ந்தியாவில் திட்ட கமிஷன் உருவாக்கப்பட்டது பற்றி சுருக்கமாக பார்த்தோம். இந்த திட்டம் கமிஷன் மூலம் போடப்பட்ட முதலாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (1951-1956) 2069 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு என்று திட்டமிடப்பட்டது, ஆனால் அது 2,378 கோடியாக உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவின் மிகப்பெரும் அணைக்கட்டுகளான ஹிராகுட் அணை, பக்ராநங்கல் அணை, தாமோதர் அணை, கோசி அணை, சாம்பல் ஆற்றின் மீது கட்டப்பட்ட காந்திசாகர் அணை, நாகார்ஜுனா அணை மற்றும் மசஞ்சோர் அணை ஆகியவை கட்டப்பட்டன.

விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயக் கூலிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்த சூழலில் விவசாயத்தை மேம்படுத்துவதாக முன் வைக்கப்பட்ட மேற்கண்ட அணைக்கட்டு திட்டங்கள் ஏற்கனவே நில உடமையாளர்களாக இருந்த பெரும் நிலப்பிரபுக்கள், கோவில்கள், மடங்களின் மூலம் கைப்பற்றப்பட்ட நிலங்களில் தங்கு தடையற்ற விவசாயம் நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன் உப விளைவாக விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்க துவங்கியது. இந்த கால கட்டத்தில் நாட்டில் மொத்தம் 811 மில்லியன் ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதில் 312 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடந்ததாக IMF-ன் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன் பிறகு இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மாண்டமான கனரக எந்திர தொழில் ரஷ்யாவின் உதவியுடன் பிலாய் உருக்காலையும், பிரிட்டன் உதவியுடன் துர்காப்பூர் உருக்காலையும், ஜெர்மன் உதவியுடன் ரூர்கேலா உருக்காலையும், அணுசக்தி ஆற்றலை மேம்படுத்துகின்ற வகையில் ஹோமி பாபா மூலம் அணு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது.

ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்திய முதலாளிகளின் ஒரு பிரிவினர் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பிடியிலிருந்து தனது தொழில்களை விடுவித்துக் கொண்டு ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தொழில் துவங்குவதற்கு முன் வந்தனர். ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட இந்த முரண்பாடு இந்திரா காந்தியின் எமர்ஜென்சி பாசிசமாக வெளிப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஐந்தாண்டு திட்டம் கைவிடப்பட்டு இந்திராவின் 20 அம்ச திட்டமாக முன் வைக்கப்பட்டது.

எட்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தான் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கை களை முன்வைத்த LPG அறிமுகம் செய்யப்பட்டு, நாட்டின் வளங்கள் அனைத்தும் இரண்டாவது சுற்றாக சுரண்டி வழித்தெடுக்கப்பட்டது. இந்த கால கட்டம் வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கே உதவுதாக இருந்தாலும், ஒரளவு சுயசார்பும் உருவானது என்பதையும் சேர்த்தே பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு திட்டக் கமிஷன் கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டங்கள் 12 வது திட்ட கமிஷன் காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு திட்டக் கமிஷனுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய ஏற்பாட்டின் கீழ் பாசிச பாஜக பொருளாதார திட்டங்களை வரையத் துவங்கியது.

திட்டக் கமிஷன் காலகட்டத்தில் மாநிலங்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த திட்டங்கள்; அதற்கான ஒதுக்கீடுகள்; உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியாதாரம்; சொல்லிக் கொள்ளப்படும் விவசாய முன்னேற்றம் மற்றும் தொழில் துறை முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரம் போன்றவை அனைத்தும் நிதி ஆயோக் வந்த பிறகு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது.

திட்டக் கமிஷனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெயர் அளவிற்கு கலந்து கொண்டு தனது கருத்துக்களை தெரிவிப்பதற்காக குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் இருந்தது. ஆனால் நிதி ஆயோக் அமல்படுத்தப்பட்ட பிறகு மக்களுக்கு சிறிதும் தொடர்பற்ற சிந்தனைக் குழாம் மூலம் பொருளாதாரக் கொள்கை திட்டமிடப்படுகிறது. இவற்றை கேள்வி கேட்கவோ அல்லது இடை மறித்து தடுத்து நிறுத்தவோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை.

தொடர்புடையவை

2014-ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் நிதி ஆயோக் மூலமாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு பாரபட்சமாக உள்ளது என்பதும் மாநிலங்களின் தேவை, மாநிலங்கள் ஒன்றிய அரசிற்கு கொடுக்கும் வரி வருவாய் இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதும் தொடர்ச்சியாக அம்பலப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தான் ஜூலை 27, 2024 நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.

இது ஏன் எதற்காக என்பதை பார்ப்போம்.

  • செல்லப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here