பழைய கட்டுரை எனினும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை புரிந்து கொள்ள உதவும் என்ற அடிப்படையில் அதன் மொழிபெயர்ப்பை வாசகர்களுக்கு தருகிறோம்.

000

ந்தியாவிலும் அந்தண்டைநாடுகளான இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலுள்ள தீவிர தேசியவாத பௌத்த குழுக்களுக்கு இடையே, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு புதிய பயங்கரவாத வலையமைப்பு வேகமாக வளர்ந்து வருவதை, உலகம் கவனிக்கத் தவறிய நிலையில் ‘தி இண்டர்நேஷனல் நியூயார்க் டைம்ஸ்’ (தி இண்டர்நேஷனல் நியூயார்க் டைம்ஸ்) அக்டோபர் 2014-ல் ‘முஸ்லிம்களுக்கு எதிரான கொடிய கூட்டணிகள்’ என்ற தனது தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.

ஜூலை மாதம் தனது 79வது பிறந்தநாளில், மியான்மர் மற்றும் இலங்கையில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புகளிடம், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டுவதை நிறுத்துமாறு தலாய் லாமா வேண்டுகோள் விடுத்தார். மாறாக, பௌத்தத்தின் ‘கருவான உயிர்களிடத்தில் பரிவு’ என்பதை அவமதிக்கும் வகையில், அக்குழுக்களின் தலைவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கூட்டணியை அறிவித்தனர்.

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில், இலங்கையின் தீவிரவாத பௌத்தக் குழுவான பொதுபல சேனாவின் தலைவர் கலகொடத்தே ஞானசார, ‘சர்வதேச ரீதியில் (முஸ்லிம்களுக்கு எதிராக) கூட்டுச் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என அறிவித்தார். அம்மாநாட்டில் கெளரவ விருந்தினராக மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களைக் கொன்றுகுவித்த பௌத்தத் தீவிரவாதியான அஷின் விரட்டு பங்கேற்றார். இவரின் படத்தைத்தான் டைம் இதழ் தனது ஜூலை 1 அட்டையில் ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்று வெளியிட்டது. இலங்கை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிவில் குழுக்களின் வேண்டுகோளை புறக்கணித்து, ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த கொலைகாரனுக்கு விசாரணை வழங்கியது.

தெற்காசியாவில் “இந்து-பௌத்த அமைதி மண்டலம்” உருவாக்குவதற்காக வலதுசாரி இந்திய இந்துக் குழுவான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்குடன் (RSS) “உயர் மட்டத்தில்” தான் விவாதித்ததாக கடந்த வாரம் ஞானசார கூறினார். ஆர்எஸ்எஸ்-ன் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் அத்தகைய விவாதங்கள் எதுவும் இல்லை என்று உடனடியாக மறுத்தார். ஆனால், இலங்கையின் ‘பொதுபல சேனா’ மற்றும் ‘விராத்துவின் குழு 969’ ஆகிய அமைப்புகளுக்கு ஆதரவாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் கருத்துகளை எழுதியுள்ளார்.

மக்களிடையே வன்முறையைத் தூண்டும் இத்தகைய இஸ்லாமிய வெறுப்புக் குழுக்களை இலங்கையின் ராஜபக்சே, மியான்மரின் தெய்ன் செயின் மற்றும் இந்தியாவின் மோடி அரசாங்கங்கள் கண்டுகொள்ளாது விடுவது முட்டாள்தனம். இந்த வெறித்தனமான கூட்டணி மேலும் பரவும் முன் தடுக்கப்படவேண்டும்.

நார்வேயின் நவ நாஜி கொலைகாரனுக்கும் ஆர்எஸ்எஸ் க்குமான தொடர்பு

தெற்காசியாவில் சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்வதற்காக, தீவிரவாத பௌத்தர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் கூட்டணி அமைப்பது முதல்முறையில்லை. நார்வேயில் 77 பேரைக் கொன்றுகுவித்த நியோ-நாஜி படுகொலைகாரன் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக், இந்தியாவின் “இந்து தேசியவாதிகளை” போற்றி உலகெங்கிலும் உள்ள ஜனநாயக ஆட்சிகளை வீழ்த்துவதற்கான, உலகளாவிய போராட்டத்தில் ‘இந்து தேசியவாத’ இயக்கத்தை ஒரு முக்கிய கூட்டாளியாக அறிவித்தார். அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிக்கச் செல்வதற்கு சற்று முன்பு 1,518 பக்கங்களைக் கொண்ட ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டார். அதில் 102 பக்கங்கள் இந்தியாவின் இந்துத்துவ இயக்கத்தைப் புகழ்ந்து ‘சனாதன தர்ம இயக்கங்களுக்கும்’ பொதுவாக. ‘இந்திய தேசியவாதிகளுக்கும்’ ஆதரவாக இருந்தது.

