கியான் வாபி (ஞான வாபி) மசூதி : மறுபடி பிரச்சனை புதுப்பிக்கப்படுவதேன்?
– பேரா. முனைவர். ராம் புண்யானி

பேரா. முனைவர் ராம் புண்யானி.

ஊடகங்களில் கியான்வாபி மசூதி பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன. மிகச் சமீபத்தில் ராக்கிசிங்கும் மற்றவர்களும் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து சிருங்கார் கவுரி, அனுமான் ஆகிய கடவுளரை அன்றாடம் சடங்குகள் செய்து வழிபட அனுமதி கோரியுள்ளார்கள்.

கியான் வாபி மசூதிகளின் புறச்சுவரில் சிருங்கார் கவுரி என்ற ஒரு பெண் கடவுளின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பாப்ரி மசூதி இடிப்புக்குப் பிறகு அன்றாட வழிபாட்டுக்கு ‘பக்தர்கள்’ அங்கே வருவது நிறுத்தப்பட்டது; பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இக்கடவுளை வழிபடுவது ‘சைத்ர நவராத்திரி’ (சித்திரை நவராத்திரி) என்று அழைக்கப்படும் விழாவின் நான்காம் நாள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
இப்பிரச்சனை மீது வாரணாசி சிவில் கோர்ட்டின் நீதிபதி ரவிகுமார் திவாகர் கடந்த 26/04/22 அன்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார். அதாவது – காசி விசுவநாதர் சிருங்கார் கவுரி கோயில் மற்றும் கியான்வாபி மசூதி மற்றும் மற்ற இடங்களின் வீடியோ ஒன்றை வழக்குரைஞர்களுக்கு ஆணையர் எடுத்துத்தரவேண்டுமாம். ஆனால் 1991-லேயே நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அது என்னவென்றால், பாப்ரி மசூதி தவிர பிற எல்லா வழிபாட்டுத் தலங்களும் 15/08/47 என்ன வழிபாட்டு முறையோ அதுவே எந்த மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றப்படவேண்டும். தற்போதுள்ள முறை, தற்போதுள்ள நிலைப்படியே நிறைவேற்றவேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்கும் போது, வீடியோ எதற்காக? மதிப்புக்குரிய நீதிபதி நிலவிவரும் சட்டத்தையே மறந்துவிட்டார் போலும்.

வழக்கு மன்றத்தில் மற்றொரு வழக்கும் வந்தது. அதில் என்ன இருந்தது? உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி விசுவநாதரின் ஜோதி(ர்) லிங்கச் சிலை கியான் வாபி வளாகத்தில் உள்ளது என்பது தான் முறையீடு. மேலும் அவரது வாதம் இப்படிச் சென்றது; 1669-லேயே முகலாய மன்னர் ஒளரங்கசீப் காசி விசுவநாதர் கோயிலின் ஒரு பக்கத்தை அழித்துவிட்டார், போலவே கியான் வாபி மசூதி என்று அழைக்கப்படும் மசூதியைக் கட்டிவிட்டார். ஆகவே, கியான் வாபி மசூதியை ஆக்கிரமிக்க முசுலீம்களுக்கு உரிமையில்லை, எனவே முசுலீம்கள் மசூதி உள்ள வளாகத்திற்குள்ளே நுழைவதை அனுமதிக்கக் கூடாது.

பாஜக/ஆர்.எஸ்.எஸ் பிரச்சினை உருவாக்கும் கியான்வாபி மசூதி.

ஆனால், ஒட்டு மொத்தப் பிரச்சனையும் எதிலிருந்து கிளம்புகிறது என்று விளங்குகிறது அல்லவா? மத்தியகால வரலாறு பற்றிய (இந்து) மதவெறி விளக்கம் தான் அதற்கு அடிப்படை. அது என்ன சொல்கிறது? ஒளரங்கசீப் ஏராளமான கோயில்களை இடித்து அழித்தார். மதவெறியே அவரது அடிப்படை. இவரைப் போலவே பல முசுலீம் மன்னர்கள் ஏராளமான கோயில்களை அழித்தார்கள் என்பதும் அவர்கள் சொல்லும் கதை.
டாக்டர் பாட்டாபி சீத்தாராமையா (ஆந்திராவைச் சேர்ந்த ‘சுதந்திரப் போராட்ட’ செயல்பாட்டாளர், அரசியல் தலைவர், எழுத்தாளர் காங்கிரஸ் கட்சி வரலாற்றை எழுதியவர்) சொல்வது – ஆதாரங்கள் எதுவும் கொடுக்கப்படாத (கியான் வாபி பற்றிய) கதை. ‘சிறகுகளும் கற்களும்’ என்ற நூலில் அவர் எழுதியதாவது: “ஒளரங்கசீப் பரிவாரத்தில் ஒருவரான கட்ச் பகுதி ராணியை கோயிலில் வைத்து அவமானப்படுத்திவிட்டார்கள் என்பதற்காக அவர் அந்தக் கோயிலை இடிக்கும்படி ஆணையிட்டார். “பலரும் இவரது விளக்கத்தை ஏற்கவில்லை, இது தான் காரணமா என்பதும் உறுதி அல்ல.

