தமிழ் மக்கள் இசை விழா! இப்படியான விழாவை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று பல்வேறு பிரபலமான இசையமைப்பாளர்கள் மியூசிக் கான்செப்ட் நடத்துகிறார்கள். இதை பார்க்க பல்லாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கிறார்கள். அப்படியான நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களை அந்த நிமிடங்கள் வரை குஷிப்படுத்தும் அல்லது வைப்(Vibe) பண்ணும்.
ஆனால் அதனால் மக்களுக்கு என்ன பிரயோஜனம். மக்களிடம் இப்படியான இசை நிகழ்ச்சிகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் பணம் விரயம் ஆனது தான் மிச்சம்.
இசை மக்களுக்கானது இதற்கு விலை வைத்து விற்க முடியாது. இசையின் மூலமும் கலையின் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்ட வேண்டும். அப்படியான தொரு நிகழ்ச்சி தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் தமிழ் மக்கள் இசை விழா.
இசை விழாவின் வரலாற்றை அனைத்து மக்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும். தோழர் முகுந்தன் ஆரம்பகால மகஇகவில் முன்னோடியாக செயல்பட்டவர். அவர் தமிழ் மக்கள் இசை விழா நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாததன் காரணத்தையும் விளக்குகிறார்.
தோழர் முகுந்தனின் நேர்காணலை அனைவரும் பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
வேத நாகரிகத்தை துரத்தியடி!
இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்!
ஆகஸ்ட் 22, தஞ்சையில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் தமிழ் மக்கள் இசை விழாவில் கலந்துக் கொள்ளுங்கள்…
நன்றி










