கோவை

அன்பார்ந்த தோழர்களே!
டெல்லியில் கடந்த 300 நாட்களுக்கு மேலாக நடந்துவருகின்ற விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் பற்றி படர்வதற்கு செப்டம்பர் 27 விவசாயிகள் அறிவித்த நாடு தழுவிய முழு அடைப்பு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் ஆகிய 4 மாநில விவசாயிகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று விவசாயிகளை இழிவு படுத்துகின்ற வகையில் மத்திய பாசிச மோடி அரசு நடந்து கொண்டுள்ளது.

அமெரிக்க எஜமானர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நடையாய் நடக்கின்ற மோடி நாட்டின் தலைநகரில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தையும் அதன் பிரதிநிதிகளையும் திரும்பிப் பார்க்கவில்லை. இது மோடியின் தனிப்பட்ட விவகாரம் அல்ல. இந்தியாவின் விவசாயத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைப்பதும், நமது உணவு தேவைக்காக அவர்களிடம் கையேந்தி நிற்பதற்கும் பொருத்தமான வகையில் விவசாயத்தை மாற்றுவதற்கு எத்தணிக்கும் கார்ப்பரேட்- காவி பாசிச மோடி கும்பல் முன்வைக்கும் மறுகாலனிய அரசியல் கொள்கையாகும். மூன்று வேளாண் சட்டங்களை திருத்தினால் மட்டும் போதும் என்ற நிலைமை மாறி விவசாயத்தை பாதுகாப்பதற்கு நாடு தழுவிய அளவில் அரசியல் எழுச்சியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள் அதனை சரியாகப் புரிந்துகொண்டு இன்று அரசியல் கிளர்ச்சியாக, அரசியல் போராட்டமாக நாடு தழுவிய முழு அடைப்பு அறிவித்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத் தீ அணையாமல் நாடுமுழுவதும் பரவுவதற்கும் விவசாயத்தை பாதுகாப்பதற்கும் பொருத்தமான புதிய ஜனநாயக அரசை நிறுவுகின்ற பாதையில் முன்னேறி செல்வதற்கான பிடிமானத்தை இந்த போராட்டம் நாடு தழுவிய உழைக்கும் மக்களுக்கும் கம்யூனிச அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளது.
சென்னை

செப்டம்பர் 27 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்
சென்னை கிண்டியில் சாலை மறியல்!

இன்று ( 27.9.2021) ஐக்கிய விவசாயிகள் முன்னணி ( skm) நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்த அடிப்படையில் சென்னை கிண்டியில் விவசாய சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் இணைந்து 500 க்கும் பேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் மக்கள்_அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.கணேசன் தலைமையில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்கள் கலந்துகொண்டநர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
வாகன ஓட்டுனர்கள் டெக்னிசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்.
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு.

நாடுதழுவிய வேலை நிறுத்தம்..!
விவசாயிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் போரட்டம் வெல்லட்டும்..!!

இன்று(27.9.2021) சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியும், மக்கள் விரோத 3 வேளாண் சட்ட திரும்பப் பெறவும், நீட் விலக்கிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது..

-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவள்ளூர்

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (27.09.2021) நாடு தழுவிய போரட்டத்தை விவசாய சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் (AIKSCC) அழைப்பை ஏற்று கும்மிடிப்பூண்டியில் ரயில் நிலைய முற்றுகை நடைபெற்றது.

விவசாயிகள் – தொழிலாளர்கள் பொதுமக்களின் – விரோத ஒன்றிய மோடி அரசே !

3 வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய் !
விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய் !
தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றிய சட்டத்தை ரத்து செய்!

மேற்கண்ட முழக்கத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரயில்‌ நிலைய முற்றுகைக்கு AIKSCC திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் தலைமை தாங்கினார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் T.J. கோவிந்தராஜன் அவர்கள் போரட்டத்தை துவங்கி வைத்தார்.

முற்றுகை போராட்டத்தில்

K.M விகந்தர்
மாநில இணைச் செயலாளர்
பு.ஜ.தொ.மு

K. அர்ஜுனன்.
மாவட்டத் தலைவர்
CITU

E . ராஜேந்திரன்.
வட்ட செயலாளர்
சி.பி.எம்

T மணி.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்
தி.மு.க.

புலியூர் ஆனந்தன்,
ஒன்றிய செயலாளர்
வி.சி.க

ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகை போரட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மாவட்டம்.
கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்கள்

ஒன்றி மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கையான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பர வேண்டும் என்ற அடிப்படையில் இன்று 27-09-2021 காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம் கலந்துக் கொண்டு மறியல் போராட்டம் நடைப் பெற்றது.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மாவட்டம்.

ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கையான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்று செப்டம்பர் 27 நாடு தழுவிய பந்த் விவசாயிகளின் அறைக்கூவலை மக்கள் அதிகாரம் தோழர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றம்பாளையம் பகுதியில் தொடர் பிரச்சாரம் செய்து பந்த் க்கு ஆதரவு திரட்டினார் அதனை ஏற்று இன்று நாட்றம்பாளையம் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு விவசாயிகளின் அழைப்பிற்கு முழு ஆதரவை அளித்தனர்.

தகவல்:
தோழர் சுரேஷ்
மக்கள் அதிகாரம்,
நாட்றம்பாளையம்.
விழுப்புரம்

இன்று ( 27.9.2021) நாடு தழுவிய பந்த் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த அடிப்படையில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ‌விவசாய சங்கம், மக்கள் அதிகாரம், Aikmks, மற்றும் Aikkms இணைந்து 150 க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் சகாபுதின் த.வி.ச தலைமையிலும் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் மக்கள் அதிகாரம் முன்னிலையில் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் AV சரவணன் Cpi மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கலியமூர்த்தி Aikscc ஆகிய தோழர்கள் துவக்கிவைத்து. ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பாகசங்க நிறுவனர் சம்பூர்ணம் மாவட்டத் தலைவர் சங்கர், செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். மேலும் கரும்பு விவசாயிகள் சங்கம் m.a. கோவிந்தராஜ், மாநில குழு உறுப்பினர் த விச லட்சுமி, Aikmks இளங்கோ, Aikkms அல்லி முத்து மாவட்ட துணைச்செயலாளர் தவிச மாசிலாமணி , வட்டார ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் அதிகாரம் ஏழுமலை, ஆகியோர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு,
விழுப்புரம் மாவட்டம்.
கடலூர்

செப், 27 நாடு தழுவிய “பாரத் பந்த்”3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி!மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை ரத்து செய்யக்கோரி! நாட்டின் பொதுச் சொத்துக்கள் விமானம் ரயில்வே பிஎஸ்என்எல் எல்ஐசி தனியாரிடம் விற்காதே!

விவசாயிகள் போராட்டம் ஆதரித்து அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் இன்று தோழர் ஜி. ஆர் ரவிச்சந்திரன் மாவட்ட தலைவர் (s.k.m ஐக்கிய விவசாயிகள் சங்கம்) அவர்கள் தலைமையில் விருதாச்சலத்தில் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பாலக்கரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைத்து கட்சியைச் சேர்ந்த தோழர்கள்:

தோழர்np.r.ஜீவானந்தம் மாநிலத் துணைத் தலைவர் (சிஐடியூ)

தோழர் ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்.

ரஞ்சித் குமார் (இந்திய தேசிய காங்கிரஸ்)

தனவேல். சிபிஐ எம் எல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை)

க.முருகன் தலைமை செயற்குழு( தமிழ் தேசிய பேரியக்கம்)

தோழர்.க.முருகன் நகர செயலாளர் ( வி.சி.க)

தோழர் .சேகர் நகர செயலாளர்( தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

  1. சௌந்தரராஜன் தலைமைக்குழு உறுப்பினர் ( மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்)

சி.இளந்திரையன் திராவிடர் கழகம் (மாநில இளைஞரணி செயலாளர்)

தோழர்S. செந்தாமரைக் கந்தன் (பொருளாளர்)மக்கள்அதிகாரம்

தோழர்.T.ராமர் (ஜனநாயக விவசாயிகள் சங்கம்)

k.முருகானந்தம்

தோழர்.S.ராஜேந்திரன் மாவட்ட அமைப்பாளர் (தமிழ் தேச மக்கள் முன்னணி)

N.S அசோகன் வட்ட செயலாளர். (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட்)

தோழர்.K.சேகர் (சிஐடியூ) வட்டகுழு

தோழர். K.மகாராஜன் (aiks) வட்ட தலைவர்

ஆகியோர். அனைத்துக்கட்சி அமைப்பு விவசாய சங்கங்கள் சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் திரளாக கலந்துகொண்டு பாசிச பாஜக அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கண்டன முழக்கங்களை ஆர்ப்பரிப்போடு எழுப்பினார்கள் என்ன ஆயிரமாயிரம் 500க்கும் மேற்பட்டோர் கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் :
தோழர் மணிவாசகம்
(வட்டார ஒருங்கிணைப்பாளர்) விருதை
தொடர்புக்கு.8870381056
மக்கள் அதிகாரம்.

