மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் சார்பில் நடைப்பெற்ற நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தின நிகழ்வுகள்
திருவண்ணாமலையில் புமாஇமு கொடியேற்றி ரஷ்யா புரட்சி தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிறுவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் மாவட்டம் வெள்ளார் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைப் பெற்றது இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு. மாநில பொதுச் செயலாளர் தோழர் ச. அன்பு, நவம்பர் புரட்சியின் சாதனைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் தோழர் சதிஷ் குமார், தோழர். அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பு.மா.இ.மு. தோழர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இறுதியாக தோழர் அன்பழகன் நன்றியுரை கூறினார்.

சேலம் மாவட்டம் மாவட்டம் அமரம் பகுதியில் பு.மா.இ.மு. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பு.மா.இ.மு. தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு. மாநில பொதுச் செயலாளர் தோழர் ச.அன்பு அவர்கள் கொடியேற்றி நவம்பர் புரட்சியின் சாதனைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் தோழர் சதிஷ்குமார், தோழர். அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் பு.மா.இ.மு. தோழர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ரஷ்ய சோசலிச புரட்சியின் 109 ஆவது நவம்பர் புரட்சி தின விழா கடலூர் பெரியார் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.

ரஷ்ய சோசலிச புரட்சியின் 109 ஆவது நவம்பர் புரட்சி தின விழா வடலூரில் கொண்டாடப்பட்டது.

விருத்தாச்சலத்தில் நவம்பர் 7 புரட்சி கொண்டாடும் விதமாக ரஷ்ய புரட்சியை உயர்த்துப்பிடித்து முழக்கங்கள் எழுப்பி அனைவருக்கும் இனிப்பு வழங்கி நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட்டது.