ஐரோப்பாவின் நவ-நாஜி இயக்கங்களுக்கும் இந்தியாவின் ‘இந்து தேசியவாத’ அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டமும் இக்கொள்கை அறிக்கை வகுத்தது. “எங்கள் இலக்குகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், ஆனால் அவை ஒரே மாதிரியானவை” என்பதால் இந்த இருவரும் “ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது முடிந்தவரை ஒத்துழைப்பது அவசியம்” என்று கூறியது. ஆர்எஸ்எஸ், மற்றும் அதன் கிளைகளான பாஜக, ஈபிவிபி, மற்றும் விஎச்பி போன்ற அமைப்புகளின் நிறுவனர்களைப் பற்றி இந்த அறிக்கை சிறப்பாகக் குறிப்பிடுகிறது.

முக்கியமாக, “அனைத்து மேற்கு ஐரோப்பிய பல்-கலாச்சார அரசாங்கங்களையும் தூக்கியெறிவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதி இந்திய தேசியவாதிகளுக்கும், மற்றும் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை நாடுவதற்கும்” இராணுவ ஆதரவை உறுதிப்படுத்தியது.

இவற்றின் அடிப்படையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மதசார்பற்ற கூறுகளுக்கு எதிராக, தனது வெறுப்பு அரசியலைப் பயன்படுத்துவதற்கும், செயல்படுத்துவதற்கும் ‘ஒரு சர்வதேச பயங்கரவாத வலையமைப்பை’ உருவாக்க ஆர்எஸ்எஸ் கவனமாக பரப்பப்படுகிறது. ‘சிறுபான்மையினரை கொன்று குவிக்கும்’ அதன் குறிக்கோள் சர்வதேசமயமாக்கப்படுவது, தெற்காசிய பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகத் தீவிரமான பின்விளைவுகளை விளைவிக்கக்கூடியது.

இந்தூர் பாஜக ஐடி-செல் பொறுப்பாளர் விக்கி மிட்டல், காந்தி அல்லது கோட்சே யார்? என்பதைத் தீர்மானிக்க, “கோட்சேயின் கைத்துப்பாக்கியை விற்பனைக்கு வைத்தால் அவர் பயங்கரவாதியா? அல்லது தேசபக்தரா? என்பது தெரியும்”. காந்தியின் கொலையாளியான கோட்சேதான் இதில் வெற்றி பெறுவார் என்பதில் உறுதியாக இருந்தார்!

ஆர்எஸ்எஸ்/பிஜேபியின் உயர்மட்டத் தலைமைக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்கிறது என்று நீங்கள் நம்பினால், அது மிகவும் தவறானது. ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்துள்ள இந்து ஜனஜக்ருதி சமிதி (HJS) என்ற ஒரு முக்கிய இந்துத்துவா அமைப்பானது இந்தியாவில் ‘இந்து தேசத்தை ஸ்தாபிப்பதற்கான’ தேசிய மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஜூன் 2013-இல் கோவாவில் இதுபோன்ற மாநாடு “இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தில் இந்து ஜனஜக்ருதி சமிதி வெற்றிபெற வாழ்த்துகள்” என்ற குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடியின் வாழ்த்துச்செய்தியுடன் தொடங்கி நடைபெற்றது. இந்து ஜனஜக்ருதி சமிதியின் அவதாரமான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம் நிறுவனங்களில் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, புகழ்பெற்ற அறிவுஜீவிகளான கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் கொலைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:

இந்த மாநாட்டு மேடையில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான கே.வி. சீதாராமையா, காந்தியை “கொடூரமான சதிகாரர், படுபாவி” என்று காந்தியின் மரணத்தைக் கொண்டாடி கிருஷ்ணர் கீதையில் கூறியது போல், நல்லவர்களைப் பாதுகாப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும், நீதியை நிலைநாட்டவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன் என்றும், ஸ்ரீராமர் நாதுராம் கோட்சே வடிவத்தில் வந்து காந்தியின் வாழ்க்கையை முடித்தார் என்றும் பேசினார்.

மொழியாக்கம்: செந்தழல்

கட்டுரை மூலம்: www.newsclick.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here