சேத்தியாத்தோப்பில் அனைத்து கட்சி போராட்டம்!!

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டம்,புவனகிரி வட்டம் சேத்தியாதோப்பு நகரத்தில் இன்று 27/09/2021) காலை 11:00 மணி ராஜீவ் காந்தி காந்தி சிலை அருகில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கடும் குளிர் வெயில் பாராது 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாசிச மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்கள் ஆன மூன்று வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் இன்று சாலை மறியல்,ரயில் மறியல்,கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

சேத்தியாத்தோப்பு நகரத்திலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,திராவிடர் கழகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம்,பகுத்தறிவு மேம்பாட்டு இயக்கம் ,தோழர்.தியாகு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
தோழர்.காமராஜ்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி (மா-லெ),
தூய்மை பணியாளர் சங்கம்,
தோழர். ராஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழர். திலீபன்,டாக்டர் .பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தினர் மக்கள் அதிகார தோழர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை:

தோழர்.எ.எம் குணசேகரன்
(மாவட்ட செயலாளர்),
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

கண்டன உரை:

தோழர்.சதீஷ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்),
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர்.பேரறிவாளன்

பகுத்தறிவு மேம்பாட்டு இயக்கம்.

தோழர்.கோவி.பெரியார் தாசன்
(மாவட்ட செயலாளர்),
திராவிடர் கழகம்.

தோழர்.ஏ.ஏஸ்.ரவி (மாவட்ட துணை செயலாளர்),
மதிமுக.

தோழர்.பாலு மகேந்திரன்,(வட்டார ஒருங்கிணைப்பாளர்),மக்கள் அதிகாரம்.

தோழர் மணியரசன்
மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி.

நன்றியுரை:
தோழர்மணிகண்டன்.

தகவல்:
தோழர் பாலு மகேந்திரன்
(வட்டார ஒருங்கிணைப்பாளர்),மக்கள் அதிகாரம், புவனகிரி,
கடலூர்மாவட்டம்.
தொடர்புக்கு:
94447 50638

தலைமைக் குழு உறுப்பினர்
தோழர் பாலு தலைமையில் மக்கள் அதிகாரம் கடலூரில் சாலை மறியல்!பாசிச பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த் விவசாயி அறைகூவலை ஏற்று அனைத்து கட்சி, தொழிற்சங்கங்களும் மற்றும்
மக்கள் அதிகாரம், பொதுநல அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் மறியல் போராட்ட்த்தில் ஈடுபட்டன.
அதன் ஒரு பகுதியாக கடலூரில் ஜாம்பவான் (GRT) நான்கு வழி சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில்
தலைமைக் குழு உறுப்பினர்
தோழர் பாலு தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

தகவல்:
தோழர் பாலு
தலைமைக் குழு உறுப்பினர்
81108 15963
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை.

குறிஞ்சிப்பாடியில் சாலை மறியல் போராட்டம்

பாசிச பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த் விவசாயிகள் அறைகூவலை ஏற்று அனைத்து கட்சி, தொழிற்சங்கங்களும் மற்றும் மக்கள் அதிகாரம் பொதுநல அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

தகவல்:
தோழர் ஆனந்தி
வட்டார ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சிப்பாடி – 81108 15963
மக்கள்_அதிகாரம்
தமிழ்நாடு புதுவை

திருச்சி

லால்குடி சாலை மறியல்
அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம்!

பாசிச பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த் விவசாயி அறைகூவலை ஏற்று அனைத்து கட்சி, மற்றும் மக்கள் அதிகாரம், சிபிஐ, இடது சாரி இயக்க தோழர்களும், பொதுநல அமைப்புகளும் லால்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று 27.09.2021 நாடு தழுவிய பாரத் அறிவித்திருந்தனர். பந்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருச்சியில் இன்று காலை 10.30 மணியளவில் மெயின்காட்கேட்டில் உள்ள பூம்புகாரில் இருந்து பேரணியாக புறப்பட்டு தெப்பகுளம் முன்பு சாலை மறியலில் தோழர்கள் ஈடுபட்டனர். பேரணியில் கார்ப்பரேட் முதலாளி விவசாயி மற்றும் தொழிலாளர்களை சங்கிலியில் பிணைத்து இழுத்து வருவதுபோல் தோழர்கள் வேடமிட்டு காட்சிப்படுத்தினர். மோடி அரசை கண்டித்து முழக்கங்கள் இட்டும், பதாகைகள் ஏந்தியும், கறுப்பு பலூன்கள் ஏந்தியும், பாடல்கள் பாடியும் தோழர்கள் போராட்டத்தை சிறப்பித்தனர்.
இப்போராட்டத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்கள், ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அமைப்பு சாரா தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்ப்பட்டோரை போலிசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். மண்டபத்தில் அடைக்கப்பட்ட தோழர்களை சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் சந்தித்து சிறிது நேரம் உரை நிகழ்த்தி கைதான தோழர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறினார். ம.க.இ.க கலைக்குழு பாடகர் தோழர்.கோவன் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பாடல் பாடினார். போராட்டதில் பங்கேற்ற அமைப்புகள் மற்றும் சங்க நிர்வாகிகள் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக உரை நிகழ்த்தினர். பின்பு மாலை அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