மற்றொரு கதை டாக்டர். கே. என். பணிக்கர் கூறுவது. இவர் இந்திய வரலாற்று ஆசிரியர். ஒளரங்கசீப்புக்கு எதிரான கலகக்காரர்கள் கோயிலில் ஒளிந்திருந்ததால் அவர் கோயிலையே இடிக்க ஆணையிட்டார். டாக்டர். கே. என். பணிக்கர் அத்தவகவலுக்கான சரியான ஆவணத்தை, மூலாதாரத்தை மேற்கோள் காட்டவில்லை. எனவே பலரும் இதை ஏற்க மறுத்தனர். சரி, இருக்கட்டும்!
இதையெல்லாம் விடத் துல்லியமாக காமாக்ய தேவி (வட கிழக்கில் உள்ள பெரிய நகரமான கெளஹாத்தியில் உள்ள) கோயில், உஜ்ஜைனியில் உள்ள மஹங்காளி கோயில் மற்றும் பிருந்தாவனில் உள்ள கிருஷ்ணன் கோயில் ஆகியவற்றுக்கு ஒளரங்கசீப் பல நன்கொடைகள் கொடுத்தார் என்பதும், தங்க ஆபரணங்கள் கொடுத்தார் என்பதும், நிலக் கொடைகளை வழங்கினார் என்பதும் முக்கிய ஆதாரங்களாகச் சொல்லப்படுகின்றன

வேறொரு ஆதாரம் : கோல்கொண்டா நகரில் ஒரு மசூதியையே அவர் அழித்திருக்கிறார். மிக மிக முக்கியமாக, அவரது ராஜ சபையில் முசுலீம்கள் தவிர, ராஜாஜெய்சிங், ஜஸ்வந்த்சிங் போன்ற பல இந்துக்களும் அதிகாரிகளாக இருந்தனர். அவரது ஆட்சியில் அமைந்திருந்த சமூகக் கட்டமைப்பில் பல ஆயிரம் நிலப்பிரப்புக்களும், லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுமான ‘இந்துக்கள்’ இருந்தனர். நிர்வாகத்திலேயே ‘இந்து’ நிலப்பிரபுக்கள் கொண்ட முசுலீம் அரசர்கள் அவரது சமகாலத்தில் அங்கம் வகித்தனர். அவர்களில் ஒளரங்கசீப்பும் ஒருவர்.
முசுலீம் அரசர்கள் இந்துக் கோயில்களை அழித்தார்கள் என்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே; அது சுயவிருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்ட வரலாறு. வரலாற்றுத் திரைச் சீலையின் மற்ற பக்கம் – இந்து அரசர்களும் கோயில்களை அழித்தார்கள், எதற்காக? சேமிக்கப்பட்ட செல்வத்துக்காக (எ.டு : காஷ்மீரின் ராஜ ஹர்ஷ்தேவ் 11 ஆம் நூற்றாண்டில் இவ்வாறு செய்தார்) மைசூரில் உள்ள சீரங்கம் பட்டினம் கோயிலை மராத்தா படைகள் அழித்தன. (எதற்காக? திப்பு சுல்தான் மீது கொண்ட அரசியல் பகைமை காரணமாக) . எனவே, கோயில்கள் அழிக்கப்பட்டது எல்லாமே மத நோக்கத்துக்காகவே நடத்தப்பட்டன என்பது எந்த ஒரு சம்பந்தமும் இல்லாததே.
இந்தியநாடும் மக்களும் அண்மையில் சந்தித்த மிகக் கொடூரமான கிரிமினல் குற்றம் 6.12.1992 அன்று நடத்தப்பட்ட பாப்ரி மசூதி இடிப்பே. அந்தக் குற்றம் செய்யப்பட ஆரம்பித்த மொத்தப் பிரச்சாரமும் இப்படித்தான் ஆரம்பித்தது. ‘குழந்தை ராமனின்’ சிலைகள் 1949ல் ‘தெய்வீகத் தோற்றமாக’ பாப்ரி மசூதியில் தோன்றின; வலதுசாரி இந்து அமைப்புக்கள் கயிறு திரித்தது போல அது ஒன்றும் விளங்காத புதிர் அல்ல. இது குறித்து விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் “இவ்வாறு சிலைகளை மசூதிக்கு உள்ளே கொண்டு வைப்பது/நிறுவுவது கிரிமினல் குற்றம்” என்றே அறிவித்தனர்.

