நாட்டில் நடப்பது பாசிச பயங்கரவாத ஆட்சி! இல்லை என்பவர்கள் அனைவரும் பாஜகவின் கட்சி!

சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள “ரேஷன் ஜனநாயகத்தை” கூட முற்றாக ஒழித்துக் கட்டும் பணியில் இறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்,  பாஜக பயங்கரவாதிகள் கூட்டம்.

ந்தியாவில் பாசிச பயங்கரவாத ஆட்சி நடக்கிறது என்பதற்கு சான்றாக அன்றாடம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இது பாசிச ஆட்சியா? அல்லது பாசிஸ்டுகள் தலைமை தாங்கும் ஆட்சியா? என்றெல்லாம் மயிர் பிளக்கும் வாதத்தில் இறங்கி, எதிரிகளை தப்ப விடுகின்ற, அயோக்கியத்தனங்களில் ஈடுபடுவதை முதலில் நாம் முறியடிக்க வேண்டியுள்ளது.

பாசிச இந்திரா ஆட்சி செய்த போது எமர்ஜென்சி அறிவித்த 1975 “ஜூன் 26 “ஆம் தேதி என்பதை சரியாக திட்டமிட்டு, சட்டப்படி போராடுகின்றவர்களின் குரலை முடக்குகின்ற வகையில் உச்சநீதிமன்றம் ‘குஜராத் இனப்படுகொலை’ தொடர்பான வழக்கில்;, சட்டப்படி நீதிமன்றத்தை நாடியவர்கள், நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்று வலுவாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் அனைவரின் மீதும் சட்டப்படியே ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.

தீஸ்டா செடல்வாத் மற்றும் ஸ்ரீகுமார் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது! சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள “ரேஷன் ஜனநாயகத்தை” கூட முற்றாக ஒழித்துக் கட்டும் பணியில் இறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்,  பாஜக பயங்கரவாதிகள் கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் ஐந்து நபர் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை எழுதியது யார் ?என்பதைக்கூட தெரிவிக்கவில்லை. அவ்வாறு இந்த நாட்டிற்கும், சட்டத்திற்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை! என்று நீதித்துறை யோக்கிய சிகாமணிகள் நம்புகிறார்கள்.  அதே வழியில் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மோடி மீது பதியப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை . அவர் ‘கிளீன் ஷீட் ‘என்று எழுதியுள்ள தீர்ப்பில் கூட அந்த ‘தீர்ப்பின் மூலகர்த்தா ‘ ‘(author) யார் ? என்பது குறிப்பிடப்படவில்லை!

இது ஒருபுறமிருக்க “சம்யுக்தா கிசான் மோர்ச்சா “என்ற ‘ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின்’ ட்விட்டர் கணக்குகள் அவர்களுக்கு உரிய எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் முடக்கப் பட்டுள்ளது.

பெண்களின் மீது ஆணாதிக்க வக்கிரங்களையும், அடிமைத்தனத்தையும் சுமத்துகின்ற புராணங்கள், இதிகாசங்கள், கீதை உள்ளிட்ட சனாதன தர்மத்தை ஆதரிக்கின்ற நூல்கள் 70 கோடிக்கும் மேல் வெளியிட்ட, உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் இயங்குகின்ற, கீதா அச்சகம் நடத்தும் விழாவில் கலந்துகொண்டு;  ஆர் எஸ் எஸ் சேவகரான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கீதா அச்சகத்தின் பெருமைகளை புகழ்ந்து பேசுகிறார்!

நாட்டில் நடக்கின்ற அநீதிகளைப்  பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான இந்தி திரைப்படத்திலிருந்து எடுத்து பதிவு செய்த ‘ஆல்ட் நியூஸ்’  இணை இயக்குனர் ‘முகம்மது ஜூபைர்  ‘மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவர் தொடர்ந்து செய்திகளில் உள்ள உண்மைத் தன்மைகளை அம்பலப்படுத்தி வருவது ‘பொய் செய்தி பரப்புரை’ (fake news spreader) கும்பலான பாஜகவிற்கு கடும் எரிச்சலை உருவாக்கியுள்ளது!

படிக்க:

பன்மைத்துவ உணர்வை மதிக்கின்ற பசவண்ணர் உருவாக்கிய லிங்காயத்து மதத்தை பின்பற்றி கர்நாடகா மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்துகள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் உடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சமீப காலத்தில் தலித்துகள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்களுக்கு எதிராக  நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்கள், கர்நாடக மாநில மக்களிடையே இயல்பாக நிலவுகின்ற ஒற்றுமை உணர்வை சிதைக்கிறது; என்று 75க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய குழு கர்நாடக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

படிக்க:

உணர்ச்சிகரமான- பிரச்சனைக்குரிய பதிவுகள் என்று மக்கள் அதிகாரத்தின் ஊடக  முகநூல் பக்கம் 30 நாட்களுக்கு மேல் பிறருக்கு பகிர்வதை தடை விதித்து இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

மக்கள் அதிகாரத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜு மீது ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்குகள் தூசி தட்டப்பட்டு தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

படிக்க:

அரசியல் வழங்கியுள்ளதாக கூறப்படும் “ரேஷன் ஜனநாயகத்தைப்” பயன்படுத்தி போராடுகின்ற அனைவரின் மீதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் சட்டபூர்வமான வழிமுறைகளில் தொடுக்கப்படுகிறது..

இந்துராஷ்டிரா-சனாதன இந்தியாவை உருவாக்குகின்ற தனது கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராடுகிறவர்கள், கருத்து தெரிவிக்கிறவர்கள் என்று ஆர் எஸ் எஸ் சந்தேகிக்கின்ற? அனைவரின் இணைய தொடர்புகள், மொபைல் பரிவர்த்தனைகள் அனைத்தும் ‘பெகாசஸ் உளவுக் கருவி”யின் மூலம் வேவு பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்ற ‘மதச்சார்பின்மை ‘ என்ற கருத்து, பெயரளவிற்கு கூட அனுமதிக்கப்படாமல் துடைத்து எறியப்பட்டு வருகிறது.

இத்தனைக்குப் பிறகும் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று நம்ப வைக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அதீதநம்பிக்கை! கொண்டு மாயையை உருவாக்குகின்ற செயலிலும் ஈடுபடுகிறார்கள் அரைவேக்காட்டு அறிவு ஜீவிகள்!!

ஆளும்வர்க்கத்தின் பினாமி கும்பலான இவர்கள்; உருவாக்குகின்ற கருத்துக்கு , பெரும்பான்மை மக்களை பலிகடா ஆக்க துணிந்து விட்டனர்!..

நாடும், நாட்டு மக்களும் பாசிசக்கொடுங்கோன்மையின் கீழ் துன்பப்படுவதை அனுமதிக்க முடியாது!!

வீதியில் இறங்கிப் போராடுவோம்!!!

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here