செப்டம்பர் 27: நாடு தழுவிய பந்திற்கு ஆதரவாக மணப்பாறையில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக மக்கள் அதிகாரம், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்🚩
மணப்பாறை.
மதுரை

கம்பம் பகுதியில் சாலை மறியல்!

பாசிச பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த் விவசாயி அறைகூவலை ஏற்று அனைத்து கட்சி, தொழிற்சங்கங்களும் மற்றும்
மக்கள் அதிகாரம், பொதுநல அமைப்புகள் தமிழகம் தழுவிய சாலை மறியல்.
அதன் ஒரு பகுதியாக கம்பம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை
தஞ்சை

தஞ்சையில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல்

தஞ்சைமாவட்டத்தில் அதிகாலை செய்தியாக மைசூர் எக்ஸ்பிரஸ் கும்பகோணம் அருகில் மறிக்கப்பட்ட செய்தி வலைதளங்களிலும் தொலைக்காட்சியிலும் ஃபிளாஷ் நியூஸ் செய்தியாகவும் வெளிவந்தது.

ஒன்பது மணியளவில் பரபரப்பாக இருக்கும் தஞ்சைநகரம் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பெரும் வணிக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை.

காலை 10 மணியளவில்..

பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல்:

சாலை மறியலில் ஈடுபட்ட LPF, CITU, INTUC, AITUC, AICCTU தொழிற்சங்க முன்னணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தஞ்சை மேலவீதி காமாட்சி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொது துறைகளையும் விற்க்கும் மோடி அரசுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடு தொழிலாள தோழர்களிடம் இயல்பான முழக்கங்களாக எதிரொலித்தது.

ரயில் மறியல்:

தொழற்சங்க முன்னணியாளர்கள் கைது நடந்து கொண்டிருக்கும்போதே தஞ்சை இரயில் மறியலுக்கு சென்ற விவசாயசங்க தோழர்களை மறித்து தடுத்து நிறுத்தப்பட்டார்கள். காவல்துறை தடுப்புகளை தகர்த்து இரயில் நிலையத்திற்குள் புகுந்து சோழன் விரைவு வண்டியை மறித்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கைது செய்யப்படனர். 300 க்கும் மேற்பட்ட விவசாய, தொழிற்சங்க தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தஞ்சை- 93658 93062
மயிலாடுதுறை

அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் மயிலாடுதுறையில்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 27/9/2021 இன்று ஒன்றிய பாஜக மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் நடக்கின்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அறிவிக்கப்பட்ட பாரத்பந்தை முன்னிட்டு இன்று சீர்காழியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது!

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை), மக்கள் அதிகாரம், விவசாயிகள் சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் அனைத்து சமூக ஆர்வலர்களும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளனர்.

தகவல்.
மக்கள் அதிகாரம்
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை.
ஈரோடு

ஈரோடு பகுதியில் சாலை மறியல்!

பாசிச பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 நாடு தழுவிய பந்த் விவசாயி அறைகூவலை ஏற்று அனைத்து கட்சி, தொழிற்சங்கங்களும் மற்றும்
மக்கள் அதிகாரம் ,பொதுநல அமைப்புகள் தமிழகம் தழுவிய சாலை மறியல்.
அதன் ஒரு ஈரோடு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை
கோவை

செப்டம்பர் 27: வேளாண்‌ திருத்த சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் கோவையில் நடந்தது. இதில் ரயில் மறியல் போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தோழர் R. லோகநாதன் மற்றும் மாநில துணை தலைவர் C.திலீப் ஆகியோருடன் 37 பேர் கலந்து கொண்டனர். அதில் 27 பேர் கைதாகினர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
கோவை மாவட்டம்.
புதுச்சேரி

பத்திரிக்கை செய்தி

மத்தியில் ஆளும் BJP அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இந்திய நாட்டின் உணவு பாதுகாப்பை சீர்குலைக்கின்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென இன்றைய தினம் நடைபெற்ற ‘பாரத் பந்த்’ போராட்டம் புதுச்சேரியில் மாபெரும் வெற்றியாக நடந்தேறியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் முழுமையாக ஆதரவளித்து பஸ், லாரிகளை இயக்கவில்லை. ஆட்டோக்கள், டெம்பிள் ஓடவில்லை. வணிக நிறுவனங்கள் மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டன திரையரங்குகள் இயங்கவில்லை.

மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்து மீன்பிடிக்க செல்லவில்லை. சேதராப்பட்டு, திருபுவனை, திருவேண்டார்வோலில் தொழிற்பேட்டை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்க அமைப்புகள் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள், மாணவர் – இளைஞர் அமைப்புகளின் சார்பில் ராஜா தியேட்டர் சந்திப்பு, அண்ணா சதுக்கம், பஸ் நிலையம், இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், தவளகுப்பம், வில்லியனூர், பாகூர், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் மேற்பட்டோர் கலந்துகொண்டு கைதாகினர்.

பந்த் போராட்டத்திற்கு ஆதரவளித்த தனியார் பேருந்து சங்கங்கள், தனியார் லாரிகள் சங்கங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், வணிக வர்த்தக சங்கங்கள், சிறு கடை உரிமையாளர்கள், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு புதுச்சேரி தொழிற்சங்கங்கள், விவசாய – விவசாய தொழிலாளர் அமைப்புகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

K. சேது செல்வம்
பொதுச் செயலாளர், AITUC

G. சீனுவாசன்
பிரதேச செயலாளர், CITU

P. ஞானசேகரன்
பொதுச் செயலாளர், INTUC

S.புருஷோத்தமன்
பொதுச் செயலாளர், AICCTU

ம. செந்தில் செயலாளர், LLF

வேதா. வேணுகோபால்
செயலாளர், MLF

S. சிவகுமார்
செயலாளர், AIUTUC

K. மகேந்திரன்
பொதுச் செயலாளர், NDLF

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
புதுச்சேரி.
வேலூர்

இன்று தோழர் பகத்சிங்கின் பிறந்த நாளை வேலூர் மாவட்டம் தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பாக அதன் கிளை சங்கமான பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகாமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் “புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து உறுதி ஏற்றனர். இதை சங்க தலைவர் தோழர் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்புரை ம.க.இ.க தோழர் ராவணன் பகத்சிங் குறித்தும் வேளாண் சட்டத்திருத்தம் குறித்து சிறப்புரையாற்றினார். சங்க செயலாளர் தோழர் சிறப்புரையாற்றினார் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறுவர்கள் என பெரும்பான்மையினர் கலந்து கொண்டனர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர் மாவட்டம்.
திருவண்ணாமலை

அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம்!
மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தோழர்.பார்த்திபன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,எஸ்டிபிஐ இணைந்து ஆவூரில் சாலை மறியல்!

பாசிச பாஜகவின் மூன்று வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த் தமிழகம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 25 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அந்த வகையில் ஆவூரில் மக்கள் அதிகாரம் தலைமையில் இன்று சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்து பின்னர் மாலை விடுவித்தனர்.

தகவல்:
தோழர்.பார்த்திபன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், திருவண்ணாமலை.
பேச: 809-862-3480
நீலகிரி

இன்று 27/ 9 /2021 கோத்தகிரி பகுதியில் அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக விடப்பட்ட “அறைகூவலை”ஏற்று, மக்கள் அதிகாரம், இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ,சிஐடியூ தொழிற்சங்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம்(lpf) ,திராவிட தமிழர் கட்சி, பெண்கள் இணைப்புக் குழு போன்ற முற்போக்கு அமைப்புகள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது என தீர்மானித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் தோழர் ஆனந்தராஜ் அவர்கள் கண்டன உரையாற்றினார். சிஐடியு சங்க தோழர் மகேஷ் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார்.
மக்கள் அதிகாரம் தோழர் ரவி அவர்கள் முழக்கம் எழுப்ப பேரணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) கோத்தகிரி கிளையை, முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகைபோராட்டத்தில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
கார்ப்பரேட் நலனை, லாபத்தை பெருக்குவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டத்தை வீழ்த்துவதும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கான முதல் படி. எனவே கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தும் வரை, விவசாய சட்டத்தை திரும்பப் பெறும் வரை எமது போராட்டம் தொடரும்.

செய்தி:
மக்கள் அதிகாரம், கோத்தகிரி,
9787556161.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here