சமஸ்கிருதத்தில் ஸ்தோத்ரங்களைப் பாடுவது இன்றும் கோயில்களில் வழக்கமாக உள்ளது. சமஸ்கிருத மந்திரங்களைப் போன்றே பெரும்பாலான ஸ்தோத்திரங்களின் அர்த்தமும் யாருக்கும் தெரியாது, புரியவும் புரியாது, அது பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் இல்லை.
காஞ்சி மடம் சார்பில் வெளிவந்த “ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்” இதழில் புஷ்பதந்தரின் சிவமஹிம்ன ஸ்தோத்திரம் முழுமையும் வெளிவந்துள்ளது. இணைய தளத்தில் இந்த ஸ்தோத்திரங்கள் இப்போதும் உண்டு. சிவமஹிம்ன ஸ்தோத்திரமானது, ஆதி சங்கரர் எழுதிய கனகதாரா ஸ்தோத்ரம் போன்றது. இதைத் தமிழில் மொழிபெயர்த்து பதிவுரை,கருத்துரையும் எழுதியவர் இஞ்சிக்கொல்லை சாஸ்திர ரத்னாகர ஜகதீச்வர சாஸ்திரிகள் ஆவார்.
ஸ்தோத்திரங்கள் எப்படிப்பட்டவை என்பதைப் புரியவைக்க, உதாரணத்திற்காக புஷ்பதந்தரின் சிவமஹிம்ன ஸ்தோத்திரம் நூலில் உள்ள ஒரு ஸ்தோத்திரத்தையும் அதன் கருத்துரையையும் தருகிறேன்,
ப்ரஜாநாதம் நாத ப்ரபை மபிகம் ஸ்வாம் துவிதரம் |
கதம் ரோஹித்பூதாம் ரீரமயிஷும் ருஷ்யஸ்ய வபுஷா |
தனு: பானேர் யாதம் திவமபி பைத்ராாக்குத மமும் |
த்ரஸந்தம் தேத்யாபி த்யஜதி ந ம்ருகவ்யாத
ரபஸ: || 22
கருத்துரை :-பிரஹ்மா மிக அழகு வாய்ந்த ஸந்தி என்பவளைச் சிருஷ்டித்து அவளை அனுபவிக்க எண்ணங் கொண்டார். தகப்பனார் என்பதால் அவள் இஷ்டப்படவில்லை. பலாத்காரம் பண்ண பிரஹ்மா முயன்றார். அவள் வெட்கங்கொண்டு பெண்மான் உருவம் எடுத்துக் கொண்டாள். பிரஹ்மாவும் ஆண்மான் உருவமடைந்து அவளைத் தொடர்ந்து ஓடினார். பரமேஸ்வரன் இதைப் பார்த்து “எல்லோரையும் தர்ம மார்க்கத்தில் பிரவிருத்திக்கும்படி செய்கின்றவனாயிருந்தும் வெறுக்கத்தக்கக் காரியத்தை இவர் செய்வது பெரும் பாபமானதால் இவரைச் சிக்ஷிக்க(திருத்த) வேண்டுமென்று கருதி பினாகத்தில்(சிவனின் வில்) பாணத்தைத் தொடுத்தார். அப்பாணத்தால் பிரஹ்மா துன்பத்தையும் வெட்கத்தையும் அடைந்து மிருகசீர்ஷ நக்ஷத்திரமாக மாறினார். பரமேஸ்வரனது பாணமும் திருவாதிரை நக்ஷத்திரமாக உருவெடுத்து பிரஹ்மாவின் பின்பக்கத்தில் நின்றது. இதனாலேயே இப்போதும் மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் திருவாதிரை நக்ஷத்திரமும் சேர்ந்தே இருக்கிறது.
सपत्राकृतं என்பதால் சேர்ந்திருப்பதுதான் சொல்லப்பட்டிருக்கிறதே யொழிய பாணத்தால் அடித்ததைச் சொல்லப்படவில்லை.
*******************************************
கணக்கில்லாமல் ஸ்தோத்திரங்கள் கோயில்களில் பாடப்படுகின்றன. ஆனால் யாருக்கும் அவற்றின் அர்த்தம் தெரியாது.
மேலுள்ளது போல், வைதீக நூல்களில் உள்ளவற்றை உள்ளது உள்ளபடி எழுதினாலும் வாசிக்கும் உங்களில் யாராவது கோயியில் இது போன்ற ஸ்தோத்திரங்கள் பாடப்படும்போது கேள்வியா எழுப்பப் போகிறீரகள்?! அர்த்தமா கேட்கப் போகிறீர்கள்?!தமிழில் பாடுங்கள் என்று விவாதமா செய்யப் போகிறீர்கள்?!
தவிர, சிலர் பின்னூட்டத்தில், இது சமஸ்கிருத ஸ்தோத்திரமே இல்லை,எழுதியவருக்கு சமஸ்கிருதமே தெரியாது,அச்சிட்டு வெளியிட்டவர்களுக்கும் மடத்திற்கும் தொடர்பில்லை என எழுதுவார்கள்.
ஏதோ என் கடமையை நான் செய்து கொண்டு போகிறேன், புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும். உணர்வுள்ளவர்கள் தெளிவு பெறட்டும்….மனிதம் உள்ளவர்கள் மனம் திருந்தட்டும்….
- தினகரன் செல்லையா