தமிழ்நாடு கல்வித்துறையில் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கின்றது.

மருத்துவம்
பொறியியல்

 

கட்டிடக்கலை

 

ஆகிய துறைகளில் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களே இந்தியாவில் அதிகளவு சிறப்பான பல்கலைக் கழகங்களாகத் திகழ்கின்றன. இந்திய ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறையினால் ( National instituanal ranking framework) வெளியிடப்பட்ட 2021 பட்டியலிலேயே இத்தரவுகள் குறிக்கப்பட்டுள்ளன.

படங்கள் : you turn.

மூன்றாவது படம் இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் சிறப்பாகச் செயற்படும் கல்லூரிகளையும் அதிகளவில் தமிழ்நாடே கொண்டிருப்பதனைக் காட்டுகின்றது. இவ்வாறு தமிழ்நாடு மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகளில் ஏற்கனவே சிறப்பாகவுள்ள போது நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஏன்?

( பல் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் இரண்டாம் இடத்தினையே தமிழ்நாடு பிடித்துள்ளது. முகாமையில் மூன்றாமிடம்அவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று மேலாண்மை, வணிகத் துறைப் பல்கலைக் கழகங்கள் சிறு-குறு- நடுநிலைத் தொழில் முனைவோர்களை உருவாக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும், சிறு குறு நடுநிலைத் தொழில்களின் வளர்ச்சியிலேயே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தங்கியுள்ளது).

  • வி. இ.குகநாதன்.
    முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here