அன்பார்ந்த வாசகர்களே!
இந்தியாவில் தற்போது நிலவுகின்ற கார்ப்பரேட்- காவி பாசிச சூழலானது பல்வேறு மோசடிகளை அரங்கேற்றுவதற்கு பயன்படுகிறது.
சுதந்திரத்திற்கு முன் தனி நாடாக இருந்த காஷ்மீரை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் அவர்களுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை இன்றுவரை நேர்மையாக அமல்படுத்தவில்லை.
காஷ்மீரின் இயற்கை வளங்களையும், சுற்றுலா வருவாயையும் சுருட்டிக் கொண்ட இந்திய ஒன்றிய அரசானது அந்த மக்களை நிரந்தரமாக தனது ஆதிக்கத்தின் கீழ் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்துள்ளது.
பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையான 370 பிரிவின் கீழான உரிமையை மறுத்து காஷ்மீரை மூன்றாக துண்டாடியது.
2019 முதல் காஷ்மீர் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் அங்கிருந்த ஊடகங்கள், சமூக ஊடகங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்திய ஒன்றிய அரசின் ஆசனவாயில் இருந்து வெளியாகும் கழிவுகளையே இந்திய ஊடகங்கள் செய்திகளாக பரப்பி வருகிறது.
இந்த சூழலில் விவேக் அக்னிஹோத்ரி எடுத்து வெளியிட்டுள்ள Kashmir files திரைப்படம் காஷ்மீர் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டுவதற்கு ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச கும்பலுக்கு பயன்படுகிறது.
இந்த உண்மையை திரை கிழித்து காட்டுகிறது தோழர் மருதையன் உடன் அரண் செய் நேர்காணல் செய்த இந்த காணொளி.