கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை!
பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது.
அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல் பா.ஜனதா கட்சியிலும் இருக்கிறார். செய்து முடித்த நாலு கோடி வேலைக்கு, மாநில அமைச்சர் 40% கமிசன் லஞ்சமாக கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் வழியாக பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் புகார் அனுப்பினார்.
தீடீரென சந்தோஷ் ”காணாமல்” போனார். பிறகு ஹோட்டலில் ”தற்கொலை” செய்துகொண்டதாக போலீசு உடலை கண்டெடுத்தது. அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்ய மறுத்தார் அமைச்சர். மக்களும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து போராடியதால் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்துள்ளார்.
2018 மாநில தேர்தலின் பொழுது, காங்கிரசை ”10% கமிசன் அரசு” என மோடி கிண்டல் செய்தார். நான்கே வருடத்தில் 40% கமிசன் அரசாக பா.ஜனதா சாதனை படைத்திருக்கிறது.
- சாக்ரடீஸ்
விரிவான செய்திகளுக்கு…
https://www.bbc.com/tamil/india-61097709