பத்திரிக்கைச் செய்தி!
கடந்த காலங்களில் “போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து செயலாற்றி வந்த எமது அமைப்புகள் இப்பொழுது இந்தியாவில் தோன்றியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு ” தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கு மாறாக தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவது” என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம்.
நடக்க இருக்கும் 2026 தமிழ்நாடு- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்
- பாசிச பாஜக- அடிமை அதிமுகவை தோற்கடிப்போம்!
- மாற்றை வைத்து திமுகவை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்
- கார்ப்பரேட் காவி பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த ஜனநாயகக் கூட்டரசை அமைக்கப் போராடுவோம்!
என்ற முழக்கத்தை முன்வைத்து வருகின்ற 2026 தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
2014 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் பாஜக இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் கார்ப்பரேட் நலனுக்காக சட்டங்களை திருத்துவது கார்ப்பரேட் கொள்ளைகளை முழுமையாக அங்கீகரிப்பது மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய்களை வாரிக் கொடுப்பது என்று தேச துரோகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் பார்ப்பன வர்ணாசிரம கட்டமைப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கு சனாதன தர்மத்தை அமலாக்குவது என்று காவி பயங்கரவாதத்தையும் மக்களின் மீது திணித்து வருகிறது.
தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஊழல் என்பதை முன்வைத்து காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழக அரசுகளை ஊழல் பேர்வழிகள் என்று சித்தரித்து வந்த ஆர்எஸ்எஸ்-பாஜக லஞ்ச ஊழலை சட்டபூர்வமாக்கி கொள்ளையடிக்கும் நடைமுறை உருவாகிவிட்டது. தேர்தல் பத்திர மோசடி அதற்குச் சிறந்த உதாரணம் ஆகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் கீழ் மட்ட தலைவர்கள் முதல் மேல்மட்ட தலைவர்கள் வரை கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு உடந்தையாக நின்று பல்லாயிரம் கோடி ரூபாய்களை சட்டவிரோதமான முறையில் கொள்ளையடித்துள்ளனர் ஊழல் புரிந்துள்ளனர் என்று அம்பலமாகி நாறிக்கொண்டுள்ளது.
படிக்க:
♦ தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன் வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி?
♦ மோடி ஆட்சியை நீட்டிக்கவே இந்திய தேர்தல் ஆணையர்!
பெரும்பான்மை மக்கள் நம்பிக் கொண்டிருந்த சொல்லிக் கொள்ளப்படும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகள் தகர்த்தெறிந்து கொண்டிருக்கிறார்கள்.
சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன. அதானி, அம்பானி, அகர்வால், மிட்டல், ஸ்ரீதர் வேம்பு, சிவ்நாடார் போன்ற தேசங்கடந்த தரகுமுதலாளிகள் நலனே இந்தியநலன் என்று செயல்பட்டுவரும் கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளை தேர்தல் மூலம் மட்டுமே வீழ்த்த முடியாது. மாற்று செயல் திட்டத்தை வைத்து ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதன் மூலமே கார்பரேட்-காவி பாசிஸ்டுகளை முறியடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள், உறுதியாக செயல்படும் தனிநபர்களுடன் இணைந்து 2026 தமிழ்நாடு- புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்.
இவண்,
தோழர் லோகநாதன்
பொதுச்செயலர்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
9444442374
தோழர். கோவன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், 8903005636
தோழர் மணியரசன்
மாநில செயற்குழு உறுப்பினர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
9500792976
தோழர் அம்பேத்கர்
ஒருங்கணைப்பாளர்
விவசாயிகள் விடுதலை முன்னணி
9655587276








தேர்தல் நேரத்தில் சரியான முடிவும் – அறிவிப்பும் செய்துள்ள புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
இப்படிப்பட்ட தருணத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்குள் இதுவரை தொகுதிப் பங்கீடு எண்ணிக்கைகள் முடிவுக்கு வரப் பெறாமல் இழுத்தடித்துக் கொண்டு இருப்பது கேவலமாக உள்ளது. குறிப்பாக சிபிஐஎம், விசிக தொகுதி உடன்படிக்கைகள் இழுத்தடிக்கப்படுவது கூட்டணியின் தலைமைக்கு உகந்ததல்ல.
சிபிஐ 5 இடங்களை ஏற்றுக் கொண்டு ஒதுங்கியதும் அவமானம் தான். இன்று காவிப் பாசிஸ்டுகளை அப்புறப் படுத்தப்பட வேண்டிய சூழலில், திமுகவின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் விரோத குறைபாடுகளும்/தவறுகளும் நீடிக்கவே செய்கின்றன. அப்படி இருக்கின்ற பொழுது – காவி பாசிசிஸ்டுகளை வேரறுக்க வேண்டிய காலச் சூழல் என்பதை மட்டுமே பலரும் கணக்கிற்கொண்டு காரியங்கள் ஆற்ற வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட காலச் சூழலில் தொகுதிப் பங்கீட்டில் சற்று இங்கிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய திமுக, இவ்வளவு தூரம் கறாராக நின்று கொண்டு தனக்கான தொகுதிகளை சற்றும் குறைக்க மனம் வராமல், தோழமைக் கட்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட ஒதுக்கீடு செய்ய மறுப்பது அறம் ஆகாது. இதில் பெரிய கட்சியாக இருந்தாலும் திமுக தான் இறங்கி வர வேண்டும் என்பது எனது கருத்து.