தோழர் மணியரசன், தோழர் செந்தமிழன் போன்றவர்களின் பேச்சுக்களில் பல்லவர் காலமும் அதே சம காலத்து மன்னர்களான பாண்டியர்கள் காலமும் பிற்காலத்தில் புகழ்பெற்ற பேரரசர்களாக நீண்டகாலம் ஆட்சி செய்த சோழர் பேரரசர்கள் காலமும் வேறு வேறாக இருந்ததாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இவர்கள் பேசுவதும் எழுதுவதும் உண்மைக்குப் புறம்பானது என்பதை பல்லவர் சோழர் கால பட்டயங்கள் தெள்ளத்தெளிவாகக் கூறுகின்றன. கி.பி. 7, 8 ம் நூற்றாண்டைச் சார்ந்து வெளியிடப்பட்ட பல்லவர் செப்பேடுகளில் ஆயிரக்கணக்கானப் பார்ப்பனர்களுக்கு நிலங்களைப் பட்டையம் செய்து கொடுத்ததாகத் தகவல்கள் உள்ளன. இதேபோன்று பார்ப்பனர்களுக்கு நிலங்களைப் பட்டையம் செய்து கொடுத்த செய்திகள் கி.பி.11 ம் நூற்றாண்டில் இராசேந்திர சோழனால் வழங்கப்பட்ட பட்டையங்களிலும் பதிவாகி உள்ளன. பல்லவர், சோழர் பட்டையங்களுக்கிடையே எந்தவிதமான குறிப்பிடத்தகுந்த பெரிய வேறுபாடுகளும் இல்லை. இந்தச் செய்திகளைத் தாங்கியுள்ள பட்டையத்தின் பக்கங்களை இங்கு பதிவிட்டுள்ளேன். அதே நேரத்தில் அந்தப் பட்டையங்களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்வதற்கு வசதியாக அவற்றின் இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

குறிப்பு

சங்கக் காலத்திலிருந்து 11ம் நூற்றாண்டு வரையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக “பார்ப்பனர் அல்லாத தனி நபர்கள்” தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களிடம் இருந்து பார்ப்பனர்களை போல நிலம் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குறிப்பிடுகின்ற சான்றுகள் எவற்றையாவது தோழர் மணியரசன் அவர்களோ தோழர் செந்தமிழன் அவர்களோ காட்ட முடிந்தால் தமிழுலகத்திற்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

சோழர் செப்பேடுகள்:

சோழர் செப்பேடுகள் டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும் 

பல்லவர் செப்பேடுகள் முப்பது:

பல்லவர் செப்பேடுகள்  டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும் 

பாண்டியர் செப்பேடுகள் பத்து:

பாண்டியர் செப்பேடுகள் டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்

கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி:

கரந்தை செப்பேடு டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும் 

 

நன்றி: பொ.வேல்சாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here