”ராமனுக்குக் கோயில் கட்டுவது” என்ற பிரச்சாரம் படிப்படியாகத் தீவிரமாக ஆக்கப்பட்டது. பாபர் ராமன் கோயிலை இடித்துத்தான் அங்கே மசூதியைக் கட்டினார் என்றார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களில் பல ‘இந்து மதவெறி BJP/RSS-ன் பக்கம்’ அதாவது, இந்து மதவெறியின் பக்கம் ஒருதலைப்பக்கம் சாய்வாகவே கொடுக்கப்பட்டன என்றாலும், “பாப்ரி மசூதி இருக்கும் இடத்தில் தான் ‘பகவான் ராமன்’ கோயில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை” என்று தான் தீர்ப்பு வந்தது; அது போலவே, அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்பதற்கு சார்பாளர்கள் முன்வைத்த வாதத்தையும் ஆதாரமாக நீதிமன்றம் ஏற்கவில்லை.

பாஜக/ஆர்எஸ்எஸ் பார்ப்பன இந்துமத வெறிக் குண்டர் — பயங்கரவாதப் படையால் முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்ட பாப்ரி மஸ்ஜித்.

(கொஞ்சம் கொஞ்சமாக பாப்ரி மசூதி என்று அழைக்கப்பட்ட வலாற்றுப் பூமியானது ‘பிரச்சனைக்குரிய இடம்’ என்றே சட்ட விவாதங்களிலும், பொதுப் புத்தியிலும் மாற்றப்பட்டது திட்டமிட்ட RSS/BJP தந்திரமே – மொ.பெ.ர்) ஆனால் மொத்தமாக, ‘ராமன் கோயில் பிரச்சினை’ என்ற பிரச்சாரமானது BJP/RSS-க்கு பெரிய அரசியல் அறுவடையைப் பெற்றுக் கொடுத்தது. ‘ராமன் கோயில் பிரச்சனை’யின் முதுகில் ஏறிச்சவாரி செய்து அவர்கள் தேர்தலிலும் சமூகத்திலும் தங்கள் வலிமையை அதிவேகமாகப் பெற்றார்கள்.

வரலாறு என்பது பல காரணிகளை உள்ளடக்கிய துறை. அரசர்களின் முக்கிய இலக்கு மதமல்ல, அதிகாரமே – அதன் மூலம் தங்கள் ராச்சியங்களை விரிவுப்படுத்துவது; ஏழை விவசாயிகளிடமிருந்து வரிகள் போட்டுக் கறந்து எடுத்துச் செல்வம் திரட்டுவது என்பதே நோக்கம். ஆனால், மதவெறி வரலாற்று விளக்கமோ (அறிவியல்பூர்வமான – மொ.பெ.ர்) கண்ணோட்டத்தையே சிதைக்கிறது; இந்தியாவின் வரலாற்றையே இந்து – முசுலீம் வரலாறாக, இரு பிரிவாகவே சித்தரிக்கிறது. (பாகிஸ்தானிலும் கூட வேறொரு வகையில் இத்தகைய நிகழ்ச்சி ந்டக்கிறது. அங்கே ‘இந்துக்கள்’ என்ற பிரிவினர் முசுலீம் அரசர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவே காட்டப்படுகிறார்கள்)

காந்தி தனது ‘ஹிந்த் ஸ்வராஜில்’ சித்தரிப்பதிலிருந்து மேற்குறிய (BJP/RSS) வருணிப்பு முற்றிலும் வேறானது. “இந்துக்கள் என்பவர்கள் முசுலீம்கள் என்பவர்களின் இறையாண்மையின் கீழ் நன்றாகத் தழைத்து வாழ்ந்தார்கள், அதே போல ‘இந்து’ பிராந்தியங்களில் முசுலீம்கள் தழைத்து வாழ்ந்தார்கள். அதே போல தங்களுக்கு இடையிலான சண்டை தற்கொலைக்குச் சமமானது என்று இருவருமே உணர்ந்திருந்தார்கள்; எவர் ஒருவரும் மற்றவரை ஆயுதங்கள் கொண்டு வலுவந்தமாகத் தங்கள் மதத்தை விட்டு வெளியேற்றவும் சொல்லவில்லை. எனவே, இரு கட்சிக்காரர்களும் அமைதியாக வாழவே முடிவெடுத்திருந்தார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே சண்டைகள் மறுபடி தொடங்கியது”.

