பார்ப்பன மத வெறியன் கோல்வால்கரின் முகத்திரையை கிழித்தெறிவோம்!
(ஆதாரங்களுடன்)

தினகரன் செல்லையா.

ஒரு நூல் சமூகத்தில் பாதிப்பைக் கொண்டுவருமா எனும் கேள்விக்கு வரலாறு நெடுகிலும் பதில்கள் உண்டு. அவ்வகையில் இந்திய சமூகத்தில் தீவீர இந்துத்துவக் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பிய நூல் எனில் அது ஹிந்துத்துவ வாதிகள் தங்களின் பிதாமகராகக் கருதும் கோல்வால்கர் குருஜி எழுதிய “We or Our Nationhood Defined” ஆகும். இந்த நூலை இந்துத்துவ “சாக்கா” பயிற்சிக் கூடங்களில் அடிப்படை தத்துவ நூலாகப் போதிக்கிறார்கள். இந்த நூலில் ஹிந்துக்கள் அல்லாத முஸ்லிம்,கிறிஸ்தவர் மற்றும் ஏனைய மதத்தவர்களைப் பற்றி மிக மிக மோசமான கருத்தைப் கோல்வால்கர் பதிவு செய்துள்ளார். இன்றைய சமூக அரசியல் சூழலில் இந்தக் கருத்து அதி முக்கியமாக கருதப்பட வேண்டியுள்ளது.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார்.தனது “We or Our Nationhood Defined” (நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம்) என்ற நூலில் கோல்வால்கர் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு உள்ள options பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப் போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும்.இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது’.

“We or Our Nationhood defined” – M. S. Golwalkar page 104

Emigrants have to get themselves naturally assimilated in the principal mass of population, the National Race, by adopting its culture and language and sharing in its aspirations, by losing all consciousness of their separate existence, forgetting their foreign origin. If they do not do so, they live merely as outsiders,bound by all the codes and conventions of the Nation, at the sufferance of the Nation and deserving of no special protection, far less any privilege or rights. There are only two courses open to the foreign elements, either to merge themselves in the national race and adopt its culture, or to live at its mercy so long as the national race may allow them to do so and to quit the country at the sweet will of the national race. That is the only sound view on the minorities’ problem. That is the only logical and correct solution. That alone keeps the national life healthy and undisturbed.

***************************

இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான விசயங்களைப் பேசும் இந்த நூல் முழுக்க மேலுள்ள விஷம் போன்ற கருத்துக்களே நிரம்பி உள்ளது.கோல்வால்கரை குருஜியாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் தெளிவாக plan பண்ணி தங்களின் குருவின் பாதையில் செல்வதை ஏழு வருட அரசியல் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இனிமேலாவது மதவாதிகளின் உள்நோக்கங்களையும் அவர்கள் கட்டியெழுப்பும் ஆபத்தான அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டும்.மதவாதிகளுக்கும் மனிதநேயத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை மறந்தால் அதற்கான விளைவுகளை அந்தச் சமூகம் சந்திக்க நேரும்.

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here