நூறு பேர் கிடைத்தால் நாங்கள் இருபது லட்சம் இஸ்லாமியர்களைக் கொல்வோம் என்று பார்ப்பன பயங்கரவாதிகள் ஹரித்துவாரில் ஒன்று கூடி முழங்குகின்றனர். அப்படிப்பட்ட கொலைகாரர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளமாகத்தான் ஆர்எஸ்எஸ்-ன் ஷாகாக்கள் இருக்கின்றன. எனவே ஷாகாக்களை நடத்த விடக்கூடாது என்பதில் மனித நேயம் மிக்கவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பள்ளி மாணவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் ஆர்எஸ்எஸ்ன் ஷாகா கோவை விளாங்குறிச்சியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நட்த்தப்பட்படுவதை அறிந்த முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி, தலித்திய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாகாவை தடை செய்ய வேண்டும் என்று பள்ளியின் முன் முழக்கமிட்ட போராடிய தோழர்களை காவ்ல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. போராட்ட்த்திற்கு தாமதமாக வந்த தோழர் ஜீலியஸ் (மக்கள் அதிகாரம்) தோழர் பாலசுப்பிரமணியம் (CPI-ML) இருவரும் தனியே அந்த பள்ளியின் முன் முழக்கமிட்டனர்.
தோழர்கள் கூட்டமாக இருந்து கண்டன முழக்கமிட்டு போது பள்ளிக்குள் பதுங்கியிருந்த வானர சேனை, தோழர்கள் இருவர் மட்டும் தனியே போராடும் போது பாய்ந்து வந்து தாக்கியது. காவல் துறையின் பாதுகாப்பு தங்களுக்கு இருப்பதைக் கண்ட ஆர்எஸ்எஸ் குண்டர்கள், அங்ங்கேயே பள்ளிக்கு முன்பு நின்று கொண்டிருந்தனர்.
காவல் துறையோ அடிப்பட்ட தோழர்களை மட்டும் தங்கள் வாகனத்தில் ஏற்றி கைது செய்து சிறையில் அடைக்கும் நோக்கத்தில் காவல் நிலையம் கொண்டு சென்றது.
தாக்கியவர்களை விட்டுவிட்டு தாக்கப்பட்டவர்களை கைது செய்ய முயற்சிப்பதை கண்டித்து தோழர்கள் இருவரும் வாக்குவாதம் செய்தனர். இந்த கைதை எதிர்த்து மண்டபத்தில் இருந்த தோழர்களும் போராட்டத்தில் இறங்கினர். எனவே அந்த இரண்டு தோழர்களையும் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.
தாக்கிய ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில் போராடிய தாக்கப்பட்ட தோழர்கள் மீது அனுமதியின்றி போராடியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது அரசின் துறைகள் காவிமயமாகி வருவதை காட்டுகிறது. அதாவது அரசிடம் சம்பளம் பெரும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் ஒரு பகுதியினர் காவி பயங்கரவாதத்திற்கு ஆதரவான மனநிலையில் செயல்படுவதைக் காட்டுகிறது.
இந்த பார்ப்பன பயங்கரவாதிகளை சட்டப் போராட்டதின் மூலமாக மட்டும் வீழ்த்திட முடியாது. சமூக நீதிக் கருந்துக்கள் வேரூன்றியுள்ள பெரியாரின் மண்ணில் மதக்கலவரங்கள் வராமல் தடுக்கவேண்டுமானால் வெகு மக்கள் மனங்களில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துக்களை பரப்ப இடையராது வேலை செய்ய வேண்டும். வெகு மக்களை இந்த கும்பலுக்கு எதிராக அணிதிரட்டிப் போராட வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஊரிலும் சமூக நீதிப் பாசறை, அம்பேத்கரிய, பெரியாரிய படிப்பு வட்டம் போன்றவற்றை உருவாக்கி நடத்த வேண்டியது காலத்தின் தேவை.
பாலன்.