பவர்களை சிவலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
சட்டபூர்வமான வாய்ப்புகளை ஒருபோதும் மதிக்காத பாசிச பயங்கரவாத கும்பலின் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகல் என்பது அப்பட்டமான பித்தலாட்டம் மிகுந்த, ஒரு இழிவான நாடகம் என்பதை நாட்டு மக்களிடம் கொண்டுச் செல்வோம்.
ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் உயிரைப் பறித்து; அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி; அவர்களின் இருப்பிடங்களில் இருந்து நாடோடிகளாக வெளியேற்றிய கிரிமினல் குற்றச் செயலை புரிந்துள்ள மணிப்பூர் முதல்வர் மீது, அவர் புரிந்துள்ள மக்கள் விரோத செயல்களை பொது விசாரணைக்கு உட்படுத்தி பொதுவெளியில் நிற்க வைத்து தூக்கிலிட வேண்டும் அப்போதுதான் இது போன்ற புது வகையிலான பயங்கரவாதிகள் உருவாக மாட்டார்கள்.
இது வன்முறை என்று கூச்சலிடுபவர்கள் மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணின் மன உணர்விலிருந்து இந்த சிக்கலை அணுகினால் உண்மையான நீதி கிடைக்கும். உண்மையான நீதிக்காக போராடுகின்ற உணர்வும் பிறக்கும்.
- மாசாணம்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி