திராவிட மாடல் சரியில்லை என்றால் எது சரி!

திராவிட மாடல் எனும் புத்தகத்தை விமர்சிக்கிறேன் என்று மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை மிகவும் மட்டரகமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே மக்கள் ஜனநாயகம் என்கிற இடைக்கால தீர்வைத்தான் தனது திட்டமாக வைத்துள்ளது. ஆனால் கட்டுரையாளர் திராவிடம் “இடதுசாரி ஜனரஞ்சக வாதமா” என்பதை மறுப்பதற்காக சோசலிச செயல்திட்டங்களை திராவிட இயக்கங்களிடம் தேடுகிறார்.

திராவிட இயக்கம் ஒரு நவீன முதலாளித்துவ கட்சி என்றும் பழைய நிலவுடமை சமூகத்தின் கெட்டிபட்ட தன்மையை மாற்றுவதை தனது அரசியல் திட்டமாக
வைத்து செயல்பட்டு வந்திருக்கிறது என்கிற முடிவுக்கு மார்க்சிஸ்டுகள் வர முடிந்தால் அவர்களால் எளிதாக திராவிட இயக்கங்களுடன் எளிதாக இணைந்து செயல்பட்டிருக்க முடியும். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த அரசியல் தலைமை திராவிட இயக்கத்தை தமிழ் இனவெறி சக்திகளாக முத்திரை குத்துவதற்காகவே
தமது அரசியல் அறிவை செலவழித்தனர்.

மேற்சொன்ன முடிவை நிதர்சனமாக்குவதற்காகவே முட்டிமோதி திராவிட இயக்கங்களின் அரசியல் முன்னெடுப்புகளை இனவாத முயற்சியாக பேசிவந்தனர். இன்றும் பாசிசம் துணைக்கண்ட அளவில் தலையெடுத்து திராவிட கட்சிகள் பார்ப்பனியம் என்று எதை சொன்னார்களோ அதன் அரசியல் வடிவமாகவே வந்து இந்துத்துவ தேசியமாக வந்துவிட்ட பின்னும் திராவிட இயக்கங்களின் முற்போக்கு பாத்திரத்தை அங்கீகரிக்க மறுத்து மட்டரகமான விமர்சனங்களை வைத்து என்ன சாதிக்க போகிறார்கள்.

இவர்களால் மேற்கு வங்க இடது ஆட்சியை பற்றிய இப்படியொரு விமர்சனத்தை செய்திருந்தால் ஏதாவது பிரயோஜனம் கிடைத்திருக்கலாம். முதலில் திராவிட இயக்கங்களை பற்றிய தவறான விமர்சனங்களால் தமிழக அரசியலில் இருந்து எப்படி தனிமைப்பட்டோம் என்பதை பற்றி ஆழ்ந்த சுயவிமர்சனம் செய்தால் சரியான அரசியல் திசைவழிக்கு வரலாம்.

நன்றி:
Umayan Natarajan.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here