யில் விமானம் ராக்கெட்

கம்ப்யூட்டர் தொடங்கி
எலான்மஸ்க் அறிவித்த மனித ரோபோ வரை
மனித அறிவியலின் கண்டுபிடிப்புக்கள் ;
ஆனால்,
அத்தனைக்கும் ஆதிமூலம்ஆண்டவனாம். மனிதனைப் படைச்சதே அவன்தானாம்.
அவனே அருளும் ஆயுதபூஜையும்
அவனுக்குப் பிரியமாக
அவனே நடத்திக் கொள்ளும்
பலரகச் சடங்குகளில் ஒன்றுதானாம் !

இந்த ஆண்டு கண்எதிரே விசித்திரமாய்
” அமரர் ஊர்திக்கும் ” ( சாவுத்தேர் காருக்கும் ) ஆயுதபூஜை —
அமர்க்களப்படுத்திவிட்டார்கள் ! —
அமரருக்கா, ஊர்திக்கா, மரணத்துக்கா, எதற்குப் பூஜை ?
கேள்விகள் புத்தம் புதிதாய்ப்பிறந்து
அருவிகளாகக் கொட்டுகின்றன.

உடைத்த மண்டைகள் போலப்
பூசணிக் குவியல் ;
குங்கும ரத்தம் நகரெங்கும்
சிதறிக்கிடக்கும் குப்பைகள் எல்லாம்
தூய்மைப்பணியாளர் மீது கொட்டக் கொட்ட
வாரம் கடந்தும் குப்பை குறையவில்லை ,
அள்ளஅள்ள மாளவில்லை !

#

நாடெங்கும்
மக்களின் இதயங்களைத் தோண்டியெடுத்து
சந்தையில் தட்டில்வைத்து
கார்ப்பரேட் சாப்பாடாய்
((கார்ப்பரேட் மீல் CP – MEAL))
பரிமாறப்பட
உலகமூலதனச் சார்பான
விசுவாச ஏஜெண்டுகள்
ஆண்டுமுழுக்க 24 மணிநேரமும்
வேலை செய்கிறார்கள்;

உள்நாட்டுத் தரகு கார்ப்பரேட்டான
தேசங்கடந்த அதானி, அம்பானி,டாட்டா, அனில் அகர்வால்,
நாடார்வகையறாக்களுக்காகவே கஜானாவைக்கவிழ்க்கும்
மோடி பட்ஜெட் மூலம்
ஓய்வறியா துரோகமாய்
அவர்களின் காலம் வேகமாய்ப் பறக்கிறது.

மக்களோ நிரந்தரமாகவே
கறித்துண்டுச் சீவல் ஷாவர்மாவாய் கண்ணாடி கேஸூக்குள்
ரத்தம் பீறிடும் வறுவலாய் —
படிப்பு, வேலை, சோற்றுக்காகச் சந்தையில் —
தொங்கவிடப்படுகிறோம் ;

அதனால் ஒவ்வொரு நாளும்
குத்துயிரும் குலை உயிருமாக
அற்ப சொற்ப ஆயுளாக
நம் காலம் தள்ளாடுகிறது.

#

இந்த ஆண்டு
ஆயுதபூஜைக்கு சூப்பர் ஸ்பெஷலாய்
கர்நாடகா பெல்தங்காடி ஊரில்
விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள்
அழைப்பு கொடுத்தன :
” வீட்டில் சேர்த்து வைத்துவரும்
வாள்களும் திரிசூலங்களும்
அள்ளிக் குவித்துக் கொண்டுவந்து
ஆயுதபூஜை நடத்துவோம்! ” என்று.

வெறுப்பு அரசியலில் மோடி உக்கிரம்,
பாசிச ஆட்டம் :
குஜராத் , பிறகு உ.பி , பிறகு கர்நாடகம் என
மூன்றாம் ஆட்டமாய்த் தொடங்கி நடக்குது.

இது சாதா ஆயுதபூஜைக்கான சாதாஅழைப்புஅல்ல,
ஆயுதம் எடுக்கச்சொல்லும் ஆரம்ப அழைப்பு,
மக்களைப் பிளக்க அழைப்பு.

அன்று கிருஷ்ண பரமாத்மா
சங்கெடுத்து ஊதிய
சொந்தச் சகோதரருக்கு எதிராக
ஆயுதம் எடுக்கச் சொன்ன பழைய அழைப்பு.
மகாபாரத யுத்த அழைப்பு.

அப்போது,
போருக்கு முன்னே
ஆயுதபூஜையின் பகுதியாக
காளிக்கு அரவான் களப்பலி நடந்தது — பாண்டவருக்காக !

இன்று,
புதிய பகவத்கீதை அழைப்பு.
கோடிக்கணக்கில்
உழைப்பாளிகளைச்சுரண்டி
புதிய களப்பலி —
கார்ப்பரேட் தேவதைக்காக.
மோடிக் கடையில் பிரம்மாண்டமாக
மனிதக் கறிவிருந்தாகவே சமர்ப்பிக்கப்படுகிறது. இதன் விளைவு,
ஒவ்வொருநாளும்
உலக வங்கிகளில் பெருகும் நிதிமூலதனமும்
அதானி அம்பானி தொட்டிகளில்
நடப்பு மூலதனமுமாய்
நிரம்பிவழியுது மக்களின் சொத்து !

விநோதமான இந்த ஆயுத அழைப்பைக்
குறித்துக்கொள்ளுங்கள்.
விநாயகனைவைத்து
வன்முறைக்குச் சுழிபோட்டவர்கள்
அடுத்த திட்டமாக ஆயுதபூஜையை வைத்து
அதகளமாக்கத் துடிக்கிறார்கள்.

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுக்கு எதிரான
அவர்களது ஆயுத ஆயத்த அழைப்பு
கடுமையாகப் பிளிறும் அழைப்புகேட்கிறதா ?

நாம் தயாராகவேண்டும்
நமது பதில் அழைப்போடு.
விவேகமும் அறிவும் நிரம்பிய
கேள்வியை எழுப்புங்கள் தோழர்களே :
” நாம் தயாரா ? ”
கேள்வியை எழுப்புங்கள் மக்களே சொந்தங்களே
” நாம் தயாரா ? ”

கவனமாய்க் கேட்போம்,
நம் அழைப்பின் போர்ப்பறையில்
நமது இதயத்துடிப்பு உண்டு.
இசைலயம் உண்டு! நாதம் உண்டு !
அத்தனையும் கலந்த கூட்டிசையும் உண்டு !!
இன்றோடு கரைந்து முடிவதல்ல,
வருங்காலமும் காட்டும்
திசைதெரிந்த இசை !!

  • பீட்டர்

கூடுதல் ஆதாரம் : கட்டுரை : எஸ்.ஆர்.ஷஷாங், கவுரி லங்கேஷ் செய்திகள், நாள் : 4.10.2022.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here