நேருவும் தனது “இந்தியாவைக் கண்டறிந்தேன்” என்ற நூலில் காந்தியைப் போலவே, பலவித சமூகக் குழுக்களின் ஒன்று கலத்தல் என்பதே இந்தியப் பண்பாட்டின் ஒட்டு மொத்தக் கூட்டான உருவாக்கத்துக்குக் கொண்டு சென்றது என்றார். அதனை, இந்தியாவில் இந்து – முசுலீம் பண்பாடுகளின் சங்கமம் “கங்கா யமுனா தேஜீப்” என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இந்தியத் தேசீயவாதிகளின் இப்படிப்பட்ட சிந்தனை வழியே பார்த்தால், முசுலீம்கள் அயல்நாட்டவர்கள், அந்நியர், முசுலீம் மன்னர்கள் இந்துக்களின் கோயில்களை அழித்தார்கள், வன்முறை மூலம் மதத்தைப் பரப்பினார்கள் என்று இப்படி (சுருக்கமாக) உணர்ச்சியைத் தூண்டும் கதைகளை முன்வைத்து வெறுப்பை விதைக்கும் அடித்தளத்தைப் போட்டார்கள். முசுலீம்களுக்கு எதிரான மதக் கலவர வன்முறை புதிய வழிமுறையாக மாறியது. இது மொத்தச் சமூகமும் மத அடிப்படையில் பிரிந்து நிற்பதற்கும், மதவெறிச் சக்திகள் வலுவடைவதற்கும் வழி அமைத்தது. கியான் வாபி மசூதிப் பிரச்சினை அதே திசையில் கொண்டு செல்வதற்கான மற்றொரு முயற்சியே.
முசுலீம் அரசர்களின் செயல்கள் பற்றி இப்படி (BJP-RSS) விளக்கம் கொடுப்பது இன்று முசுலீம்களைப் பற்றிய கருத்து உருவாக்கத்துக்காகவே ஆகும். நேரு எதை கோயில்கள் என்று சொன்னாரோ அதற்கும் இந்துமதவெறிச் சக்திகளின் சித்தரிப்புக்கும் எவ்வளவோ வேறுபாடு உள்ளது..

பக்ரா நங்கல் அணைக் கட்டினைத் திறந்து வைத்த போது, நேரு, “இவை எல்லாம் புதிய இந்தியாவின் கோயில்கள்” என்று சொன்னார். இந்தப் பார்வை – புதிய கல்வி நிலையங்களைத் தொடங்குவதற்கானது, ஆய்வு நிறுவனங்களை நிறுவுவதற்கானது, தொழில்துறை, சுகாதாரத்துறை நிலையங்கள் மற்றும் புதிய இந்தியாவுக்கு என்னென்னெ தேவையோ – அப்படிப்பட்ட இடங்களை அமைப்பதற்கானது. கோயிலா, மசூதியா என்ற பிரச்சினைகளை ஓரம் தள்ளி நேரு சொன்ன தொலைநோக்கைப் பெற முயற்சிக்கவேண்டும் (அதிகாரத்துக்கும் செல்வத்துக்கும் அரசர்கள் சண்டை போட்டார்கள் என்ற வரலாற்றைத் தோண்டியெடுப்பதை விட) மத்திய கால வரலாற்றிலிருந்து சமரசம் சார்ந்த பண்பாட்டின் மூலாதா\ரத்தை அள்ளி எடுக்க முயற்சிக்கவேண்டும்.

ஆதாரம் : கவுண்டர் கரெண்ட்ஸ் (Countercurrents.org), 11/05/2022
ஆக்கம் : முனைவர் ராம் புண்யானி (இவர் ஐஐடி மும்பையில் உயிரியல் மருத்துவத் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றி டிசம்பர் 2004ல் விருப்ப ஓவ்வு பெற்றவர். மத நல்லிணக்கத்துக்கான அவர் உழைப்பின் வயது சுமார் 50. அதே ஆண்டுகளில் இந்துமத வெறிக்கு எதிராகவும் போராடிக்கொண்டிருக்கிறார். அவரது முகவரி : rampuniyani@gmail.com

தஞ்சையில் 2003ம் ஆண்டு ம.க.இ.க. நடத்திய ‘பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் (பங்கேற்ற மூன்று முக்கிய பேச்சாளர்கள் : ராம் புண்யானி, தீஸ்தா செதல்வாத், இர்ஃபான் பான் என்ஜீனியர்) பங்கேற்றார்

ஆங்கிலம் வழி தமிழில் மறு ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here